Saturday 20 February 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் லட்டு

நொடியில் செய்யக்கூடிய எளிதான லட்டு...

தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 3/4 கப்
முந்திரி,திராட்சை -தேவைக்கு
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
 
செய்முறை :

*ஒட்ஸை நெய்யில் வாசனை வரும் வறுக்கவும்.தனித்தனியாக ஒட்ஸையும்,சர்க்கரையும் மிக்ஸியில் பொடிக்கவும்.

*முந்திரி திராட்சை நெய்யில் வறுத்து ஒட்ஸ் மாவில் கலக்கவும்.அதனுடன் ஏலக்காய்த்தூளையும் கலந்து வைக்கவும்.

*நெய்யை லேசாக சூடு செய்து ஆறவிடவும்.இதனுடன் பொடித்த சர்க்கரையை கலக்கவும்.

*அப்போழுது சர்க்கரை லேசாக கரைய ஆரம்பிக்கும்போது ஒட்ஸை கலந்து லட்டுக்களாக பிடிக்கவும்.

பி.கு:

நார்மலாக 1 கப் ஒட்ஸ் = 1 கப் சர்க்கரைதான் சேர்ப்பாங்க. ஆனால் நான்3/4 கப் சர்க்கரை சேர்த்ததில் சரியாக இருந்தது.செய்பவர்கள் அவரவர் சுவைக்கேற்ப சர்க்கரையை சேர்க்கவும்.நெய்யுடன் சர்க்கரையை கலப்பதால் லட்டு பிடிக்க ஈஸியாக இருக்கும்.லட்டும் உடையாது.நெய்யும் அதிகம் செலவாகாது.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஜெய்லானி said...

பார்க்கும் போதே ஆசையை தூண்டுதே!!!!

Pavithra Srihari said...

looks yummy and very healthy too

Tech Shankar said...

எனக்குத் தெரிந்தது ஓட்ஸ் பாயாசம் மட்டுமே. பாலைக் கொதிக்க வைத்து, அதில் ஓட்ஸைக் கொட்டி, தேங்காய் துருவலைச் சேர்த்து, வெல்லம் சேர்த்து, ஏலக்காய் போட்டு கஞ்சியாக வந்ததும் சாப்பிட்டால் தூள். இது மாதிரி எங்கேயும் படிக்கல. நானா சும்மா அலும்புக்காக செஞ்சு பார்த்தேன். நல்லாதான் இருந்தது. இன்னும் இதன் டேஸ்ட் மறக்கல. இப்போ உங்களது இந்தக் குறிப்பைப் படிச்சுட்டேன்ல. செஞ்சு பார்த்துடுறேன். நன்றி.

Trendsetters said...

very tempting...needless to say very healthy

Unknown said...

first time here..unga blog romba nalla irukku.oats laddu looks healthy and yumm

Nithu Bala said...

very interesting.. why don't you send me few laddus?

Thenammai Lakshmanan said...

super laddu Menaka

R.Gopi said...

ஆஹா....

மேனகா... ஓட்ஸ் வச்சு, இவ்ளோ மெனு இந்த உலகத்துலயே நீங்க மட்டும் தான் சொல்லி இருக்கீங்க...

இந்த லட்டும் சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன்...

ஸாதிகா said...

இந்த லட்டை சுலபமாக செய்து விடலாமே!

Menaga Sathia said...

செய்து சாப்பிட்டு பாருங்கள்,ரொம்ப நல்லாயிருந்தது.நன்றி ஜெய்லானி!!

நன்றி பவித்ரா!!

Menaga Sathia said...

ஆமாம் ஒட்ஸ் பாயசமும் நல்லாயிருக்கும்.வெல்லம் சேர்த்ததில்லை.சர்க்கரை சேர்த்துதான் செய்திருக்கேன்.நன்றி சங்கர்!!

நன்றி Trendsetters!!

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ரம்யா!!

உங்களுக்கு இல்லாததா?தாராளமா அனுப்பி வைக்கிறேன்.நன்றி நிதுபாலா!!

Menaga Sathia said...

நன்றி தேனக்கா!!


