Monday 10 September 2012 | By: Menaga Sathia

முப்பருப்பு வடை /Mixed Dhal Vadai



தே.பொருட்கள்

முழு வெள்ளை உளுந்து - 1 கப்
கடலைப்பருப்பு+துவரம்பருப்பு - தலா 1/2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1/2 கப்
பொடியாக அரிந்த கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிது
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறுதுண்டு
உப்பு-தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*உளுந்தை தனியாகவும்,பருப்புகளை ஒன்றாகவும் 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிகட்டவும்.

*உளுந்தை ,உளுந்துவடைக்கு அரைப்பதைபோல அரைத்து அதனுடன் பச்சை மிளகாய்+இஞ்சி சேர்த்து நன்கு அரைக்கவும்.

*பருப்புகளை பெருஞ்சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*அனைத்தையும் உப்பு+வெங்காயம்+கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கி வடைகளாக சுட்டெடுக்கவும்.


26 பேர் ருசி பார்த்தவர்கள்:

'பரிவை' சே.குமார் said...

முப்பருப்பு வடை புதுசா இருக்கு.
நல்லாயிருக்கும் என்பதை படமே சொல்லுது...

வை.கோபாலகிருஷ்ணன் said...

படத்தில் காட்டியுள்ள முப்பருப்பு வடைகளே ஜோராக மொறுமொறுப்பாக நாக்கில் நீர் வரவழைப்பதாக உள்ளது.

செய்முறை விளக்கமும் அருமை.

பகிர்வுக்கு பாராட்டுக்கள்,நன்றிகள்.

Angel said...

முப்பருப்பு வடை பார்க்கவே அருமையா இருக்கு ..ரெசிப்பி பகிர்வுக்கு நன்றி மேனகா

ஸாதிகா said...

முப்பருப்பு வடை..ஆஹா..பேரே ரம்யமா இருக்கே.

மனோ சாமிநாதன் said...

இதை நானும் செய்வேன் என்பதால் இதன் அபார ருசி பற்றி எனக்குத் தெரியும். பெருஞ்சீரகம் மட்டுமே வித்தியாசம். புகைப்படத்தில் பொன்னிறமான வடைகளைப்பார்த்ததுமே பசி எடுக்கிறது!!

GEETHA ACHAL said...

Superb vadai...

Unknown said...

Mouthwatering!looks crispy!

Asiya Omar said...

ஆஹா! அருமை.

Sangeetha M said...

i too have tried vada with mixed dals, yours looks very tempting n u shaped them well :)

hotpotcooking said...

Crunchy evening snack.

ராமலக்ஷ்மி said...

பார்க்கும் போதே சாப்பிடும் ஆசை வருகிறது:). நல்ல குறிப்பு மேனகா. நன்றி.

Akila said...

Wow very healthy one

சி.பி.செந்தில்குமார் said...

>>அனைத்தையும் உப்பு+வெங்காயம்+கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கி வடைகளாக சுட்டெடுக்கவும்.


அப்படி சுட்டு எடுத்தா காப்பி பேஸ்ட் கிச்சன்வாலா பேரு வந்ந்துடாதா?

Chitra said...

We too make this .. love it :)

Priya Suresh said...

Super vadai,love this variation,feel like munching some.

Unknown said...

Yummy Vadai... Good to see your blog in Tamil !! Kudos !!

First time in your space...Happy to follow you :)

Todays Recipe Jackfruit Halwa

Inviting you to join my on-going event Onam Sadhya ~ The Grand Feast

Cheers,
Sharanya.

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்ப்போம்... மிக்க நன்றி சகோ...

Srividhya Ravikumar said...

Arumaiyaga iruku...

Unknown said...

Never tried with all dals. Nice idea.perfect recipe for the season.

Hema said...

Vadai superb, have to try this out..

Divya A said...

Healthy vada :) Loved this version
Today's Recipe ~ Wheat Flour Kheer / Godhumai Maavu Paayasam
You Too Can Cook Indian Food Recipes

Easy (EZ) Editorial Calendar said...

செயுது பார்போம்......

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

வலைப்பூ தலையங்க அட்டவணை
info@ezedcal.com
http//www.ezedcal.com

Angel said...

மேனகா !! மாங்காய் இஞ்சி குழம்பு செய்தேன் ...சூப்பர் !!
ரொம்ப ருசியா வந்தது ..விரைவில் பதிவில்போடுவேன் .அப்பளின்க் தரேன்

MARI The Great said...

புதுசா இருக்கு..

புகைப்படமே சாப்பிடும் ஆசையை தூண்டுகிறது!

Unknown said...

வடை செய்ய நீங்கள் தந்துள்ள குறிப்பும் படமும் அருமை. நிச்சயம் செய்து பார்க்கவேண்டும்

Anonymous said...

இது ரொம்ப புதுமையா இருக்கு.. முப்பருப்பு வடை ன்னு சொன்னவுடனே நான் மசால் வடை மாதிரி இருக்கும் ன்னு நினைத்தேன்

01 09 10