தே.பொருட்கள்:
முள்ளங்கி - 1 நடுத்தர சைஸ்
கடலைப்பருப்பு - 1/2 கப்
வரமிளகாய் - 4
பூண்டுப்பல் - 3
சின்ன வெங்காயம் - 7
சோம்பு - 1டீஸ்பூன்
இஞ்சி - சிறுதுண்டு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கொத்தமல்லித்தழை -சிறிது
செய்முறை :
*முள்ளங்கியை துருவி பிழிந்துக் கொள்ளவும்.
*கடலைப்பருப்பு 3/4 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் மிளகாய்+சோம்பு+இஞ்சி+பூண்டு+வெங்காயம்+உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
*கொத்தமல்லித்தழை+முள்ளங்கியை அரைத்த பருப்புடன் சேர்த்து எண்ணெயில் பகோடாகளாக பொரிக்கவும்.
பி.கு:
இந்த பகோடா மிகவும் க்ரிஸ்பியாக இருக்கும்.
25 பேர் ருசி பார்த்தவர்கள்:
Me the First?
Eppadiyo famous Blogger aaiteenga!!!
படத்தை பார்த்தால் உடனே சாப்ப்பிட வேண்டும் போல்
இருக்கிறது.....ஆனா என்ன பண்றது எங்க வீட்ல செய்யறதுக்கு
ஆளு இல்லையே.....??? நீங்க ஏதாவது ஹோட்டல் திறந்த
சொல்லுங்க...
Kalakareenga.. yevalo pudhu varieties.. super
முள்ளங்கில கூட பக்கோடா பண்ணலாமா. அதுசரி. அருமை.
கலக்குங்க மேனகா ...
WOw Menaga, naanum ithe pola than pakoda pannuven, naan already yen blogla post panniten, time irruntha check pannunga..here is the link: http://priyaeasyntastyrecipes.blogspot.com/2009/01/radish-pakodas.html
முள்ளங்கி பகோடா , நானும் காய் ஏதாவது சேர்த்து பகோடா செய்வதுண்டு.
இது கடலை பருப்பில் ம்ம் இன்னும் சூப்பரா இருக்கும்.
தொடருங்கள்.
This pakoda is looking diff ...surely it will give a diff taste right ...epadi pa epadi puthusu puthusa dishes koduikeereenga
மிக நன்று.
உடலுக்கும் நாவிற்கும்.
ஆமாம் ராஜ் நீங்க தான் பர்ஸ்ட்.நான் ப்ளாக் தொடங்கி 9 மாதம் தான் ஆகுது.அதுக்குள்ள எப்படி பேமஸாக முடியும்.நன்றி தங்கள் கருத்துக்கு.
மாமி கலக்குங்க!முள்ளங்கில பக்கோடவா? சூப்ப்ர்ர்ர்!! ஆனால் பக்கோடால முள்ளங்கி வாசம் வராதா? ஏன்னா எனக்கு அந்த வாடை பிடிக்காது..
சாப்பிட ஆசையிருக்கும் போது செய்து சாப்பிடங்க.எங்க வீட்டுக்கு வாங்க சுடச்சுட செய்து தரேன் ப்ரதர் உங்களுக்கு.ம்ம் சீக்கிரம் குடும்பஸ்தனகாக வாழ்த்துக்கள்.நானெல்லாம் ஒட்டல் திறந்தால் யார் வருவாங்க சாப்பிட.தங்கள் கருத்துக்கு நன்றி ஜெட்லி.
தங்கள் கருத்துக்கு நன்றி நித்யா!!
ஆமாம் ப்ரதர்,இதுல ரொம்ப க்ரிஸ்பியா இருக்கும்.தங்கள் கருத்துக்கு நன்றி நவாஸூதீன்!!
நன்றி சாரு!!
தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா.உங்களின் குறிப்பும் நன்றாகயிருக்கு.
தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!
தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியாராஜ் மற்றும் ஜமால்!!
பகோடால முள்ளங்கி வாசனைலாம் வராதுப்பா.நாம சொன்னால்தான் தெரியும் அது முள்ள்ங்கி பகோடான்னு.செய்து பாருங்க.தங்கள் கருத்துக்கு நன்றி மாமி!!
மேனகா உங்கள் ப்ளாக் அருமையாக இருக்கு,குறிப்புக்கள்,படங்கள் தெளிவாக இருக்கு.பாராட்டுக்கள்.முள்ளங்கி பக்கோடாவும் புதுமையாக இருக்கு.நிறைய ப்ளாக் அட்ரஸ் சுமஜ்லா ப்ளாக் மூலம் தெரிய வந்து ஒன்று ஒன்றாக விசிட் செய்கிறேன்.மிக்க மகிழ்ச்சி.
ஆசியாக்கா என் ப்ளாக் வந்து நீங்க கருத்து சொன்னதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.அடிக்கடி வாங்க.உங்கள் பாராட்டுக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியாக்கா.
முள்ளங்கியில் பக்கோடா ஒரு முறை செய்திருக்கிறேன்,
நல்ல ரெசிபி மேனகா
அசத்துங்க
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கவிதை அரசி மலிக்கா!!
முள்ளங்கியில் சாம்பார்தான் பார்த்திருக்கோம், பக்கோடாவும் இருக்கா, போட்டு பார்த்துடுவோம்.
இதில் பகோடா மிகவும் நன்றாகயிருக்கும்.செய்து பார்த்தால் அடிக்கடி நீங்க இதைதான் செய்வீங்க.தங்கள் கருத்துக்கு நன்றி!!
Post a Comment