இந்த பதிவை எழுத அழைத்த சகோதரர் வசந்த்க்கு நன்றி!!
எல்லாருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும் அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்.
அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக உங்கள் கண் முன்னாடி ஏஞ்சல் எனும் தேவதை உங்களிடம் பத்து வரங்கள் தருகிறது . நீங்கள் அதனிடம் என்ன வரம் கேட்பீர்கள்?
நான் தேவதையிடம் கேட்ட வரங்கள்
முதல் வரம் : மோட்சமடைந்த தந்தை மீண்டும் உயிருடன் வர கேட்பேன்.
இரண்டாவது வரம் : பார்வையில்லாதவர்களுக்கு பார்வை அளித்து அவர்கள் இந்த உலகத்தை ரசிக்கவேண்டி கேட்பேன்.
மூன்றாவது வரம் : ஒரு நாள் ஜனாதிபதியாக கேட்பேன்.
நான்காவது வரம்: மணிமேகலை வைத்திருந்த அட்சயபாத்திரம் வேணும்னு கேட்பேன்,அனைவரும் பசியில்லாமல் வாழணும்
ஐந்தாவது வரம் : ஔவையார் மாதிரி நல்ல படைப்புகள் எழுத வேணும்னு கேட்பேன்
ஆறாவது வரம் : எம்.எஸ்.சுப்புலட்சுமி குரல் வேணும்னு கேட்பேன் அவங்க குரலுக்கு நான் அடிமை
ஏழாவது வரம் : என்னுடைய கல்லூரி வாழ்க்கை வேனும்னு கேட்பேன்
எட்டாவது வரம் : என் வகுப்புத்தோழி (1 முதல் 10 வது வரை ஒன்றாக படித்தோம்) செல்வி யை பார்க்கனும்னு கேட்பேன். (10 வது
முடித்தபின் தொடர்பே விட்டு போய்விட்டது).
ஒன்பதாவது வரம்: திரும்பவும் குழந்தை பருவத்துக்கே மாறி அம்மா அப்பாவுடன் வாழனும்னு கேட்பேன்
பத்தாவது வரம் : எனக்காக திருமால் திரும்பவும் கண்ணன் அவதாரமெடுத்து அவரது குறும்புகளை பார்க்க ஆசைன்னு கேட்பேன்.
இந்த தேவதையை இப்போ ஒரு நாலு பேரோட ஆசைகளை நிறைவேற்ற அனுப்பிவைக்கிறேன் அவர்கள் ஆசையும் நிறைவேறுவதாக.....
1.ஷஃபிக்ஸ்
2.நிலாமதி
3.இயற்கை
4.சிங்கக்குட்டி
23 பேர் ருசி பார்த்தவர்கள்:
முதல் இரண்டாவது நாஙாவது வரங்கள் விரைவில் கிடைக்க வாழ்த்துகிறேன் சகோ.....
Wow superb, anaithu varangalum neerai vera yennoda vaazhthukals..
unga varangal anaithum super:)
/மணிமேகலை வைத்திருந்த அட்சயபாத்திரம் வேணும்னு கேட்பேன்,அனைவரும் பசியில்லாமல் வாழணும்/
அப்படியே அந்த அட்சயபாத்திரத்தில் மேனகாவின் போட்டோ ரெசிபி எல்லாம் சுட சுட கிடைத்தால் நல்லா இருக்கும்.
ம்ம் மேனகா எல்லா வரங்களும் அருமை.
வாழ்த்துக்கள்
அன்பும் பொது நலமும் நிறைந்த வரங்கள். வாழ்த்துக்கள் சகோதரி
எல்லா வரங்களும் நல்லா இருக்கு மேனகா..
இந்த வரங்கள் மூலம் தங்களைப் பற்றி மேலும் அறிந்ததில் மகிழ்ச்சி, எல்லா வரங்களும் நல்லா இருக்கு, உங்க வகுப்புத்தோழி இதை படிச்சு விரைவில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திட வாழ்த்த்க்கள்! என்னையும் தொடர் இடுகைக்கு அழைத்தற்க்கு நன்றி, விரைவில் பதிவிடுகிறேன் சகோதரி.
