Monday 24 September 2012 | By: Menaga Sathia

Homemade Idli,Dosa Batter

அனைவரும் இந்த பதிவு அறிந்ததே....மெயிலில் நிறைய தோழிகள் இட்லி மாவு எப்படி அரைப்பதுன்னு கேட்டிருந்தார்கள்,அவர்களுக்காக இந்த பதிவு.

அம்மா வீட்டில் இட்லி,தோசை 2க்குமே ஒரே மாவுதான் பயன்படுத்துவோம்.மாமியார் வீட்டில் இட்லிக்கு என்றால் 3 - 1 அரிசி/ உளுந்து சேர்த்து அரைப்பாங்க.தோசைக்கு என்றால் 4-1 அரிசி/ உளுந்து,வெந்தயம் சேர்ப்பாங்க.

அம்மா எப்போழுதும் படியில் தான் அளந்து போடுவாங்க.அந்த அளவு எனக்கு தெரியாததால்,வெளிநாடு வந்த பிறகு நெட்டில் தேடினேன்.எதுவும் எனக்கு சரியா வரல.ஒருமுறை சமையல் ப்ரோக்ராமில் மெனுராணி செல்லம் அவர்கள் இட்லி/தோசைக்கு எப்படி,எந்த அளவு போட்டு அரைக்கனும்னு சொன்னாங்க.அதன்படி அரைத்ததில் இட்லி ரொம்பவே மென்மையாக இருந்தது.

நான் எப்போழுதும் அம்மா செய்வது போல் இட்லி/தோசைக்கு ஒரே மாவைதான் பயன்படுத்துகிறேன்...

சிலர் இட்லி மென்மையாக வருவதற்க்கு சாதம்,அவல்,சோயா பீன்ஸ் இவற்றில் ஏதாவது ஒன்று சேர்த்து அரைப்பாங்க.இட்லி சோடாவும் சேர்த்து அரைப்பாங்க.நான் எதுவுமே சேர்க்கமாட்டேன்.

குளிர்காலத்தில் மட்டும் மாவு சீக்கிரம் புளிக்காது,அப்போழுது மட்டும் 2 டேபிள்ஸ்பூன் தயிர் சேர்த்து மாவு கரைப்பேன்,சீக்கிரம் புளித்துவிடும்.

கிரைண்டரில் அரைத்தால் தான் எனக்கு இட்லி/வடை நல்லா வரும்.மிக்ஸியில் அரைத்தால் கல்லு போல இருக்கும்.

1 கப் = 250 மிலி

தே.பொருட்கள்

புழுங்கலரிசி/இட்லி அரிசி/பொன்மணி அரிசி - 4 கப்
முழு வெள்ளை உளுந்து - 1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*அரிசி+உளுந்து+வெந்தயம் இவற்றை கழுவி தனிதனியாக 6 மணிநேரம் ஊறவைக்கவும்.

 *ஊறியதும் கிரைண்டரில் முதலில் வெந்தயத்தை போட்டு 10 நிமிடம் போட்டு அரைத்தபின்  உளுந்தை போட்டு 40 நிமிடங்கள் அரைக்கவும்.

*ஒரேடியாக தண்ணீர் ஊற்றி அரைக்காமல் அவ்வப்போழுது இடையிடையே குளிர்ந்த தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
 *மேலே படத்தில் உள்ளவாறு உளுந்து நன்கு அரைப்பட்டு மாவாகி வரும் போது எடுத்து விட்டு அரிசியை போட்டு அரைக்கவும்.

 *அரிசி ரவை போல் அரைபடும்போது பாதி மாவை வழித்து மீதி பாதி அரிசி மாவை நைசாக அரைக்கவும்.

*பின் அனைத்தையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கெட்டியாக கரைக்கவும்.
 *8 மணிநேரம் நன்கு புளிக்கவிடவும்.
 *மேலே உள்ள படம் மாவு புளித்தபின் எடுத்தது.

*மாவு  புளித்த பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்தபின் இட்லி தட்டில் துணி போட்டு மாவை 1 குழிக்கரண்டி எடுத்து ஒவ்வொரு தட்டிலும் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
*தோசையாக சுடவேண்டுமெனில் தேவையான மாவை வேறொரு பாத்திரத்தில் எடுத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து தோசைகளாக சுடவும்.

பி.கு

*எப்போழுதும் முதலில் உளுந்தை அரைத்த பின் அரிசியை அரைக்கவும்.அரிசியை அரைத்தபின் உளுந்து போட்டு அரைத்தால் உளுந்து மாவு நிறைய ஆகாது.

*துணியில் ஊற்றும் இட்லிதான் பிடிக்கும்,சுடச்சுட சாப்பிடலாம்.எண்ணெய் தடவி ஊற்றினால் இட்லி ஆறியபிறகுதான் சாப்பிடமுடியும்.

