Sunday, 21 February 2010 | By: Menaga sathia

லெமன் கேக்

தே.பொருட்கள்:

முட்டை - 4
சர்க்கரை - 130 கிராம்
உருக்கிய வெண்ணெய் - 80 கிராம்
ஆல் பர்பஸ் மாவு - 120 கிராம்
பேக்கிங் பவுடர் - 1/2 பாக்கெட்
எலுமிச்சை பழம் - 1
துருவிய எலுமிச்சைத் தோல் - 1/2 டேபிள்ஸ்பூன்
 
செய்முறை :

*முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருக்களை தனியாக பிரிக்கவும்.

*வெள்ளைக்கருவை நன்கு நுரைவரும் வரை பீட் செய்யவும்.எலுமிச்சை பழத்தில் சாறு பிழியவும்.

*மஞ்சள் கருவுடன் சர்க்கரை சேர்த்து,சர்க்கரை கரையும் வரை பீட் செய்து அதனுடன் வெண்ணெய்+பேக்கிங் சோடா+எலுமிச்சை சாறு+மாவு+துருவிய எலுமிச்சைத் தோல் அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்றாக அடிக்கவும்.

*இதனுடன் வெள்ளைக் கருவை கலந்து கேக் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி கலவையை ஊற்றவும்.
*அவனை 180 டிகிரிக்கு முற்சூடு செய்து 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

This post goes directly to Hearts for st- valentines - day hosted by Priya http://priyaeasyntastyrecipes.blogspot.com/2010/02/announcing-hearts-for-st-valentines-day.html

30 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஹுஸைனம்மா said...

//பேக்கிங் பவுடர் - 1/2 பாக்கெட்//

இது எத்தனை கிராம் (அ) டீஸ்பூன் வரும் மேனகா?

நல்ல பிரசண்டேஷன்.

அண்ணாமலையான் said...

நல்ல சுவையான லெமன் கேக் கொடுத்ததுக்கு நன்றி

geetha said...

மேனு!
எப்பிடி இப்பிடி எளிமையான குறிப்புகளாய் கொடுத்து அசத்தறீங்க.
ஆமா, எனக்கு ஒரு சின்ன சந்தேகம், இந்த ப்ளாக் ஆரம்பிச்சதுக்கு அப்பறம் அதிக வெயிட் போட்டது நீங்களா? அண்ணனா??
கேக் ரொம்ப வடிவமாய் இருக்கு. பேக்கிங் பவுடர் அளவுத்தான் கொஞ்சம் குழப்புது! அரை பாக்கெட் என்பது எத்தனை கிராம்?

Mrs.Menagasathia said...

1 பாக்கெட் பேக்கிங் பவுடர் 11 கிராம் என்பது 1 டேபிள்ஸ்பூன் அளவுதான் இருக்கும்.அதில் பாதி 1/2 டேபிள்ஸ்பூன் போட்டேன்.கருத்துக்கு நன்றி ஹூசைனம்மா!!

Mrs.Menagasathia said...

நன்றி சகோ!!

Mrs.Menagasathia said...

//ஆமா, எனக்கு ஒரு சின்ன சந்தேகம், இந்த ப்ளாக் ஆரம்பிச்சதுக்கு அப்பறம் அதிக வெயிட் போட்டது நீங்களா? அண்ணனா??// ஹி..ஹி.. இப்ப 2 பேருமே எடை குறைந்துவிட்டோம்.இது சும்மா எப்பவாட்டும் ஆசைப்படும் போது செய்து சாப்பிடுவது.
//மேனு!
எப்பிடி இப்பிடி எளிமையான குறிப்புகளாய் கொடுத்து அசத்தறீங்க.
//நான் வீட்டில் என்ன சமையல் செய்கிறனோ அது நன்றாகயிருந்தால் மட்டுமே குறிப்பு போடுவேன்.
பேக்கிங் பவுடர் அளவுத்தான் கொஞ்சம் குழப்புது! அரை பாக்கெட் என்பது எத்தனை கிராம்?//
1 பாக்கெட் பேக்கிங் பவுடர் 11 கிராம் என்பது 1 டேபிள்ஸ்பூன் அளவுதான் இருக்கும்.அதில் பாதி 1/2 டேபிள்ஸ்பூன் போட்டேன்.5.5 கிராம் அளவு கீதா.இந்த கேக் ரொம்ப நல்லாயிருந்தது லெமன் வாசனையோடு.எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.செய்து பாருங்கள்.நன்றி கீதா!!

//

வேலன். said...

இன்னும் லட்டே சாப்பிட்டு முடிக்கவில்லை. அதற்குள் கேக்கா...ரைட்ரைட்...பதிவு அருமை. அதை விட புகைப்படம் அருமை. வாழ்க் வளமுடன் வேலன்.

