Thursday 22 October 2009 | By: Menaga Sathia

எலுமிச்சை சாதம்

தே.பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் -வாசனைக்கு
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் -2
இஞ்சி -1 சிறியதுண்டு பொடியாக அரிந்தது

செய்முறை :

*எலுமிச்சை பழத்தை பிழியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைஅக்ளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள்+உப்பு+எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

*கலவை சிறிது நேரம் கொதித்தபின் ஆறவிட்டு சாதத்தை போட்டு கிளறி 1 மணிநேரம் கழித்து பறிமாறவும்.

பி.கு:

1. பழம் புளிப்பாக இருந்தால் 2 பழம் போதும்.
2.கலவை ரொம்ப நேரம் கொதிக்ககூடாது,அப்படி ஆனால் கசக்கும்.
3.சாதத்தை கிண்டிய பிறகு எவ்வளவு நேரம் கழித்து சாப்பிடறோமோ அவ்வளவு சுவையாக இருக்கும்.
4.தாளிக்கும் போது வேர்க்கடலையும் சேர்க்கலாம்.

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

suvaiyaana suvai said...

super!!

நாஸியா said...

எங்க ஆளுக்கு அடுத்த வாரத்துல இருந்து மதியம் கட்டி கொடுக்க நல்ல நல்ல ஐடியா குடுக்குரிங்க! ரொம்ப ரொம்ப நன்றி!

Unknown said...

Yenna sathia, lineaa lunch box menu va irruke..again my one more favourite rice..

பித்தனின் வாக்கு said...

இம்ம் சாதம் பார்க்க நல்லா இருக்குங்க, உருளைக்கிழங்கு காரக்கறிகூட ஒரு பொட்டலம் பார்சல் எனக்கு அனுப்பி வையுங்க. ஏற்கனவே பொடி போட்டு பண்ற சாதம் ஒரு பதிவு போட்டுருந்டிங்க இல்லையா.

சாருஸ்ரீராஜ் said...

சூப்பரா இருக்கு மேனகா

தமிழ் நாடன் said...

அம்மா எலுமிச்சைசாதம் செஞ்சா எப்பவும் இதான்னா? அப்படீன்னு கேட்பேன். ஆனா இப்ப அது் செய்யரதே பெரிய விடயமா இருக்கு!

உங்க முறையிலும் செஞ்சு பார்த்துடுவோம் சகோதரி!

Menaga Sathia said...

நன்றி ஸ்ரீ!!

நன்றி நாஸியா!! அப்போ விதவிதமா செய்து அசத்துங்க..

Menaga Sathia said...

ஆமாம் ப்ரியா,புரட்டாசி சனிக்கிழமை செய்த சமையல்..எனக்கும் இது பேவரிட்.நன்றி ப்ரியா!!

பார்சல் அனுப்பினேனே வந்ததா உங்களுக்கு?
//ஏற்கனவே பொடி போட்டு பண்ற சாதம் ஒரு பதிவு போட்டுருந்டிங்க இல்லையா.//அது என் குறிப்பு இல்லைங்க.நன்றி பித்தன்!!

Menaga Sathia said...

நன்றி சாரு!!

செய்து பாருங்க தமிழ்நாடான்.நீங்கள் சொல்வது சரிதான்.இருக்கும் போது எந்த பொருளானலும் அதன் அருமை தெரியாது,இல்லாதப்ப தான் அதன் அருமை பெருமைலாம் தெரியும்.அதற்காக ஏங்குவோம்கூட..நன்றி தங்கள் கருத்துக்கு!!

சிங்கக்குட்டி said...

நாங்கெல்லாம் பிரிஜ்... (போன பதிவு பின்னூட்டம்) பார்ட்-II :-)

நல்ல பதிவு மேனகா.

S.A. நவாஸுதீன் said...

Tasty Recipe.

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான எலுமிச்சை சாதம், பார்க்கவே உதிரியா நல்ல இருக்கு.

ஓ நீங்களுமா? இததான் நாஸியா இரண்டு லெமென் சாதம் என்று சொன்னாங்க்லா

Menaga Sathia said...

நன்றி சிங்கக்குட்டி!!

நன்றி நாவஸ் ப்ரதர்!!

Menaga Sathia said...

//ஓ நீங்களுமா? இததான் நாஸியா இரண்டு லெமென் சாதம் என்று சொன்னாங்க்லா//ஆமாம்.நன்றி ஜலிலாக்கா!!

SUFFIX said...

சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு!!

Chitra said...

My favourite..slurpp !!

Menaga Sathia said...

சீக்கிரம் செய்து சாப்பிடுங்க,நன்றி ஷஃபி!!

நன்றி சித்ரா!!

01 09 10