Friday 9 December 2011 | By: Menaga Sathia

ஈஸி எலுமிச்சை ஊறுகாய்/Instant Lemon Pickle

இந்த செய்முறையில் ஊறுகாயை உடனே செய்து சாப்பிடலாம்.அடிக்கடி இப்படி எலுமிச்சை பழத்தை வேகவைத்து செய்து சாப்பிடுவது நல்லதல்ல.அவற்றின் சத்துக்கள் வேகவைக்கும் போது முற்றிலும் அழிந்துவிடும்.திடீர் அவசரத்திற்க்கு இந்த முறையில் செய்துக் கொள்ளலாம்.பச்சை எலுமிச்சையை விட மஞ்சள் கலர் கசக்காமல் இருக்கும்.

தே.பொருட்கள்
எலுமிச்சை பழம் - 4
கடுகுத்தூள்,வெந்தயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை
*தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை பழத்தை போட்டு மூழ்குமளவு கொதிக்கும் நீரை ஊற்றி 20 நிமிடம் வைக்கவும்.

*பின் பழத்தை கட் செய்து மிளகாய்த்தூள்+உப்பு+தாளித்த பொருட்கள்+எண்ணெய்(காய வைத்து ஆறவைக்கவும்) அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் ஊறுகாய் நான்தான்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

சிம்பிள் ஐடியா சூப்பருங்கோ...!!! இதை நானே செய்துருவேனே...!!!

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

முதல் ஊறுகாய் நான்தான்....!!!

தம்பி, இது பார் இல்லை.. ஃபேமிலி மெம்பர்ஸ்புழங்கர இடம் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>பச்சை எலுமிச்சையை விட மஞ்சள் கலர் கசக்காமல் இருக்கும்.

நோட் டவுன்

விச்சு said...

எளிமையான குறிப்பு. ஈசியா செய்யலாம்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

NICE

சசிகுமார் said...

அக்கா ஏன் தொடர்ந்து எழுதுறது இல்ல... ஏதாவது வேலை அதிகமா...

Unknown said...

மேனகா உங்களுக்காக செய்ததா? ம்ம்ம்

Kitchen Chronicles said...

Oorugaai naaku oorudhu. supera irukkudhu.

Unknown said...

I am bookmarking it right away. I love lemon pickle but I am not satisfying with taste of store bought one. I do not get big quantity of lemons for trying the pickle in our traditional way. I'll prepare this way hereafter.Thanks for sharing the +ve and -ve fact of it.

பொன் மாலை பொழுது said...

ஊறுகாய் எல்லாம் இருக்கட்டும், நானே மீண்டும் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டேன்.நீங்கள் எல்லாம் ஏன் இன்னமும் திரும்பிவராமல் மக்கர் பண்ணுகிறீர்கள். பழைய நண்பர்கள் மீண்டும் சந்தித்தது போல உள்ளது மேனகா.:))

பொன் மாலை பொழுது said...

இனிமேல் செய்முறை குறிப்போடு அதன் படமும் வைக்கும் பொது பக்கத்தில் ஒரு அப்பள குழவி ஒன்றையும் போட்டு வைக்கவும்.
பக்ரைனில் இருந்து ஒரு குரங்கொன்று வருமே அதை சாத்தத்தான்.

Sangeetha M said...

easy instant pickle...thanks for sharing !!
Spicy Treats
Ongoing Event : Bake Fest # 2
Do participate in My 300th Post Giveaway

Priya Suresh said...

Super o super, mouthwatering here..

பித்தனின் வாக்கு said...

uurukai super, enakku nalla side dish aachu....

ada thayir sathaththukku intha uurukaithan enakku side disha pudikkumnu solla vanthen.

neenga vera ethaiyavathu ninaichukathinga......

ponnu nalla irukkangala...

How is Mr.Sathiya?.

Asiya Omar said...

பார்க்கவே பளிச்சுன்னு,என்னமோ!ஊறுகாய் பார்க்க அழகாக இருந்தால் தொட்டுக் கொள்ளத் தோன்றும்.அருமை.

எம் அப்துல் காதர் said...

Nice n taste post menaga!

Suresh Subramanian said...

nice.. thanks to share... please read my tamil kavithaigal in www.rishvan.com

Jaleela Kamal said...

SSS தயிர் சாதததுக்கு சூப்பரா இருக்கும்.மசக்கை காரவுங்க்ளுக்கு சூப்ப்ரா இருக்கும்.

Priya Sreeram said...

looks fingerlicking good- nice recipe

MyKitchen Flavors-BonAppetit!. said...

Wow!.Luv it.Naakku Uruthu Unga Urukai Parthu.Yummy.

Mahi said...

ஷார்ட் கட் ஊறுகாய்!:) நல்லா இருக்கு மேனகா!

01 09 10