Tuesday 9 November 2010 | By: Menaga Sathia

சீனி அதிரசம்

தே.பொருட்கள்:
பச்சரிசி மாவு - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
பால் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
என்ணெய் - பொரிக்க

செய்முறை:
*பச்சரிசி மாவில் ஏலக்காய்த்தூளை கலந்து வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு முழ்குமளவு நீர் வைத்து கொதிக்கவைக்கவும்.கொதிக்க ஆரம்பித்ததும் பாலை ஊற்றவும்.

*சிறிது நேரத்தில் பொங்கும் போது மேலோடு அழுக்கை எடுக்கவும்.

*பின் சிறிது கிண்ணத்தில் நீர் வைத்து சர்க்கரையை அதில் விட்டு பார்த்தால் உருண்டையாக நிற்கும்.

*அப்போழுது பாகை அடுப்பிலிருந்து இறக்கி மாவை கொஞ்சகொஞ்சமாக போட்டு கிளறி நெய் கலந்து வைக்கவும்.
*மறுநாள் ஒரு கவரில் எண்ணெய் தடவி சிறு உருண்டையாக எடுத்து தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பி.கு:
*பச்சரிசி மாவு என்பது அரிசியை ஊறவைத்து நீரில்லாமல் வடிகட்டி நிழலில் உலர்த்தி மிக்ஸியில் மாவாக்கவும்.

*மிகவும் நைசாக இல்லாமலும்,கொரகொரப்பாக இல்லாமலும் இருக்கனும்.
*நான் குறிப்பிட்டிருக்கும் 2 கப் பச்சரிசி மாவு ஊறவைத்து அரைத்த மாவைதான் குறிப்பிட்டுள்ளேன்.

*மாவை எண்ணெயில் பொரிக்கும் போது தடிமனாக இல்லாமலும்,மெல்லியதாக இல்லாமலும் தட்டவும்.

*மாவு தளர்த்தியாக இருந்தால் மீண்டும் அரிசியை ஊறவைத்து அரைத்து போட்டு கிளறி வைக்கவும்.

*மாவை கிளறி வைத்து உடனே சுடுவதை விட 2 நாள் வைத்திருந்து சுட நல்லாயிருக்கும்.

*இந்த அளவில் 7 அதிரசங்கள் வரும்.

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

சௌந்தர் said...

எங்க அம்மா செய்கிற சீனி அதிரசம் கட்டி ஆகிடுதே அப்படி தான் வருமா..?

எல் கே said...

பகிர்வுக்கு நன்றி

Jaleela Kamal said...

super menaga

ithu ippadi thaan kaddiyaakuthu
athaRu suudaana paaththiram meel siRithu neeram vaiththu piRaku saappidanum

தெய்வசுகந்தி said...

சர்க்கரையில் நான் செஞ்சதேயில்லை. பார்க்கவே நல்லா இருக்குது மேனகா!

ராமலக்ஷ்மி said...

சீனியில் அதிரசம் புதுமை. குறிப்புக்கு நன்றி மேனகா.

Chitra said...

நல்லா இருக்குதுங்க!

Malini's Signature said...

எப்படி மேனகா இவ்வளவு பதிவு உங்களா போடமுடியுதோ????...கிரேட்.

சீனி அதிரசம் செய்யது இல்லை ..என் அண்ணாவுக்கு பிடித்தது..படம் பார்க்க ரொம்ப அருமை.

புவனேஸ்வரி ராமநாதன் said...

சீனி அதிரசம் இதுவரைக்கும் செய்ததில்லை. பார்க்கவே சூப்பரா இருக்கு. நன்றி.

Pavithra Elangovan said...

I love it..my fav one too..looks so delicious.

Menaga Sathia said...

சௌந்தர் அதிரசத்திற்க்கு பாகுபதம் தவறிசுச்சுன்னா அப்படிதான் இருக்கும்.பதம் ரொம்ப முக்கியம்..

நன்றி எல்கே!!

நன்றி ஜலிலாக்கா!!சூடான பாத்திரத்தின் மீது எதற்க்கு வைக்கனும்..புரியவில்லையே??

நன்றி தெய்வசுகந்தி!! எனக்கு வெல்ல அதிரசத்தை விட சீனி அதிரசம்தான் பிடிக்கும்...

Menaga Sathia said...

நன்றி ராமலஷ்மி அக்கா!!

நன்றி சித்ரா!!

நன்றி ஹர்ஷினி அம்மா!! செய்து பாருங்க,எனக்கு இதுதான் பிடிக்கும்..

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி பவித்ரா!!

San said...

I love this adirasam a lot,my fav in my childhood days (there were days i would crave for it :) )

Looks so wonderful menaga.

http://sanscurryhouse.blogspot.com

Mahi said...

அதிரசம் சூப்பரா இருக்கு!

Gayathri Kumar said...

Adhirasam using sugar is new to me. Looks delicious..

Kanchana Radhakrishnan said...

சீனி அதிரசம் செய்ததில்லை.super.

Kurinji said...

hmm mouthwatering here Menaga.

Unknown said...

சீனி அதிரசம் புதுசாக இருக்கு

பார்க்க ரொம்ப நல்லா இருக்கு மேனகா

ஸாதிகா said...

சர்க்கரையில் அதிரசம் செய்தால் வித்தியாசமாக இருக்கும்

சசிகுமார் said...

தேங்க்ஸ்

'பரிவை' சே.குமார் said...

சீனியில் அதிரசம் புதுமை.

Priya Suresh said...

Woww Superaa irruku adhirasam, naan rendu yedukalama??..

Menaga Sathia said...

நன்றி சான்!!

நன்றி சாரா!!

நன்றி மகி!!

நன்றி காயத்ரி!!

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

நன்றி குறிஞ்சி!!

நன்றி சிநேகிதி!!

நன்றி ஸாதிகாக்கா!!

Menaga Sathia said...

நன்றி சசி!!

நன்றி சகோ!!

நன்றி ப்ரியா!! தாராளமா எடுத்துக்குங்க...

vanathy said...

சூப்பரா இருக்கு.

01 09 10