Tuesday, 20 October 2009 | By: Menaga Sathia

புளியோதரை (புளி சாதம்)


தே.பொருட்கள்:

உதிராக வடித்து ஆற வைத்த சாதம் - 3கப்
புளி- 3எலுமிச்சை பழ அளவு(100கிராம்)
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய்- தே.அளவு
நல்லெண்ணெய்- 1 1/2 டேபிள்ஸ்பூன்


தாளிக்க:

காய்ந்த மிளகாய்- 4
கடலைப்பருப்பு- 1 டேபிள்ஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெ.உ.பருப்பு- 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/2 டீஸ்பூன்
கருவேப்பில்லை- சிறிது
வறுத்த வேர்க்கடலை- 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெயில்லாமல் வறுத்து பொடிக்க வேண்டியவை:

தனியா- 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
கா.மிளகாய்- 3
கடலைப்பருப்பு- 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம்- 1 டீஸ்பூன்
வெந்தயம்- 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* ஆற வைத்த சாதத்தை நல்லெண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.

* புளியை கெட்டியாக 1கப் அளவுக்கு கரைத்துக்கொள்ளவும்,மஞ்சள் தூள்+உப்பு சேர்க்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து புளியை ஊற்றி கொதிக்க விடவும்.

* பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை பொடித்து,புளி பச்சை வாசனை போனதும் பொடித்த பொடியை 3/4 டேபிள்ஸ்பூன் தூவி 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

*புளிக்காய்ச்சல் ஆறியதும் சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.

*1 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் சுவையோ சுவை.

பி.கு:

இதற்கு தொட்டுக்கொள்ள இரால்,உருளைக்கிழங்கு ,கறி வருவல்,மசால் வடை,புதினா துவையல் நன்றாக இருக்கும்.

மீதமிருக்கும் பொடியை வறுவல்,வத்தக்குழம்புக்கு பயன்படுத்தலாம்.

37 பேர் ருசி பார்த்தவர்கள்:

வால்பையன் said...

என்னை போலுள்ள யூத்துகளுக்கு பயனுள்ள பதிவு!

பிரியமுடன்...வசந்த் said...

ஹைய்யா...

புளிச்சோறை கிண்டனும்ன்னு ஆசைய கிளப்பிவிட்டுட்டீங்க...

UmapriyaSudhakar said...

படத்தை பார்த்தாலே ஆசையா.... இருக்கு மேனகா. நான் இதனுடன் சிறிது வெல்லம் சேர்ப்பேன்.

கோபிநாத் said...

புளியோதரையுடன் பருப்பு வடை Combination எனக்கு பிடித்தது. எங்கள் வீட்டில் வாரம் ஒருநாள் கண்டிப்பாக புளியோதரை உண்டு. நன்றி.

Suvaiyaana Suvai said...

நான் இதை போல் செய்ததில்லை ட்ரை பண்றேன்
http://susricreations.blogspot.com

Geetha Achal said...

ஆஹா..மேனகா..நானும் இதே பதிவினை தான் பிரவுன் ரைஸில் செய்து வைத்துள்ளேன்...புராட்டாசி சனிகிழமை படைத்தது...ரொம்ப நாளாக பதிவு போடமுடியாமல் போய்விட்டது...

சூப்பர்ப்...புளிசாதம்..

srikars kitchen said...

wow.. yummy puliyotharai..

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. கொஞ்சம் அப்படியே 10 முந்திரிய ஒரு ஸ்பூன் நெய்யில வறுத்துப் போட்டா சுவை இன்னும் கூடும். எங்க மண்ணி புளியோதரை எக்ஸ்பர்ட். அவங்க செய்யறாங்கனா அவங்க எல்லாம் நண்பிகளும் போன்ல புளிக்காய்ச்சலுக்கு புக் பண்ணிடுவாங்க. நான் தான் எல்லாருக்கும் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வருவேன். நன்றி. இலை வடாமும், வத்தல் அல்லது அப்பளமும் தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும்.

Chitra said...

Oh , i too prepare in the same way but dont add dhania.. Will try adding it..Iam drooling :)

நாஸியா said...

இன்னும் பத்து நாளைக்குள்ள செய்ய போறேன்!! இறைவன் நாடினால்!

Jaleela said...

ரொம்ப நல்ல இருக்கு நானும் அடிக்கடி செய்வேன் , இரண்டு முன்று விதமா செய்வது ,இதில் வறுத்து சேர்ப்பது தான் அந்த சாதத்துக்கே மணம்.

தமிழ் நாடன் said...

அசத்துறீங்க போங்க!

Shama Nagarajan said...

my favourite rice,...looks yummy

S.A. நவாஸுதீன் said...

ஆகா எனக்கு ரொம்ப பிடித்த ஐட்டமாச்சே. ரொம்ப நன்றி சகோதரி

சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வு மேனகா.

நாங்க எல்லாம் பிரிஜ் கண்டு பிடிக்கும் முன் புளியோதரையை கண்டுபிடிதவர்கள் :-))

சும்மா :-))

Mrs.Menagasathia said...

