Saturday, 23 January 2016 | By: Menaga Sathia

மத்தி மீன் குழம்பு(கேரளா ஸ்டைல் ) / Sardine(Mathi) Fish Kuzhambu (Kerala Style)


print this page PRINT IT
  கேரளாவில் குழம்பிற்கு கொடாம்புளி சேர்ப்பார்கள்,இல்லையெனில் சாதரண புளியே சேர்க்கலாம்.

சிறிய மத்தி மீனில் செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.

தே.பொருட்கள்
சிறிய மத்தி மீன்- 10
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 10
பொடியாக நறுக்கிய தக்காளி- 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2
பொடியாக நறுக்கிய பூண்டு- 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் -3/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள்- 1 1/2 டீஸ்பூன்
புளிகரைசல்- 3/4 கப்
நீளமாக நறுக்கிய மாங்காய் துண்டுகள்- 6
கெட்டி தேங்காய்ப்பால்- 1/4 கப்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
தேங்காய் எண்ணெய் -2 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை
*மண்சட்டியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.


*பின் இஞ்சி+பூண்டு+பச்சை மிளகாய்+வெங்காயம்+தக்காளி என வரிசையில் சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் தூள் வகைகள் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.


*நன்கு கொதித்த பின் மீன்+மாங்காய்துண்டுகள் போட்டு 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.


*கடைசியாக தேங்காய்ப்பாலை ஊற்றி 2 நிமிடங்கள் கொதித்த பின் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

பி.கு

*மீன் போட்ட பிறகு கரண்டியால் கிளற வேண்டாம்.

1 பேர் ருசி பார்த்தவர்கள்:

'பரிவை' சே.குமார் said...

நாங்கள் தேங்காய் பால் இஞ்சி சேர்ப்பதில்லை...
மற்றபடி இதே செய்முறைதான்...
ஆமா குழம்பு பார்க்கும் போது சாப்பிடணும் போல் தோணுதே...

நண்டில் கத்திரிக்காய்... மீனில் மாங்காய் போடுவது எங்கள் பக்கத்து வழக்கம்... கத்திரிக்காய்க்கும் மாங்காய்க்கும் அடித்துக் கொண்டு சாப்பிட்ட சுவராஸ்யமான நாட்கள் இப்போதும் நெஞ்சில்...

01 09 10