Showing posts with label மட்டன்/மீன். Show all posts
Showing posts with label மட்டன்/மீன். Show all posts
Friday, 17 June 2016 | By: Menaga Sathia

நெஞ்சு எலும்பு குழம்பு / Nenju Elumbu Kuzhambu

 தே.பொருட்கள்
நெஞ்சு எலும்பு - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் -2 கப்
தக்காளி -1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் -1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கெட்டி தேங்காய்ப்பால் -1/4 கப்

தாளிக்க
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு -3
ஏலக்காய் -1
பிரியாணி இலை -2

செய்முறை
*குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து,நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
 *வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.பின் தக்காளி சேர்க்கவும்.
 *தக்காளி நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்த எலும்பினை சேர்த்து நன்றாக வதக்கவும்.
 *எலும்பின் நிறம் மாறியதும் தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
 *தேவையான நீர் மற்றும் உப்பு சேர்த்து 4 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

 *கடைசியாக தேங்காய்ப்பால் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
பி.கு
*இந்த குழம்பிற்கு சின்ன வெங்காயம் சேர்த்து செய்யவும்.
Saturday, 23 January 2016 | By: Menaga Sathia

மத்தி மீன் குழம்பு(கேரளா ஸ்டைல் ) / Sardine(Mathi) Fish Kuzhambu (Kerala Style)


print this page PRINT IT
  கேரளாவில் குழம்பிற்கு கொடாம்புளி சேர்ப்பார்கள்,இல்லையெனில் சாதரண புளியே சேர்க்கலாம்.

சிறிய மத்தி மீனில் செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.

தே.பொருட்கள்
சிறிய மத்தி மீன்- 10
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 10
பொடியாக நறுக்கிய தக்காளி- 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2
பொடியாக நறுக்கிய பூண்டு- 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் -3/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள்- 1 1/2 டீஸ்பூன்
புளிகரைசல்- 3/4 கப்
நீளமாக நறுக்கிய மாங்காய் துண்டுகள்- 6
கெட்டி தேங்காய்ப்பால்- 1/4 கப்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
தேங்காய் எண்ணெய் -2 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை
*மண்சட்டியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.


*பின் இஞ்சி+பூண்டு+பச்சை மிளகாய்+வெங்காயம்+தக்காளி என வரிசையில் சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் தூள் வகைகள் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.


*நன்கு கொதித்த பின் மீன்+மாங்காய்துண்டுகள் போட்டு 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.


*கடைசியாக தேங்காய்ப்பாலை ஊற்றி 2 நிமிடங்கள் கொதித்த பின் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

பி.கு

*மீன் போட்ட பிறகு கரண்டியால் கிளற வேண்டாம்.
Monday, 11 January 2016 | By: Menaga Sathia

மீன் பொளிச்சது / Meen Pollichathu ( Fish Roasted in Banana Leaf ) | Kerala Recipe


print this page PRINT IT
கேரளாவின் மிக பிரபலமான சுவையான மீன் சமையல் இது.மீனை லேசாக தேங்காய் எண்ணெயில் பொரித்த பின் வாழையிலையில் மசாலா வைத்து அதன் மேல் பொரித்த மீனை வைத்து தவாவில் சூடு செய்து பரிமாறுவது தான் மீன் பொளிச்சது.

இதற்கு கறிமீன் மட்டுமே பயன்படுத்துவாங்க,அதற்கு பதில் நான் சாதராண மீனிலேயே செய்துள்ளேன்,சுவை அபாரம்...

