தே.பொருட்கள்:
சுறாமீன் - 8 துண்டுகள்
புளி - 1 எலுமிச்சை பழளவு
முழுபூண்டு - 2
மிளகு - 1 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இனுக்கு
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
* புளியை ஒரு கோப்பையளவு கரைத்து அதில் உப்பு+மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.
*பூண்டை தோலுரித்து நசுக்கவும்.மிளகு சீரகத்தை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகத்தைப் போட்டு தாளித்து புளிகரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.
*கொதித்ததும் சுத்தம் செய்த மீன் +பூண்டு+ வறுத்த மிளகு சீரகப்பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
22 பேர் ருசி பார்த்தவர்கள்:
சுறா மீன் எனக்கு ரொம்ப பிடிக்கும். நன்றிகள் பகிர்வுக்கு...
I dont eat NV but the color of the gravy making me mouthwatering... looks yummy
எனக்கும் வெள்ளை சுறா மீன் என்றால் ரொம்ப பிடிக்கும். எளிமையா அழகா சொல்லி இருக்கீங்க. நன்றி
Spicy sura kuzhambu supera irruku...pasikuthu paathathum..
ம்ம்ம்ம்...டேஸ்டியாதான் இருக்கும்ன்னு நெனக்கிறேன்;-))
மீன் குழம்பு வாசனை இங்க வருது மேனகா. சூப்பர்ர்ர்ர்.
wow menaga super,
pilLai peRRavarkaLukku eeREa receipe
அழகா இருக்கு மாமி! ஆங்கிலத்தில் சொல்லுங்க,இங்க நிறைய மீன் வகை சரியான பேர் தெரியமாட்டேங்குது!
சுறா...
சரி சரி நீங்க எல்லாரும் சாப்பிட்டு நல்லாயிருங்க மக்களா.....
ஏர்கனவே பின்னூட்டம் போட்ட நியாபகம்...
சுறா எனக்கு பிடித்த உணவு...ஸ் ஸ்ஸ்ஸ், சூப்பர் பதிவு :-)
தங்கள் கருத்துக்கு நன்றி சந்ரு!!
நீங்கள் அசைவம் சாப்பிடமாட்டீங்களா பவித்ரா.தங்கள் கருத்துக்கு நன்றி பவித்ரா!!
தங்கள் கருத்துக்கு நன்றி நவாஸ் ப்ரதர்!!
வாங்க ப்ரியா எங்கவீட்டுக்கு சுறாகுழம்பு செய்துதரேன்.தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா!!
நிச்சயம் டேஸ்டியாகதான் இருக்கும் ராஜி.தங்கள் கருத்துக்கு நன்றி!!
வாசனை எப்படியிருந்தது உமா?தங்கள் கருத்துக்கு நன்றி உமாப்ரியா!!
ஆமாம் ஜலிலாக்கா பிள்ளைபெற்றவர்கான ரெசிபிதான்.தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!
சுறாமீன் ஆங்கிலத்தில் Shark என்று சொல்லுவாங்கப்பா.தங்கள் கருத்துக்கு நன்றி மாமி!!
ஏன் வசந்த் சுறா அங்க கிடைக்காதா?தங்கள் கருத்துக்கு நன்றி வசந்த்!!
தங்கள் கருத்துக்கு நன்றி சிங்கக்குட்டி!!
மிகவும் சூப்பராக இருக்கு மேனகா..
நேற்று கூட சுறாமீன் வாங்கிவந்தேன்..
குழம்பு செய்ய வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருந்தது...ஆனால் செய்யவில்லை...அதன் நாங்க சாதம் சாப்பிடுவதில்லை அல்லவா...
அப்புறம் குழம்பு வைத்து என்ன செய்வது என்று செய்யாமலே விட்டுவிட்டேன்..
ஆனாலும் அடுத்த முறை வாங்கும் பொழுது கண்டிப்பாக செய்து பார்த்துவிடவேண்டியது தான்...இட்லி, தோசைக்கு, சப்பத்திக்கு என்று தொட்டு சாப்பிடலாம் அல்லவா...
நீங்க கோதுமை சாதத்தில் இந்த குழம்பு ஊத்தி சாப்பிட்டால் நன்றாகயிருக்கும் கீதா.நான் அப்படிதான் சாப்பிட்டேன்.நன்றி தங்கள் கருத்துக்கு!!
Post a Comment