//என்னை போலுள்ள யூத்துகளுக்கு பயனுள்ள பதிவு!//வால் உங்களுக்கு பேரன் பேத்திகள் இருப்பதாக சொன்னாங்க?உண்மையா வால்?

நன்றி தங்கள் கருத்துக்கு!!

Mrs.Menagasathia said...

//ஹைய்யா...

புளிச்சோறை கிண்டனும்ன்னு ஆசைய கிளப்பிவிட்டுட்டீங்க...//

ஆசையை கிளப்பிட்டேனா,அப்போ சீக்கிரம் செய்து சாப்பிடுங்க.நன்றி வசந்த்!!

Mrs.Menagasathia said...

அடுத்த முறை வெல்லம் சேர்த்து செய்து பார்க்கனும்.நன்றி உமா!!

Mrs.Menagasathia said...

ஆமாம் நீங்கள் சொல்லும் காம்பினேஷன் ரொம்ப ரொம்ப சூப்பராயிருக்கும்.நன்றி கோபி ப்ரதர்!!

Mrs.Menagasathia said...

செய்து பாருங்கள் ஸ்ரீ,நன்றாகயிருக்கும்.நன்றி தங்கள் கருத்துக்கு!!

Mrs.Menagasathia said...

உங்க செய்முறையும் போடுங்கள்.நன்றி கீதா!!

நன்றி ஸ்ரீப்ரியா!!

Mrs.Menagasathia said...

நன்றி பித்தன்!!

தனியா சேர்த்து செய்து பாருங்கள்,நன்றாக இருக்கும்.நன்றி சித்ரா!!

Mrs.Menagasathia said...

சீக்கிரமே செய்து பாருங்கள் நாஸியா.உங்கள் பதிவுகள் மிக அருமை!!நன்றி தங்கள் கருத்துக்கு!!

Mrs.Menagasathia said...

ஆமாம் நீங்கள் சொல்வதுபோல் வறுத்து சேர்ப்பது தான் நல்லாயிருக்கும்.நன்றி ஜலிலாக்கா!!

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தமிழ்நாடான்!!

நன்றி ஷாமா!!

Mrs.Menagasathia said...

உங்களுக்கும் ரொம்ப பிடித்த உணவா,எனக்கும்...நன்றி நவாஸ் ப்ரதர்!!

நன்றி சிங்கக்குட்டி!!

வால்பையன் said...

////என்னை போலுள்ள யூத்துகளுக்கு பயனுள்ள பதிவு!//வால் உங்களுக்கு பேரன் பேத்திகள் இருப்பதாக சொன்னாங்க?உண்மையா வால்?//

இன்னோரு இருபது, இருபத்தைந்து வருடங்கள் கழித்து வரலாம்!

Priya said...

nalla erukku..mouth watering

Priya said...

Puliyodharai, my all time favourite..Paathathume pasikuthey:)

Mrs.Menagasathia said...

//////என்னை போலுள்ள யூத்துகளுக்கு பயனுள்ள பதிவு!//வால் உங்களுக்கு பேரன் பேத்திகள் இருப்பதாக சொன்னாங்க?உண்மையா வால்?//

இன்னோரு இருபது, இருபத்தைந்து வருடங்கள் கழித்து வரலாம்!//அப்போ நீங்க உண்மையிலேயே யூத்ன்னு ஒத்துக்கறேன் வால்..

Mrs.Menagasathia said...

//nalla erukku..mouth watering// நன்றி ப்ரியா!!

//Puliyodharai, my all time favourite..Paathathume pasikuthey:)//வாங்க ப்ரியா செய்து தரேன்,நன்றி ப்ரியா!!

sarusriraj said...

எங்க வீட்ல இன்னைக்கு புளிசாதம் தான் ஆனால் நான் பொடி செய்யும் வெந்தையம்,மிளகு சேர்கலை அடுத்த முறை செய்யும் போது சேர்க்கிறேன் . என் பசங்களுக்கு பிடித்த லன்ச்...

Mrs.Menagasathia said...

அடுத்த முறை செய்யும் போது வெந்தயம்+மிள்கு சேர்த்து பாருங்க நல்லாயிருக்கும்.நன்றி சாரு!!

ஜீவா said...

நீங்கள் சொன்னதுபோல் புளி சாதம் செய்து சாப்பிட்டோம்,
மிகவும் அருமையாக இருந்தது.

அதுபோல் பால் கலந்து சப்பாத்தி செய்து பார்த்தேன்,மிகவும் மிருதுவாக இருந்தது.
தங்களுக்கு மிகவும் நன்றி
ஜீவா

Mrs.Menagasathia said...

செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி+நன்றி!!

சப்பாத்தியும் நன்றாக வந்ததில் சந்தோஷம்.நன்றி சகோ!!

வியபதி said...

படத்தைப் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. சுவையான பதிவு

Prashath S said...

Today i prepared it so tasty

Menaga sathia said...

@prasanth Thxs for trying it and glad u liked it !!

01 09 10