Sunday, 4 October 2009 | By: Menaga sathia

மாங்காய் இஞ்சி ஊறுகாய்

தே.பொருட்கள்:

மாங்காய் இஞ்சி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
வர மிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை :

* மாங்காய் இஞ்சியை கழுவி தோல் சீவி நறுக்கவும்.

*அதனுடன் உப்பு+கீறிய பச்சை மிளகாய்+எலுமிச்சை சாறு சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து மிளகாய்தூள் சேர்த்து உடனே ஊறுகாயில் கொட்டவும்.

*இதை உடனே செய்து சாப்பிடலாம்.

பி.கு:

மாங்காய் இஞ்சி பார்ப்பதற்க்கு இஞ்சி போலவே இருக்கும்,சுரண்டிப் பார்த்தால் மாங்காய் வாசனை வரும்.

28 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya said...

WOw oorukai paathathume yennaku pasikuthu..excellent pickle Menaga..

இராகவன் நைஜிரியா said...

மாங்கா இஞ்சி...

ஏங்க வெளி நாட்டுல இருக்குறவங்க இந்த மாங்கா இஞ்சி கிடைக்காம கஷ்டப் படும் போது, ஊறுகாய் பத்தி ஒரு இடுகைப் போட்டு ஏன் இப்படி படுத்துறீங்க...

அவ்...அவ்....

(எனக்கு மாங்க இஞ்சி என்றால் ரொம்ப பிடிக்கும்... ஊருகாய் கூட போட வேண்டாம்.... அப்படியே சாப்பிடுவேன்..)

Deivasuganthi said...

வாவ் எனக்கு பிடிச்ச ஊறுகாய் இது. இங்க மாங்காய் இஞ்சி கிடைக்குதான்னு தெரியல. தேடி பார்க்கனும்.

பித்தனின் வாக்கு said...

வெறும் மிளகாய்த் தூள் போடுவதை வீட, மிளகாய், தனியா, சீரகம் பொடி அரைத்து அதனுடன் கலர்ந்தால் நன்றாக இருக்கும். நான் தாங்கள் கூறியுள்ளபடி மிளகாய்த்தூள் மட்டும் சேர்க்காமல், எலுமிச்சை சாறு கலந்து சும்மா நொறுக்குத் தீனியாக தின்றுவிடுவேன்.

Pavithra said...

hi this is my fav too.. lucky happened to get this here after long time.. looks so yummy dear..

Jaleela said...

மாங்காய் இஞ்சி ஊறுகாய் ரொம்ப சூப்பர் மேனகா/

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்கும். கேரளாவில் இருந்து வரும் நண்பர்கள் மீனில் ஊறுகாய் செய்துகொண்டு வருவார்கள். அதன் செய்முறை உங்களுக்குத் தெரியுமா சகோதரி?

Mrs.Menagasathia said...

வாங்க ப்ரியா நான் செய்து தரேன் உங்களுக்கு.நன்றி தங்கள் கருத்துக்கு!!

Mrs.Menagasathia said...

ஓஓ உங்களுக்கு அங்க கிடைக்காதா ப்ரதர்.வேணும்னா சொல்லுங்க பார்சல் அனுப்புறேன். எனக்கும் இந்த மாங்காய் இஞ்சி ரொம்ப பிடிக்கும்.அதன் வாசனையே அப்படியே நம்மை சாப்பிட வைக்கும்.நன்றி தங்கள் கருத்துக்கு இராகவன் அண்ணா!!

Mrs.Menagasathia said...

கிடைக்கும்னு நினைக்கிறேன் சுகந்தி.செய்து பாருங்க.நன்றி தங்கள் கருத்துக்கு!!

Mrs.Menagasathia said...

நீங்கள் சொல்வதுப் போல் செய்தாலும் சுவையாக இருக்கும்.எனக்கு அதெல்லாம் பொடித்து போடுவதற்க்குள் காலியாயிடுமேன்னு மிளகாய்த்தூள் சேர்த்து சாப்பிட்டேன்.அடுத்தமுறை நீங்கள் சொல்வதுபோல் செய்துடனும்.நன்றி தங்கள் கருத்துக்கு பித்தன்!!