//எனக்காக திருமால் திரும்பவும் கண்ணன் அவதாரமெடுத்து அவரது குறும்புகளை பார்க்க ஆசைன்னு கேட்பேன்.//
நான் கண்ணனை வணங்குபவன். அடிக்கடி நான் இப்படித்தான் நினைப்பதுண்டு.
அத்தனை வரங்களும் அருமை...
தயவு செய்து இங்கே பாருங்களேன்!!
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும்,கருத்துக்களுக்கும்
நன்றி வசந்த்!!
நன்றி ப்ரியா!!
நன்றி ஷோபனா
செந்தில்குமார்!!(வருகைக்கும் நன்றி)!!
நன்றி ஹர்ஷினி அம்மா!! (வாங்க எங்க வீட்டுக்கு உங்களுக்கு பிடித்ததை செய்து தருகிறேன்)
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி நவாஸீதீன் ப்ரதர்!!
நன்றி பாயிஷா!!
நன்றி ஷஃபிக்ஸ் ப்ரதர்!!
//உங்க வகுப்புத்தோழி இதை படிச்சு விரைவில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திட வாழ்த்த்க்கள்!// மிக்க மகிழ்ச்சி+நன்றிகள்.உங்கள் வரங்களும் அருமை+சிந்திக்கத்தக்கவை.
நன்றி சந்ரு!! (எனக்கு கண்ணன் ரொம்ப பிடிக்கும்)
ஒரு நாள் ஜனாதிபதியாக கேட்பேன்.]]
நல்லது செய்ங்க.
ஆஹா மாமி வரங்கள் சூப்பர்ர்!!!விரைவில் எல்லாமே கண்ணன் அருளால் கிடைக்கட்டும்..நானா இருந்தால் முதல் வரமே என் மருமகள(உங்களையும் சேர்த்துதான்) நேர்ல பார்க்கனும்னுதான் கேட்டு இருப்பேன்..
//முதல் வரம் : மோட்சமடைந்த தந்தை மீண்டும் உயிருடன் வர கேட்பேன்.//
உங்களின் தந்தை பாசம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது...
//இரண்டாவது வரம் : பார்வையில்லாதவர்களுக்கு பார்வை அளித்து அவர்கள் இந்த உலகத்தை ரசிக்கவேண்டி கேட்பேன்.//
மிக உயரிய சிந்தனை மேனகா...
//மூன்றாவது வரம் : ஒரு நாள் ஜனாதிபதியாக கேட்பேன்.//
எதுக்குங்க?? ஒண்ணுமே பண்ணமுடியாதே!!
//நான்காவது வரம்: மணிமேகலை வைத்திருந்த அட்சயபாத்திரம் வேணும்னு கேட்பேன்,அனைவரும் பசியில்லாமல் வாழணும்.//
எண்ணம் நல்லா இருந்தாலும், யாருக்கும் பசியில்லையெனில், யாராவது உழைப்பார்களா??
//ஐந்தாவது வரம் : ஔவையார் மாதிரி நல்ல படைப்புகள் எழுத வேணும்னு கேட்பேன்//
இது ஓகே... நீங்க நல்லா, நிறைய நல்ல படைப்புகள் படைக்க ஆசிகள்...
//ஆறாவது வரம் : எம்.எஸ்.சுப்புலட்சுமி குரல் வேணும்னு கேட்பேன் அவங்க குரலுக்கு நான் அடிமை//
இப்போ எப்படி? ஏதாவது பாட்டு பாடினா, நாங்க கேப்போம்ல...
//ஏழாவது வரம் : என்னுடைய கல்லூரி வாழ்க்கை வேனும்னு கேட்பேன்//
ஏன்?? அங்க லூட்டி ஜாஸ்தியா?? ம்ம்... நடக்கட்டும்... நடக்கட்டும்...
