Wednesday, 23 September 2009 | By: Menaga Sathia

பார்லி - முளைப்பயறு புட்டு

தே.பொருட்கள்:

பார்லி குருணை -1/2 கப்
முளைபயறு கொண்டைக்கடலை,பச்சைப்பயறு - 1/2 கப்
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
இஞ்சி - 1சிரு துண்டு
பூண்டுப்பல் -4
கொத்தமல்லித்தழை - சிறிது
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பார்லியை 1 மணிநேரம் ஊறவைத்து தண்ணியை வடித்துக்கொள்ளவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி+கொத்தமல்லித்தழை பொடியாக நறுக்கவும்.

*முளைப்பயறுடன் உப்பு+பூண்டுப்பல்+காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின் மஞ்சள்தூள்+உப்பு+அரைத்த பயறு சேர்த்து உதிரியாக வரும்வரை கிளறவும்.

*அப்போழுது ஊறவைத்த பார்லி+எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறி பொலபொலவென வரும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


பி.கு:

இந்த புட்டு மிகவும் சுவையாக இருக்கும்.

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jaleela Kamal said...

ரொம்ப சூப்பரா இருக்கு மேனகா இந்த புட்டு.

Priya Suresh said...

Wow Menaga, yeppadi ippadi ellam supera samaikuringa..puttu pakkave arumaiya irruku romba healthy vera..really fantastic..

UmapriyaSudhakar said...

நல்ல டயட் குறிப்பு மேனகா. கலக்குறிங்க.

நட்புடன் ஜமால் said...

பார்லி உடம்பு போடும் என நினைப்பேன் எப்பொழுதும்.

முளைப்பயறு நல்லது என்பது மட்டுமல்லாது - ரொம்ப சுவையாக இருக்கும் எனக்கு.

சாருஸ்ரீராஜ் said...

மேனகா பார்க்கவே சூப்பரா இருக்கு

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா,ப்ரியா,உமாப்ரியா!!

Menaga Sathia said...

பார்லி சாப்பிட்டால் உடம்பு போடாது ப்ரதர்.அது சாப்பிடுவதால் சாதம் சாப்பிட நினைப்பே வராது.எனக்கும் முளைப்பயறு ரொம்ப பிடிக்கும்.தங்கள் கருத்துக்கு நன்றி!!

நன்றி சாரு தங்கள் கருத்துக்கு!!

சிங்கக்குட்டி said...

கலக்குங்க மேனகா :-))

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி சிங்கக்குட்டி!!

Pavithra Elangovan said...

Wow thats another healthy healthy dish.. looks tempting and really good.

GEETHA ACHAL said...

superb...nice recipe

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி பவித்ரா,கீதா!!

01 09 10