Monday 17 August 2009 | By: Menaga Sathia

கோதுமை ரவா ஓட்ஸ் அடை

தே.பொருட்கள்:

கோதுமை ரவை - 1 கப்
ஒட்ஸ் -1/2 கப்
தோல் பாசிப்பருப்பு -1/4 கப்
சன்னா - 1 கைப்பிடி
கொள்ளு - 1/4 கப்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
பெருங்காயம் -சிறிது
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 1 1/2 டீஸ்பூன்

செய்முறை:

*சன்னாவை முதல்நாள் இரவே ஊறவைக்கவும்.

*ஒட்ஸை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*கோதுமை ரவை+பாசிபருப்பு(தோலுடன் அரைக்கவும்)+கொள்ளு இவற்றை 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

*இவற்றுடன் சன்னா+காய்ந்த மிளகாய்+உப்பு+சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

*இதனுடன் பொடித்த ஒட்ஸை கலக்கவும்.

*அரைத்த மாவை மெல்லிய அடைகளாக ஊற்றி எடுக்கவும்.

*சட்னியுடன் பரிமாறவும்.

பி.கு:

1.விருப்பப்பட்டால் கடுகு+உளுத்தம்பருப்பு+வெங்காயம்+கறிவேப்பில்லை தாளித்து சேர்க்கலாம்.

2.டயட்டில் இல்லாதவர்கள் தேங்காய் சேர்த்து செய்யலாம்.

11 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

மேனகா...ஆரம்பித்து விட்டிங்களா...டயட்டினை......எப்படி போகின்றது டயட்...

சுவையாக இருக்கின்றது..இந்த அடை...

Unknown said...

மாமி டயட்டா? சொல்லவே இல்ல? எப்போ இருந்து இந்த கெட்ட பழக்கம்? (சும்மாதான் மாமி)...டேஸ்டா இருக்கும்னு நினைக்கிறேன்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னங்க.. டையட்டா? கலக்குங்க...

நட்புடன் ஜமால் said...

அடை - செய்து பார்க்கனும்.

அந்த சட்னிக்கு ஏற்கனவே எதுனா பதிவு போட்டு இருந்தால் சுட்டி கொடுத்திடுங்களேன்.

. said...

புதுசு புதுசா சொல்லித் தரீங்க!! :) நன்றிங்க... :) (நான் சைவம் மட்டும் தான் சாப்பிடுவேன் ங்க.. அதான் கொஞ்ச நாள் உங்க பக்கம் வரல.. உங்க குறிப்போட தலைப்ப மட்டும் படிச்சிட்டு escape ஆயிட்டேன்!! :))

Menaga Sathia said...

ஆமாம் கீதா,டயட் ஆரம்பித்தாச்சு.பரவாயில்லை.அதுக்குள்ள வெயிட் குறைஞ்ச மாதிரி ஒரு பீலிங்.ஹி ஹி!!நன்றி கீதா.

Menaga Sathia said...

என்ன பண்றது மாமி கெட்ட பழக்கமெல்லாம் சீக்கிரம் ஆரம்பித்து விடனும்.இப்ப சொல்லிட்டேன் பாருங்க.4 நாளா டயட் இருக்கேன்பா.டேஸ்ட் ரொம்ப நல்லாயிருக்கும் மாமி,நன்றி!!

Menaga Sathia said...

ஆமாங்க டயட் தான்,நன்றி ராஜ்!!

Menaga Sathia said...

அடை செய்து பாருங்க ஜமால்,நன்றாக இருக்கும்.இந்த சட்னிக்கு நான் பதிவு போடவில்லை.விரைவில் இந்த சட்னி குறிப்பு போடுகிறேன்.நன்றி ஜமால்!!

Menaga Sathia said...

பிரியங்கா நானும் உங்க கட்சிதான் அதாவது சைவம்தான்.ஹஸ்காக நான் வெஜ் செய்வேன்.அசைவமும் சாப்பிடுவேன் நான்,ஆனா விரும்பி சாப்பிடுவது சைவம் தான்.நன்றி பிரியங்கா!!

Menaga Sathia said...

நன்றி ராம்!!

01 09 10