Monday, 19 December 2011 | By: Menaga Sathia

பட்டர் பீன்ஸ் புலாவ்/Butter Beans Pulao

எப்பொழுதும் ஒரேமாதிரி புலாவ் செய்வதற்கு பதில் பருப்பு வகைகள் சேர்த்து செய்யலாம்.நன்றி ஷோபனா!!

தே.பொருட்கள்
பட்டர் பீன்ஸ் - 1 கப்
பாஸ்மதி - 2 கப்
வெங்காயம் - 1 நீளவாக்கில் நறுக்கியது
தக்காளி -1 பொடியாக நறுக்கியது
புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
மஞ்சள்தூள்,கரம்மசாலா - தலா 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டுப்பல் - 4
சோம்பு - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 5

செய்முறை

*பட்டர் பீன்ஸை முதல்நாள் இரவே ஊறவைத்து,உப்பு சேர்த்து குக்கரில் 1 விசில் வரை வேகவைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய் தவிர அனைத்தையும் நைசாக அரைத்து,கடைசியாக தேங்காய்த்துறுவல் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம்+உப்பு+அரைத்த மசாலா+கரம் மசாலா+மஞ்சள்தூள் +தக்காளிஎன ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் புதினா கொத்தமல்லி+வேகவைத்த பட்டர் பீன்ஸ்+அரிசி சேர்த்து வதக்கவும்.

*பட்டர் பீன்ஸ் வேகவைத்த நீரையும்  சேர்த்து 3 கப் நீர் சேர்த்து 10 நிமிடம்வரை வேகவைக்கவும்.

*ராய்தா அல்லது வறுவலுடன் பரிமாறவும்.

14 பேர் ருசி பார்த்தவர்கள்:

Thozhirkalam Channel said...

ருசி அருமையாக இருக்கிறது...

சிறந்த பதிவுகளை வரவேற்கிறோம்..

Lifewithspices said...

i love butter beans so much.. nice dish simple but too tasty..looking

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

வித்தியாசமா இருக்கு.. பீன்ஸ் புலாவ்..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

போட்டோ பார்த்தது பசி எடுக்குதே அவ்வ்வ்வ்...!!!

Kurinji said...

Parkumpothe suvaikka thoonduthu Meenaga....
kurinjikathambam

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி - ஷோபனா - சசிகா - மேனகா

சி.பி.செந்தில்குமார் said...

raaythaa=??ராய்தா =??

Priya Suresh said...

Mouthwatering here, super delicious pulao.

Kanchana Radhakrishnan said...

வித்தியாசமா இருக்கு.

Chitra said...

super yummy pulao. colorful :)

Sangeetha M said...

very nice recipe...looks inviting!!

Spicy Treats
Ongoing Event : Bake Fest # 2
Do participate in My 300th Post Giveaway

வேலன். said...

ரெசிபி அருமை சகோதரி...
வாழ்க வளமுடன்
வேலன்.

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு. நன்றி மேனகா.

01 09 10