Mrs.Menagasathia said...

எனக்கு ஊறுகாய்ன்னாலே ரொம்ப பிடிக்கும்.அதுவும் மாங்காய் ஊறுகாய்னா சொல்லவே வேணாம்.தங்கள் கருத்துக்கு நன்றி பவித்ரா!!

Mrs.Menagasathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!

Mrs.Menagasathia said...

எனக்கு மீன் ஊறுகாய் செய்முறை தெரியாது ப்ரதர்.எனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்.தெரிந்தால் நிச்சயம் எழுதுகிறேன்.நன்றி தங்கள் கருத்துக்கு ப்ரதர்!!

நட்புடன் ஜமால் said...

மாதா ஊட்டாத சோற்றை

மாங்கா ஊட்டுமுன்னு சொல்வாங்க

அம்பூட்டு டேஸ்ட்டானதில் இஞ்சியுமா

ஆஹா! அருமை.

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

மாங்காய் இஞ்சி ஊறுகாய், அய்யோ நினைத்தாலே வாயெல்லாம் ஜொல்லிங்!! நீங்க படம் வேற போட்டு காட்டிட்டிங்க‌, ஹி ஹி.

Chitra said...

arumai , naaku uruthu ;)

srikars kitchen said...

Nice pickle.. looks really yummy..

Priya said...

nalla erukku...enji orukai..thank u for ur awards..will post soon..all the dishes luks yum...pls check my blog for on going event
diwali 2009"Contest..here is the link..http://priyasfeast.blogspot.com/2009/10/announcing-diwali-2009-event.html

Ammu Madhu said...

மேனகா மாங்காய் இஞ்சி நான் சின்ன வயதில்சாப்பிட்டது..முடிந்தால் மாங்காய் இஞ்சி படம் போடுங்கள்..சூப்பர் ரெசிப்பி..அன்புடன்,

அம்மு.

Mrs.Menagasathia said...

ஆமாம் நீங்கள் சொல்லும் பழமொழி நிஜம்.ஒருமுறை செய்து பாருங்க சுவைக்கு அடிமையாயிடுவிங்க.நன்றி ஜமால்!!

Mrs.Menagasathia said...

படம் போட்டதால அப்புறம் என்ன ஆச்சு? ஹி ஹி நன்றி ஷஃபி!!

Mrs.Menagasathia said...

நன்றி சித்ரா மற்றும் ஸ்ரீப்ரியா தங்கள் கருத்துக்கு!!

Mrs.Menagasathia said...

நன்றி ப்ரியா!!.நிச்சயம் கலந்துகொண்டு ரெசிபி போஸ்ட் செய்கிறேன்!!

Mrs.Menagasathia said...

அடுத்தமுறை வாங்கும் போது போட்டோ போடுகிறேன் அம்மு.அப்படியில்லனா கூகிள் இமேஜில் பாருங்க.நன்றி தங்கள் கருத்துக்கு!!

Geetha Achal said...

இந்த வாரம் நியு ஜெர்சிக்கு பொகும் பொழுது வாங்கி வந்தேன்...இனிமேல் தான் அம்மா ஊறுகாய் செய்து கொடுகிறேன் என சொன்னாங்கா...சூப்பர்ப்..மிகவும் நன்றாக இருக்கின்றது.

Mrs.Menagasathia said...

செய்து சாப்பிடுங்கப்பா.என்னுடைய பேவரிட் இது.தங்கள் கருத்துக்கு நன்றி கீதா!!

துளசி கோபால் said...

நேத்து ஃபிஜி இண்டியன் கடையில் மாங்காய் இஞ்சி கிடைச்சது. கொஞ்சூண்டு வாங்கியாந்தேன், முதல்முறையா. இனிமேத்தான் நீங்கசொன்னமாதிரி ஊறுகாய் செஞ்சு பார்க்கணும் :-)

01 09 10