Thursday, 9 September 2010 | By: Menaga Sathia

நெத்திலி கருவாடு அவியல் / nethili Karuvadu Aviyal

தே.பொருட்கள்:
நெத்திலி கருவாடு - 250 கிராம்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
சின்ன வெங்கயம் - 10
கறிவேப்பிலை - 2 கொத்து
புளி - நெல்லிக்காயளவு
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்புன்
மல்லித்தூள்-1/4 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*இடிகல்லில் முதலில் சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக உடைத்து,அதன் பின் தேங்காய்+பச்சை மிளகாய்+தூள் வகைகள்+1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து லேசாக இடித்து எடுக்கவும்.(மிக்ஸியில் செய்வதாக இருந்தால் எல்லாவற்றையும் விப்பரில் 1 அல்லது 2 முறை சுற்றி எடுக்கவும்).

* ஒரு கடாயில் கருவாடு+இடித்த மசாலா+மீதமுள்ள கருவேப்பிலை+உப்பு சேர்க்கவும்.

*இதனுடன் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி மேலும் 1/2 கப் நீர் ஊற்றி 10நிமிடம் மூடி வைக்கவும்.

*எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் கொதிக்கவிடவும். இடையிடையே கிளறி விடவும்.

*நீர் வற்றியதும் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கிளறி இறக்கவும்.

*சாம்பார்,ரசம் சாதத்துடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

புவனேஸ்வரி ராமநாதன் said...

கலக்கல்.

Shama Nagarajan said...

yummy tasty recipe

Prema said...

very innovative recipe,never heard this...thanks for sharing this calcium rich recipe...

Jaleela Kamal said...

கவி சிவாவின் கருவாட்டு அவியல் ரொம்ப மணக்குது. செய்து பார்த்துடுவோம்

Priya Suresh said...

Mouthwatering avial, very tempting..

சசிகுமார் said...

அருமை அக்கா கருவாடு வறுக்கும் போது வரும் மணம் ஆகா சொல்ல முடியவில்லை.

'பரிவை' சே.குமார் said...

கருவாட்டு அவியல் ரொம்ப மணக்குது.

கலக்கல்.

Niloufer Riyaz said...

nethili karuvadil avial migavum arumai

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ஷாமா!!

நன்றி பிரேமலதா!!

நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி சசி!!

நன்றி சகோ!!

koini said...

neththili karuvaadu aviyal superbaa irukku sashiga.........

Chitra said...

சூப்பர்! வாசனை மூக்கை துளைக்குது!

kavisiva said...

எனது குறிப்பை அழகாக செய்து வெளியிட்டதற்கு நன்றி மேனு. பார்க்கவே சாப்பிடத் தோணுது :)

Asiya Omar said...

செய்முறை புதுசாக இருக்கே மேனகா.

ஸாதிகா said...

கருவாட்டிலும் அவியலா?பேஸ்..பேஸ்..

சிநேகிதன் அக்பர் said...

கருவாடு சாப்பிட்டு எம்பூட்டு நாளாச்சு தெரியுமா?

இங்க வரை மணக்குது :)

அன்புடன் மலிக்கா said...

நாவில் நீர் ஊறுது கருவாட்டு வாசம் இங்கே வரைக்கும் வீசுது மேனகா.
சூப்பர்..

vanathy said...

நல்லா இருக்கு. நானும் செய்து பார்க்க வேண்டும்.

Akila said...

my favorite karuvadu.... bookmarked....


New Event: Dish Name Starts With B
http://akilaskitchen.blogspot.com

Regards,
Akila

ஹைஷ்126 said...

இந்த லீவில் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

வாழ்க வளமுடன்.

Menaga Sathia said...

நன்றி கொயினி!!

நன்றி சித்ரா!!

நன்றி கவி!!மிகவும் அருமையாக இருந்தது.இன்னும் மீனில் செய்தால் சூப்பராகயிருக்ம் என நினைக்கிறேன்...

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி அக்பர்!!

நன்றி மலிக்கா!!

நன்றி வானதி!!

Menaga Sathia said...

நன்றி அகிலா!!

நன்றி சகோ!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

Unknown said...

சூப்பர்

01 09 10