Tuesday 6 April 2010 | By: Menaga Sathia

இறால் பிரியாணி /Prawn Biryani

தே.பொருட்கள்:

சுத்தம் செய்த இறால் - 1/2 கிலோ
பாஸ்மதி - 4 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் - 2 பெரியது
அரிந்த தக்காளி - 2 பெரியது
கீறிய பச்சை மிளகாய் - 20
தயிர் - 125 கிராம்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிது
பொடியாக அரிந்த புதினா,கொத்தமல்லி - தலா 1/2 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2

செய்முறை :

*இறாலில் சிறிது உப்பு+தயிர் சேர்த்து ஊறவைக்கவும்.அரிசியை கழுவவும்.

*குக்கரில் சிறிது நெய் விட்டு சிறிது வெங்காயம்+2 கீறிய பச்சை மிளகாய் +அரிசி சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்.

*மீதமிருக்கும் நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய்+தக்காளி+மஞ்சள்தூள்+புதினா கொத்தமல்லி+இறால் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கிய பின் உப்பு சேர்த்து நன்கு வதக்கிய அரிசி+6 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வைத்து எடுக்கவும்.

* வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

பி.கு:
அவரவர் காரத்திற்கேற்ப பச்சை மிளகாயை சேர்க்கவும்.

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

Chitra said...

எளிய செய்முறை. நிச்சயம் செய்து பார்க்கிறேன். Thank you for the recipe.

பனித்துளி சங்கர் said...

ஆஹா அருமை !
இப்போதைக்கு இங்கு இறால் கிடைப்பதில்லை . இந்தியா வந்தால்தான் அமாவை செய்ய சொல்லவேண்டும் . சிறந்த செய்முறை விளக்கம் . பகிர்வுக்கு நன்றி !

Unknown said...

aaahaa suda suda iraal biriyaniyai oru pidi pidikkanum pola,...superbnga...eppadinga seyyureenga...thanks menaga.

Asiya Omar said...

பார்க்க அருமையாக இருக்கு,அந்த இறாலை எடுத்து சாப்பிட்டாச்சு.

மன்னார்குடி said...

அருமை.

Shama Nagarajan said...

delicious biriyani

Cool Lassi(e) said...

A very tempting biryani!

S.sampath kumar said...

Nice post!

Sarah Naveen said...

that looks so yummy!!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி சங்கர்!!

நன்றி கினோ!!

நன்றி ஆசியா அக்கா!!

நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!

நன்றி கூல் லஸ்ஸி!!

நன்றி சம்பத்!!

நன்றி சாரா!!

vanathy said...

Very nice presentation. Looking YUMMY too.

பித்தனின் வாக்கு said...

ஓகே ஆஜர். ஆஜர். ஆஜர்.

Jaleela Kamal said...

மிளகாய்தூள் காரமில்லாமல் பச்சமிளகாய் கரத்திலும் நல்ல இருக்கு என்ன்ன இது பிரியான் வாரமா?
.

geetha said...

இறால் பிரியாணி இதுவரை செய்ததில்லை. உங்க முறை ரொம்ப எளிமையாய் தெரியுது. க்ளீனிங் எனக்கு கஷ்டமான வேலையாய் தோணுவதால் அதிகம் செய்வதில்லை.
உங்க இறால் ரெஸிப்பியையும் இப்பதான் படிச்சேன். முதல்ல அதனை ட்ரை பண்ணி பார்க்கனும்.
உங்க அண்ணனுக்கும் விக்னேஷிற்கும் ரொம்ப பிடிக்கும்.

Ahamed irshad said...

இறால் படத்தை போட்டு பசியை உண்டு பண்ணிட்டீங்க.

அருமை..

சசிகுமார் said...

ஆகா பிரியாணி, சூப்பர் அக்கா நீங்கள் சமைத்து பார்த்து விட்டு பதிவு எழுதுகிறீர்களா,
அப்படின்னா தினமும் புது புது வெரைட்டியா உங்க வீட்டில்

மின்மினி RS said...

அருமையான டேஸ்ட்.., உங்க வீட்டுக்கு வந்தா ஒருபிடி பிடிக்கலாம்போல‌.

Priya Suresh said...

SUperb delicious prawn briyani..just love it..

ஹுஸைனம்மா said...

சிம்பிள் & ஈஸி ரெஸிப்பி.

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி சகோ!!

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி கீதா!! செய்வது ரொம்ப ஈசிதான்,இனி செய்து அசத்துங்க....

Menaga Sathia said...

நன்றி அஹமது!!

ஆமாம் சசி நான் செய்யும் குறிப்பு எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே ப்ளாக்கில் போடுவேன்.இதெல்லாம் பழைய குறிப்புகள்.இப்பதான் போஸ்ட் செய்ய நேரம் கிடைத்தது.நன்றி சசி!!

தாராளமா எங்க வீட்டுக்கு வாங்க ஒரு பிடி பிடிக்கலாம்.நன்றி மின்மினி!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி ஹூசைனம்மா!!

நித்தி said...

நல்ல பதிவு...எனக்கு பிடித்த பிரியாணிவகையில் இதுவும் ஒன்று.....

பகிர்ந்தமைக்கு நன்றி!!!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

ஸாதிகா said...

மேனகா எறா பிரியாணியை இத்தனை சுலபமாக கற்றுக்கொடுத்து விட்டீர்கள்!நன்றி.

Menaga Sathia said...

நன்றி ஸாதிகா அக்கா!!

Priya said...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பிரியாணி இது!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

01 09 10