பரிமாறும் அளவு - 2
தயாரிக்கும் நேரம் -20 நிமிடங்கள்

தே.பொருட்கள்

மீன் துண்டுகள்- 4
உப்பு -தேவைக்கு
தேங்காய் எண்ணெய்- 2 1/2 டேபிள்ஸ்பூன்
வாழையிலை துண்டுகள்- 4

மீனில் ஊறவைக்க‌

மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்

மசாலா செய்ய‌

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 1/3 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி- 1/4 கப்
கெட்டி தேங்காய்ப்பால்- 1/4 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல்- 3
பொடியாக நறுக்கிய இஞ்சி ‍- 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை- 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்+கரம் மசாலா -தலா 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள்- 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்

தாளிக்க‌

கடுகு- 1/2 டீஸ்பூன்
சீரகம்+வெந்தயம்  -தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை

*மீனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பின் கடாயில் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி மீனை லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

*மீன் பொரித்த அதே எண்ணெயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

*பின் இஞ்சி+பூண்டுப்பல்+பச்சை மிளகாய்+சின்ன வெங்காயம் என இந்த வரிசையில் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியம் தக்காளி+உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.பின் தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசனை சேர்த்து வதக்கவும்.

*கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி ,மசாலா கெட்டியாக வற்றும்வரை கொதிக்கவிடவும்.

*கெட்டியானதும் எலுமிச்சை சாறு+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

*வாழையிலையில் சிறிதளவு மசாலா வைத்து அதன் மேல் பொரித்த 1 மீன் துண்டினை வைக்கவும்.


*விரும்பினால் மீன் மேலேயும் மசாலா வைக்கவும்.

*அப்படியே 4 பக்கமும் சுருட்டி வைக்கவும்.

*கடாயில் மீதமுள்ள 1/2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வாழையிலை வைக்கவும்.இலையில் நிறம் மாறி வாசனை வரும் போது இருபக்கமும் பிரட்டி எடுக்கவும்.

*இதனை அப்படியே இலையோடு பரிமாறவும்.சாம்பார் சாத‌த்திற்கு
நன்றாக இருக்கும்.

பி.கு

*இதனை தேங்காய் எண்ணெயிலேயே சமைக்கவும்.பாராம்பரிய சுவையோடு இருக்கும்.

*மீனை மொறுமொறுப்பாக பொரிக்க வேண்டாம்,லேசாக வறுத்து எடுத்தாலே போதும்.

*வாழையிலைக்கு பதில் அலுமினியம் பாயிலில் கூட செய்யலாம்,ஆனால் சுவை நிச்சயம் மாறுபடும்.

*மசாலாவில் சேர்க்கபடும் தக்காளி புளிப்பாக இருந்தால் எலுமிச்சை சாறு சேர்க்கவேண்டாம்.
Saturday, 14 March 2015 | By: Menaga Sathia

செட்டிநாடு மீன் வறுவல் / CHETTINAD FISH FRY | CHETTINAD MEEN VARUVAL | CHETTINAD RECIPES

print this page PRINT IT
எப்போழுதும் வறுவல் செய்யும் போது சிறிது கடலைமாவு சேர்த்து வறுத்தால் கடாயில் ஒட்டாது.

ஒரிஜினல் ரெசியில் எலுமிச்சை சாறுக்கு பதில் புளிதண்ணீர் சேர்த்து செய்துள்ளேன்.

இந்த முறையில் மசாலா சேர்த்து வறுக்கும் போது மீன் வாடையும் வராது.

Recipe Source : Spiceindiaonline

மசாலா செய்ய தே.பொருட்கள்

கிராம்பு- 4
பட்டை- 1 துண்டு
ஏலக்காய்- 3
மிளகு- 10
சீரகம் -1/2 டீஸ்பூன்
சோம்பு- 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள்- 1/2 டீஸ்பூன்
அன்னாச்சிப்பூ -1

தே.பொருட்கள்

சுத்தம் செய்த மீன் துண்டுகள்- 1 கிலோ
வரமிளகாய்த்தூள் -2 1/2 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் -2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
இஞ்சி -சிறுதுண்டு
பூண்டுப்பல் -5
கறிவேப்பிலை- 1 கொத்து
புளிதண்ணீர் -2 டீஸ்பூன்
கடலைமாவு -1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய்= தேவைக்கு

செய்முறை

*மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை நைசாக பொடிக்கவும்.