*குளிர்காலத்தில் மாவு சீக்கிரம் புளிக்க அரிசி/உளுந்தை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து ஹீட்டர் கீழே வைக்கலாம்.சீக்கிரம் புளித்துவிடும்.

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

Sangeetha Nambi said...

Love that fluffy cloth idly with perfect sidedish.... yummy !
http://recipe-excavator.blogspot.com

Angel said...

இட்லி டிப்ஸ் அருமை மேனகா ...தயிர் சேர்த்ததில்லை ..இனி சேர்த்து பார்க்கிறேன்

..உங்க குட்டி இளவரசி ஷிவானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க

Prema said...

Very useful post,well explained...

Srividhya Ravikumar said...

gundu gundu idly...arumai..

Priya Suresh said...

Spongy idly super aa irruku..

திண்டுக்கல் தனபாலன் said...

வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... பல சந்தேகங்கள் தீர்ந்து விட்டதாம்... மிக்க நன்றிங்க...

பொன்மணி அரிசி... - பொன்னி அரிசி தானே...?

Menaga Sathia said...

@திண்டுக்கல் தனபாலன்

பொன்மணி அரிசி என்பது இட்லி அரிசி,பார்பதற்க்கு குண்டு குண்டா இருக்கும்...

Unknown said...

Nice spongy idlis....Love all ur receipes...Happy to follow you...Will be glad if u follow back....

Divya A said...

Wow looks so fluffy and soft..Love this authentic preparation :)
Inviting You To Join In The South Vs North Challenge
You Too Can Cook - Indian Food Recipes

Sangeetha M said...

i too use the same ration, ildi looks so soft n fluffy...idly steamed with cloth idly plate gives really very soft n spongy idlis rt?

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் டிப்ஸ்க்கு மிக்க நன்றி....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

தமிழ் காமெடி உலகம் said...

இட்லி டிப்ஸ் மிகவும் அருமையாக உள்ளது...தயிர் சேர்ப்பது புதுமையாக உள்ளது...நானும் இதை ட்ரை பண்ணி பார்கிறேன்...இன்னும் நிறைய டிப்ஸ் எழுதுங்க....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

சி.பி.செந்தில்குமார் said...

>..மெயிலில் நிறைய தோழிகள் இட்லி மாவு எப்படி அரைப்பதுன்னு கேட்டிருந்தார்கள்,

haa ஹ்ஃஆ ஹா ஹா ஹா ஹி ஹி ஹோ ஹிஒ ஹிஒ சிரிச்சு மாளலை

சி.பி.செந்தில்குமார் said...

கரண்ட்டே இல்லை, கிரைண்டர் எபடி? ஆட்டுக்கல்தான்

Chitra said...

nice useful post. We too use the same ratio..

Asiya Omar said...

இட்லி மாவு இதே மாதிரி தான் அரைப்பேன்.அரிசி அரைக்கும் பொழுது நீங்க பாதியை ரவை மாதிரியும்,பாதியை நைசாக அரைக்கச் சொல்லியிருக்கீங்க,
இப்படி இரண்டு தடவை அரைத்ததில்லை,தெரியாதவர்களுக்கு
நிச்ச்யம் உதவியாக இருக்கும்.

divyagcp said...

Very useful post. First time here. Happy to follow you. Do visit my space in your free time.

Divya's Culinary Journey

Priya ram said...

மேனகா, ரொம்ப useful குறிப்பு... எங்க வீட்டுல புழுங்கல் அரிசியே யூஸ் பண்ண மாட்டோம். பச்சை அரிசி தான்... 3:1 போடுவோம்... நல்லா வரும்.... அம்மா வீட்டுல துணி இட்லி சாப்பிட்டது... நியாபகம் பண்ணிட்டீங்க... உங்க இட்லி சூப்பர் ரா இருக்கு... பஞ்சு மாதிரி.... :)

Priya ram said...

தயிர் சேர்க்கறது புதுசா இருக்கு.. நாங்க சென்னைல தான் இருக்கோம்... ஈஸியாக மாவு பொங்கிடும்... :)

ஹுஸைனம்மா said...

அபுதாபி வந்த புதுசில், (16 வருஷம் முன்பு) இட்லி மாவு சரியான அரிசி வகை, அளவு, பதம் தெரிந்து வருவதற்குள் ரொம்ப சிரமப்பட்டுவிட்டேன். அப்போவெல்லாம் இந்திய அரிசி வகைகள் கிடைக்காது. இப்பமாதிரி வலைப்பூக்களும் கிடயாது ஆலோசனை சொல்ல/கேட்க. அது ஒரு காலம்.

இப்ப அரிசி, உளுந்து, வெந்தயம் எல்லாமே ஒண்ணாவெ ஊறப்போட்டு, ஒண்ணாவே அரைச்சுப்பேன். நல்லா வரும்.

இப்பவும் துணிபோட்டுத்தான் அவிக்கிறீங்களா? பரவால்லையே.

01 09 10