//எட்டாவது வரம் : என் வகுப்புத்தோழி (1 முதல் 10 வது வரை ஒன்றாக படித்தோம்) செல்வி யை பார்க்கனும்னு கேட்பேன். (10 வது
முடித்தபின் தொடர்பே விட்டு போய்விட்டது). //
ஹலோ... யாரங்கே... எங்கே இருந்தாலும், செல்வியை மேனகாவுடன் தொடர்பில் இருக்க சொல்லவும்... ஹல்லோ... சொல்லிட்டேங்க... ஓகேவா!!
//ஒன்பதாவது வரம்: திரும்பவும் குழந்தை பருவத்துக்கே மாறி அம்மா அப்பாவுடன் வாழனும்னு கேட்பேன்//
இது நல்லா இருக்கே...பப்பு மம்மு... பிசைந்து யாராவது ஊட்டணுமா??
//பத்தாவது வரம் : எனக்காக திருமால் திரும்பவும் கண்ணன் அவதாரமெடுத்து அவரது குறும்புகளை பார்க்க ஆசைன்னு கேட்பேன்.//
கண்ணன் குழலின் பாடலுக்கு நீங்க அடிமையா?
மத்த நாலு பேரு என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்...
மேனகா வரங்கள் கிடைக்க வாழ்த்துக்கள்
மேனகா அனைத்து வரங்களும் அருமை.
நானும் அடிக்கடி பள்ளி தோழிகளை நினைப்பதுண்டு.
அப்பான்னா எல்லோருக்கும் உயிர் இல்லையா, அவர் என்றூம் உங்களுடன் தான் வாழ்ந்து கொண்டு இருப்பார் கவலை படாதீர்கள்.
நிச்சயமாக செய்வேன் ஜமால்,நன்றி!!
தங்கள் கருத்துக்கும்,ப்ரார்த்தனைக்கும் நன்றி மாமி!!
கோபி உங்கள் பின்னுட்டம் படித்து சிரித்துவிட்டேன்.
////மூன்றாவது வரம் : ஒரு நாள் ஜனாதிபதியாக கேட்பேன்.//
எதுக்குங்க?? ஒண்ணுமே பண்ணமுடியாதே!!// முடிந்தவரை நல்லது செய்வேன்.
//எண்ணம் நல்லா இருந்தாலும், யாருக்கும் பசியில்லையெனில், யாராவது உழைப்பார்களா??// மிக சரி.இப்படி நான் யோசிக்கவேயில்லை.
தங்கள் கருத்துக்கு நன்றி கோபி!!
தங்கள் வாழ்த்துக்கு நன்றி மலிக்கா!!
//அப்பான்னா எல்லோருக்கும் உயிர் இல்லையா, அவர் என்றூம் உங்களுடன் தான் வாழ்ந்து கொண்டு இருப்பார் கவலை படாதீர்கள்.// மிக்க நன்றி ஜலிலாக்கா.
உங்கள் விருப்பம் அனைத்தும் தேவதை நிறவேற்ற வேண்டுகிறேன்.
தங்கள் ப்ரார்த்தனைக்கு நன்றி கீதா!!
பத்து வரமா? ஹ்ம்ம்ம்ம்ம்?
1. Need to be always near my krishna as his eternal female consort
2. Wanna convey few things to someone :wink:
3. துக்கம் மனிதர்களை ஆட்கொள்ளக்கூடாது.
4. என்னால் இயன்றவரை பிறருக்கு உதவியாக இருக்கவேண்டும்.
5. எங்கும் அமைதியும் நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் பரவ வேண்டும்.
5. Disollution of total 'mine and my-ego'.
6. பிறவிகள் அற்று விட வேண்டும்.
8. avLo thaan.
//3. துக்கம் மனிதர்களை ஆட்கொள்ளக்கூடாது.
4. என்னால் இயன்றவரை பிறருக்கு உதவியாக இருக்கவேண்டும்.
5. எங்கும் அமைதியும் நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் பரவ வேண்டும்.//இந்த வரங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்!!
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சக்திப்ரபா.
Post a Comment