Monday 26 April 2010 | By: Menaga Sathia

ஒலையாப்பம்(ஸ்வீட் இட்லி) / கறுப்பு இட்லி | Olaiyappam | Sweet Idly | Karuppu Idly | Idly Recipes

தே.பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
புழுங்கலரிசி - 1 கப்
ஜவ்வரிசி - 1 டேபிள்ஸ்பூன்
சாதம் - 1/4 கப்
தேங்காய் உடைத்த நீர் - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 +1/4கப்
வெல்லம் - 1/2 கப்
பாசிபருப்பு - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

*அரிசி வகைகள்+ஜவ்வரிசி இவைகளை 2 மணிநேரம் ஊறவைத்து சாதம்+தேங்காய் உடைத்த நீர்+தேங்காய்த்துறுவல் சேர்த்து நன்கு மைய கெட்டியாக அரைக்கவும்.

*மாவை உப்பு சேர்த்து கரைத்து 8 மணிநேஅர்ம் புளிக்கவிடவும்.
*மாவை உபயோகப்படுத்தும் நேரத்தில் பாசிப்பருப்பை வெறும் கடாயில் லேசாக வறுத்து வைக்கவும்.

*வெல்லத்தை சிறிது நீர் விட்டு காய்ச்சி மண்ணில்லாமல் வடிகட்டி புளித்த மாவில் கலக்கவும்.ஏலக்காய்த்தூளை மாவில் கலக்கவும்.

*இட்லித்தட்டில் ஒரு கரண்டி மாவை ஊற்றி அதன்மேல் வறுத்த பாசிப்பருப்பு+தேங்காய்துறுவல் சேர்க்கவும்.இப்படியே அனைத்தையும் செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

Sending this recipe CWS - Cardamon seeds hosted by Priya

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

kamalabhoopathy said...

Very different one looking nice and delicious.

நட்புடன் ஜமால் said...

எனக்கு இனிப்பு பிடிக்காது வீட்டில் சொல்லி விடுகிறேன் ...

Nithu Bala said...

Dear Menaka, I love this idly..infact I make sweet idly often but bit different..will try this soon..thanks for sharing:-)

சாருஸ்ரீராஜ் said...

புது விதமான ரெசிபி ரொம்ப நல்லா இருக்கு மேனகா

Asiya Omar said...

மேனு,வெரைட்டியாக கொடுத்து அசத்துறீங்க.வழக்கம் போல இதுவும் அருமையாக இருக்கு.

GEETHA ACHAL said...

சூப்பர்ப்...அருமையான இட்லி...பார்க்கும் பொழுதே சாப்பிட தோன்றுகின்றது...

சசிகுமார் said...

இது என்ன இட்லியா? அது போல தெரியவில்லை பப்ஸ் போல இருக்கிறது. நல்ல பதிவு அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Chitra said...

புதுமையாக இருக்குது. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

karthik said...

nice me

Priya said...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த இட்லி இது!
உங்க செய்முறை கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. நன்றி!

vanathy said...

mmm... Yummy and looking very sweet.

நித்தி said...

நல்ல வெரைட்டி. எங்க வீட்டுல இதனை கருப்பு இட்லி னு சொல்லுவோம்....
sweet ஆ இருக்கும்.

RamGP said...

ஸ்வீட் இட்லியை காண்பித்து எனக்கு பசியை கிளப்பிட்டீங்க ...

நல்ல பகிர்வு ... நன்றி

Kanchana Radhakrishnan said...

அருமையான இட்லி..அருமையாக இருக்கு.

தக்குடு said...

இந்த வாரம் எந்த ப்ளாக் பக்கம் போனாலும் இட்லியா இருக்கு?? நல்ல விளக்கம்!..:)

Gita Jaishankar said...

Looks so tempting...my mom used to make this for me for lunch in my school days...thanks for reminding of this delicious idli :)

geetha said...

குழந்தைகளுக்கு செய்துகொடுக்க ஒரு அருமையான ரெஸிப்பி.
ஷிவானிக்குட்டி நல்லா சாப்பிட்டாங்களா??
நான் அதிகம் தேங்காய் வாங்குவது இல்லை. அதனால் தேங்காய் நீர் இல்லாமல் செய்தாலும் நல்லா இருக்கும்தானே??

Ahamed irshad said...

உங்க ப்ளாக்குக்கு வந்தாலே எனக்கு(எவ்ளோ சாப்பிட்டாலும்) ரொம்ப பசிக்குது...

Priya Suresh said...

Yennoda romba favourite idli...yevalo venalum saapiduvene..kalakitinga Menaga..

Menaga Sathia said...

நன்றி கமலா!!

நன்றி சகோ!! உங்க பொண்ணுக்கு செய்து கொடுங்கள்,விரும்பி சாப்பிடுவாங்க..

நன்றி நிது!! உங்கள் செய்முறையும் போடுங்கள்,விரைவில் செய்து பாருங்கள்..

நன்றி சாறு அக்கா!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி கீதா!!

//இது என்ன இட்லியா? அது போல தெரியவில்லை பப்ஸ் போல இருக்கிறது. // அடக்கடவுளே என்னுடைய இட்லி பப்ஸ்போல இருக்கா....நன்றி சசி!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

நன்றி கார்த்திக்!!

நன்றி ப்ரியா!!

நன்றி வானதி!!

நன்றி சகோ!!// எங்க வீட்டுல இதனை கருப்பு இட்லி னு சொல்லுவோம்....// நாங்களும் கருப்பு இட்லின்னுதான் சொல்லுவோம்.இட்லி கருப்பா இல்லையேன்னு கிண்டல் பண்ணுவாங்கன்னுதான் இன்னொரு பெயரான ஒலையாப்பம்னு டைட்டில் போட்டேன்..

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ராம்!!

நன்றி காஞ்சனா!!

நன்றி தலைவன்.காம்!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தக்குடுபாண்டி!!

நன்றி கீதா!!

Menaga Sathia said...

தேங்காய் நீர் இல்லைன்னா தேங்காய் அதிகம் போட்டு அரைத்து செய்யுங்கள்.தேங்காய் இல்லாமல் செய்தால் மாவு புளிக்காது,நல்லாவும் இருக்காது.என் பொண்ணுக்காகதான் செய்தேன்.விரும்பி சாப்பிட்டாங்க.உங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுங்கள்,நன்றி கீதா!!

நன்றி அஹமது!!

நன்றி ப்ரியா!!

01 09 10