சிநேகிதி said...

மேனகா எலுமிச்சை தோல் கட்டாயமாக சேர்க்கனுமா?
கேக் அழகாக வந்திருக்கு.. இனி ஊரில் போய்தான் செய்யனும்..

Priya said...

Lemon cake looks superb Menaga..yet to make out lemon cake..

asiya omar said...

கேக் அப்படியே எடுத்து சாப்பிடனும் போல இருக்கு.நான் ருசி பார்த்திட்டேன்.சூப்பர்.

Mrs.Menagasathia said...

லட்டு சாப்பிட்டு முடித்ததும் கேக்கை சாப்பிட்டு பாருங்கள்.நன்றி அண்ணா!!

Mrs.Menagasathia said...

ஆமாம் பாயிஷா எலுமிச்சை தோல் கட்டாயம் சேர்க்கனும் அப்போதான் எசன்ஸ் சேர்த்த வாசனை கிடைக்கும்.நீங்கள் வேற எசன்ஸ் சேர்த்தால் இந்த கேக்கின் சுவை மாறிடும்.ஊரில் செய்து பாருங்கள்.நன்றி பாயிஷா!!

Mrs.Menagasathia said...

நன்றி ப்ரியா!!

கேக் சாப்பிட்டு பார்த்தீங்களா.நன்றாக இருந்ததில் சந்தோஷம்.நன்றி ஆசியாக்கா!!

Trendsetters said...

tasty cake ..will try it soon

Deivasuganthi said...

சூப்பர் மேனகா!
எப்படி மேனகா ஒரு நாளைக்கு 2 பதிவு போட நேரம் கிடைக்குது. இதே மாதிரி ஆரஞ்சு தோல் சேர்த்து செய்யனும்னு ரொம்ப நாளா நெனச்சுட்டு இருக்கேன்.

டவுசர் பாண்டி said...

இது இன்னாது பாக்கிங் பவுடரு இன்னு , பிரியல ? எனுக்கு இதப் பத்தி தெரியாது , யார்னா இந்த கேக்கு சுட்டு குத்தா துன்னலாம் !!

லெமன் சுவையோட கேக்கு இருந்தா நல்லா இருக்குமே . யார் ஊட்டுல செயராங்கோ இன்னு பாத்துட வேண்டியது தான் .

ஹலோ யாருப்பா , இத செஞ்சது குடுங்கோ துன்னு பாத்து
சொல்றேன் !!

sarusriraj said...

கேக் ரெசிபி சூப்பர் மேனகா , உங்கள் ரெசிபி எல்லாம் செய்து பார்க்கவே வீட்ல அவன் வாங்கி கொடுக்க சொல்லி இருக்குறேன் .

ஜெகநாதன் said...

கேக்காமலேயே​கேக்​கொடுத்திருக்கீங்க!
நல்லாயிருக்கு!!

சசிகுமார் said...

படத்தை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல உள்ளது. மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதி உள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia said...

செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி Trendsetters!!

நேரம்கிடைத்தால் 2 பதிவு போடுகிறேன்.
ஆரஞ்சு கேக்கும் ரொம்ப நல்லாயிருக்கும்.அதையும் டிரை செய்து பார்க்கனும்.நன்றி சுகந்தி!!

Mrs.Menagasathia said...

இந்த கேக்கை செஞ்சவங்க அண்ணாத்தேக்கும் பார்சல் பண்ணுங்க.பாண்டியண்ணே பாக்கிங் பவுடர்ன்னா சோடா மாவு.நன்றி அண்ணாத்தே!!

அவன் வாங்கியதும் செய்து பாருங்கள்.அவன் வாங்கும் போது கன்வெக்‌ஷனல் அவனா பார்த்து வாங்குங்க.அதுல தான் கேக்லாம் செய்ய முடியும்.நன்றி சாரு அக்கா!!

Mrs.Menagasathia said...

நன்றி சகோ!!


வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சசிகுமார்!!

Porkodi (பொற்கொடி) said...

lemon flavorla cake nenakave nalla irukku.. :-) pinringa menaga, romba creative ana aalu neenga!

thenammailakshmanan said...

லெமன் கேக் பார்க்கவே அழகா அருமையா இருக்குடா மேனகா ரொம்ப அசத்தல்

Padma said...

Nice cake and very cute shape.

Mrs.Menagasathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பொற்கொடி!!


நன்றி தேனக்கா!!

நன்றி பத்மா!!

Jaleela said...

ரொம்ப ஈசியா சிம்பிளாக சொல்லி கொடுத்து இருக்கீங்கள்

suvaiyaana suvai said...

Looks yummy and tempting!

Mrs.Menagasathia said...

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி சுஸ்ரீ!!

மகி said...

Nice Lemon cake..yum!!

01 09 10