ஒட்ஸில் இன்னும் க்நம் கற்பனைக்கேத்த மாதிரி செய்யலாம்.ரொம்ப சூப்பராக இருக்கும்.ரவா லட்டுலாம் இதனுடன் ஒப்பிட்டு பார்த்தால் தோற்று போகும்.நன்றி கோபி!!

Menaga Sathia said...

ரொம்ப எளிதில் செய்துவிடகூடிய லட்டு.நன்றி ஸாதிகா அக்கா!!

வேலன். said...

ம்கூம்....நாங்க நம்பமாட்டோம். எனக்கும் டவுசர்பாண்டிக்கும் பார்சல் செய்து அனுப்பிவையுங்கள். சாப்பிட்டுபார்த்துதான் சொல்லுவோம்..ரைட்டா...நல்ல பதிவு சகோதரி.. வாழ்க வளமுடன் வேலன்.

kavisiva said...

மேனகா ஓட்சை வைத்து என்னெல்லாம் மேஜிக் செய்யறீங்க. ஓட்சில் சர்க்கரை கலந்து இனிப்பாக சாப்பிட எனக்கு பிடிக்காது. ஆனால் இது ரொம்ப பிடிச்சிருந்தது. நெய் அளவை மட்டும் கொஞ்சம் குறைத்து லேசாக பால் தெளித்து உருண்டைகளாக்கினேன். ரொம்ப நல்லா இருந்தது.

அண்ணாமலையான் said...

ரொம்ப சத்தான லட்டு போல

Menaga Sathia said...

//ம்கூம்....நாங்க நம்பமாட்டோம். எனக்கும் டவுசர்பாண்டிக்கும் பார்சல் செய்து அனுப்பிவையுங்கள். சாப்பிட்டுபார்த்துதான் சொல்லுவோம்..ரைட்டா...நல்ல பதிவு சகோதரி.. வாழ்க வளமுடன் வேலன்// இப்பவே பார்சல் உங்க 2பேருக்கும் சேர்த்தே அனுப்பியாச்சு அண்ணா.எப்படியிருந்ததுன்னு சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள்.நன்றி அண்ணா!!

Menaga Sathia said...

ஆஹா கவி செய்து பார்த்திங்களா?பிடித்திருந்ததா.நேற்று தான் இந்த லட்டை செய்து பார்த்தேன்.ரொம்ப நல்லாயிருந்தது.அப்பவே காலியாயிடுச்சு.பால் தெளித்து செய்வதும் சுவை நல்லாயிருக்கும் ஆனா உடனே பயன்படுத்திடனும்.நன்றி கவி செய்து பார்த்து பின்னுட்டமிட்டதிற்க்கு...

Menaga Sathia said...

ஆமாம் ரொம்பவும் சத்தான லட்டு.நன்றி சகோ!!

M.S.R. கோபிநாத் said...

நல்ல ரெசிப்பி மேனகா

Priya Suresh said...

Adada ithu supera irruke, oatsla naan innum laddoo than seiyala, athaiyum neegha vidala pola irruke..kalakuringa Menaga..

Menaga Sathia said...

நன்றி கோபி அண்ணா!!

நீங்கள் மட்டும் என்ன ப்ரியா ஒட்ஸ்ல வெரைட்டியா நிறைய செய்து அசத்திருக்கிங்க.உங்க அனைத்து ஒட்ஸ் குறிப்புகளும் சூப்பர்.நன்றி ப்ரியா!!

Kanchana Radhakrishnan said...

Oats luddu looks yummy

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

Vijiskitchencreations said...

வாவ் மேனகா லட்டு ரொம்ப நல்லா இருக்கு. ஒட்ஸில் செய்து அச்த்திட்டிங்க. என் மகளுக்கு லட்டு என்றால் ரொம்ப பிடிக்கும் அடுத்த தடவை செய்துட வேண்டியது தான்.

Menaga Sathia said...

இந்த சத்தான லட்டை மகளுக்கு செய்து கொடுங்கள்.ரொம்ப நல்லாயிருக்கும்.நன்றி விஜி!!

01 09 10