தே.பொருட்கள்:
உதிராக வடித்த சாதம் -1 கப்
சின்ன வெங்காயம் -10
அருநெல்லிக்காய்- 4
வேர்க்கடலை-1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு -1/4 டீஸ்பூன்
உளுத்த பருப்பு -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-2
கறிவேப்பிலை -சிறிது
கடலைப்பருப்பு -1/2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
*வெங்காயத்தை நறுக்கவும்.நெல்லிக்காயை கொட்டை நீக்கி துருவவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வேர்க்கடலையை வறுக்கவும்.
*பின் வெங்காயம்+துருவிய நெல்லிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
*நெல்லிக்காய் நன்கு வெந்த பின்(நீர் ஊற்றக்கூடாது,நெல்லிக்காய் விடும் நீரிலயே வேகும்)ஆறவைத்து உப்பு+சாதம் சேர்த்து கிளறி பரிமாறவும்.
பி.கு:
இந்த சாதம் எலுமிச்சை சாதம் போல் இருக்கும்.
30 பேர் ருசி பார்த்தவர்கள்:
super recipee akkaa
Nellikaai sadham paathathume pasikuthu, intha sadham saapitu romba naal achu, yenga ammava nabagam padutha vachitinga Menaga, avangaloda special rice ithu..
படத்துலே முழு நெல்லிக்காய் இருக்கு!!!!
அரை முழுசாயிருச்சா:-)))))
my fav rice, super delicious and yummy
சத்தான சமையல்
நல்ல ரெசிபி மேனகா!
நெல்லிக்காய் சாதம் அருமை.பெரிய நெல்லிக்காய் தானே இது?
நல்லாயிருக்கு. இதுவரை செய்ததில்லை. செய்துபார்க்கனும்.
மேனகா.,ஸ்ஸ்ஸ்..ஸ்ப்பா...எதனையும் விட்டு வைக்கமாட்டீரகள் போல் இருக்கு!அருநெல்லிக்காயில் சாதம்..பேஷ்..பேஷ்
நெல்லிக்காய் சாதம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு இருக்கு
அக்கா சத்தான சமையலை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல
அரு நெல்லி என்பது அறை நெல்லி என்று சொல்லுவோமே அதுவா!!!
தயிர் சாதம் லுக்கு இருக்கு
ஆரோக்கியமான உணவு.
ஜமால்,
நெல்லியைக் கையில் பிடிக்க முடிஞ்சா 'அறை' விடுங்க:-)))))
super recipee akkaa.
ஆரோக்கியமான சாதமாக இருக்கே
துளசி,ஏங்க அறை விடணும்..அது அரு நெல்லிக்காய்தான்..அதாவது ருசியில் அருமையான நெல்லிக்காய்...
அறிவன்,
நம்ம ஜமால்தான் அறைன்னுட்டார்:-)
நன்றி புதிய மனிதா!!
நன்றி ப்ரியா!!உங்க அம்மாவை ஞாபகபடுத்திட்டேனா,அப்புறமென்ன உடனே செய்து அசத்துங்க..
//அரை முழுசாயிருச்சா:-)))))// துளசிக்கா புரியலையே..
நன்றி கிருஷ்ணவேணி!!
நன்றி எல்கே!!
நன்றி தெய்வசுகந்தி!!
நன்றி ஆசியாக்கா!! ஆமாம் அது பெரிய நெல்லிக்காய்தான் அக்கா..
நன்றி புவனேஸ்வரி!! செய்து பாருங்கள்...
நன்றி ஸாதிகாக்கா!!
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி சசி!!
நன்றி சகோ!!//அரு நெல்லி என்பது அறை நெல்லி என்று சொல்லுவோமே அதுவா!!!// அறை நெல்லிக்காய் என்று சொல்லுவாங்களான்னு தெரியாது..ஆனா நாங்க இதை பெரிய நெல்லிகாய் அல்லது அருநெல்லிக்காய்ன்னு சொல்லுவோம் சகோ..
நன்றி செஃப்!!
துளசிக்கா ஏதோ ஜமால் அண்ணா கைதவறி டைப் செய்துட்டுருப்பார்..
நன்றி சகோ!!
நன்றி சிநேகிதி!!
தங்கள் விளக்கத்திற்க்கு நன்றி அறிவன்!!நான்கூட நாம தான் தப்பா பெயரை எழுதிட்டோம்னு நினைச்சுட்டேன்..
அச்சச்சோ.......... பெரிய நெல்லிக்காயையா அருநெல்லிக்காய்ன்னு சொல்வீங்க!!!!
நாங்க அருநெல்லிக்காய்ன்னு சொல்றது வேற வகைப்பா. சின்னதா இருக்கும். அதுக்கு பூசணிக்காயிலே இருப்பதுபோல் ரிட்ஜஸ் இருக்கும்.
Nandraaga ulladhu. Healthy too
Nice dish. Good for health
sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
very nice recipe.
ஓ,துளசிக்கா நீங்கள் சொல்வது சின்ன நெல்லிகாய் என்று நினைக்கிறேன்..அதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
நன்றி சாந்தி!!
நன்றி சுனிதா!!
நன்றி வானதி!!
ஆமாம்ப்பா. அந்த சின்ன நெல்லிக்காயைத்தான் அருநெல்லிக்காய்ன்னு சொல்வோம்.
பெயர் குழப்பத்தால் எத்தனை பின்னூட்ஸ் பாருங்க:-))))
ஓஹோ ஆமாம் துளசிக்கா பெயர் குழப்பதால் பாருங்க..ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர் போல...
Post a Comment