*அதனுடன் வரமிளகாய்த்தூள்+தனியாத்தூள்+மஞ்சள்தூள் சேர்த்து பொடிக்கவும்.

*கடைசியாக இஞ்சி+பூண்டு+கறிவேப்பிலை சேர்த்து பல்ஸ் மோடில் 2 சுற்றி எடுக்கவும்.

*பாத்திரத்தில் மீன் துண்டுகள்+உப்பு+மசாலா பொருட்கள்+புளி தண்ணீர் சேர்த்து பிசறி 1/2 மணிநேரம் வைக்கவும்.

*வறுப்பதற்கு முன் கடலைமாவு சேர்த்து பிசறி ,கடாயில் எண்ணெய் ஊற்றி மீனை சேர்த்து 2 பக்கமும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

பி.கு

*இதே போல் வாழைக்காய்,சேனைக்கிழங்கும் வறுக்கலாம்.

*அவரவர் காரத்திற்கேற்ப மிளகாய்த்தூளை சேர்க்கவும்,நான்  அதிகம் சேர்த்து செய்துள்ளேன்.
Saturday, 29 November 2014 | By: Menaga Sathia

மதுரை ஸ்டைல் மீன் குழம்பு /Madurai Style Meen Kuzhambu | Fish Recipes

print this page  PRINT IT  
 இந்த மீன் குழம்பில் மசாலாவை அரைத்து செய்வதும்,காரசாரமாக இருப்பதும்,நல்லெண்ணெயில் தாளிப்பதும்  தான் இதன் ஸ்பெஷல்.

Recipe Source - Pachai Milagai

தே.பொருட்கள்

மீன் துண்டுகள் -8
புளிகரைசல் - 2 கப்
சின்ன வெங்காயம் -10
தக்காளி - 1
பூண்டுப்பல் -6
தனியாத்தூள் - 1.5 டீஸ்பூன்
வரமிள்காய்த்தூல் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

அரைக்க

மிளகு+சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
பூண்டுப்பல் -3
தனியாத்தூள்+வரமிளகாய்த்தூள்  - தலா 1/2 டீஸ்பூன்

தாளிக்க
வடகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை  நீர் விட்டு மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில்  எண்ணெய் விட்டு வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் வடகம்+கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
*பின் நறுக்கிய வெங்காயம்+தக்காளி+பூண்டு சேர்த்து வதக்கவும்.
*அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
*பின் புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
*குழம்பு நன்கு கொதித்ததும் மீன் சேர்க்கவும்.
*5 நிமிடங்களுக்கு மீதமுள்ள கறிவேப்பிலை செர்த்து இறக்கவும்.

பி.கு
*மீன் துண்டுகள் சேர்த்த பின் குழம்பினை தட்டு போட்டு  மூடவேண்டாம்.

*மீன் சேர்த்த பிறகு தட்டு போட்டு மூடினால் மீன் உடைந்து விடும்.

*இதில் குழம்பு கொதிக்கும் போது கத்திரிக்காய்,மாங்காய் சேர்த்து செய்துள்ளேன்.
Monday, 23 June 2014 | By: Menaga Sathia

கனவா மீன் வறுவல் /Squid (Calamar) Fry

தே.பொருட்கள்

கனவா மீன் - 1 கிலோ
நறுக்கிய வெங்காயம் -1 பெரியது
நறுக்கிய தக்காளி - 1 பெரியது
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*கனவா மீனை சுத்தம் செய்து நறுக்கி மஞ்சள்தூள்+நீர் சேர்த்து வேகவைத்து நிரை வடிகட்டவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம்+தக்காளி +உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி வேகவைத்த மீனை சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பி.கு

*மீனை வேகவைத்து வறுப்பதால் வறுக்கும் போது வெடிக்காது.
01 09 10