Friday 21 August 2009 | By: Menaga Sathia

தக்காளி தோசை

தே.பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1/4 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
அரிசி - 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி - 2
காய்ந்தமிளகாய் - 4
முளைகட்டிய பயிறு வகைகள் - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:

*கடலைப்பருப்பு+துவரம்பருப்பு+அரிசி+காய்ந்த மிளகாய் இவற்றை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

* ஊறியதும் இதனுடன் உப்பு+முளைகட்டிய பயிறு வகைகள்+தக்காளி சேர்த்து அரைக்கவும்.

*தக்காளி சேர்ப்பதால் தண்ணீர் ஊற்றி அரைக்கத் தேவையில்லை.

*அரைத்த மாவை 1 மணிநேரம் புளிக்க வைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றவும்.

கவனிக்க:

இதற்க்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை,அப்படியே சாப்பிடலாம் புளிப்பு சுவையுடன் மிருதுவாக நன்றாக இருக்கும்.காரம் வேண்டுமானால் அதிகமாக மிளகாய் போட்டுக் கொள்ளவும்.

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

ப்ரியமுடன் வசந்த் said...

நெய் தோசை
வெங்காய தோசை
மசாலா தோசை
வரிசையில்

தக்காளி தோசை புதுமையா இருக்கு...

Jaleela Kamal said...

mmm yummy

நட்புடன் ஜமால் said...

தக்காளி பிடிப்பதில்லை

ஆனால் படிப்பதுண்டு

:)

Sanjai Gandhi said...

good..

Menaga Sathia said...

செய்து பாருங்க வசந்த்,ரொம்ப ஈசி.தங்கள் கருத்துக்கு நன்றி வசந்த்!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜமால்!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

mmmmm..............:))))))))))))))

GEETHA ACHAL said...

எனக்காக இன்று , இந்த தக்காளி தோசை செய்து வெளியிட்ட அருமை மேனகா அக்கா...அருமை...

இன்று கண்டிப்பாக இந்த தோசை பதிவு வரும் என்பதால், நேற்றே தக்காளியினை நிறையவே வாங்கி வந்துள்ளேன்...

இன்றைக்கு மதியம் செய்துவிட்டு சொல்லுறேன்...நன்றி..

UmapriyaSudhakar said...

மேனகா எனக்கு தோசை ரொம்ப பிடிக்கும்.இன்று கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.ரித்திக் சாப்பிடுவானானு தெரியல. இதனுடன் தேங்காய் சேர்க்கலாமா?

Unknown said...

ஹை தக்காளி தோசை நல்லா இருக்கு மாமி!!உங்க மருமகன் தான் ரெட் கலர்ல இருக்கு,காரமா இருக்கும்னு சொல்றான்!!அது தக்காளிடானு விளக்கம் கொடுத்துகிட்டே இந்த பதிவு!!

Menaga Sathia said...

நன்றி ராஜ்!!

Menaga Sathia said...

நன்றி கீதா,உங்களுக்காக தான் இன்னிக்கு இந்த போஸ்ட் போட்டேன்.

Menaga Sathia said...

நான் டயட்டில் இருப்பதால் தேங்காய் சேர்க்கவில்லை உமா,சேர்ககாமலும் நன்றாக இருந்தது.இன்னிக்கு நிறைய வேலை அதனால்தான் பதில் லேட்டாக போடுகிறேன்.சாரிப்பா!!செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

Menaga Sathia said...

ஹா ஹா மருமகன் சொன்னதை நினைத்து ஒரே சிரிப்பு.நன்றாகயிருக்கும் மாமி செய்து பாருங்க.

Menaga Sathia said...

நன்றி மாமி தங்கள் கருத்துக்கு!!

Nithya said...

Super ah irukku thakali dosai. Unga blog migavum arumayaaga iruku.

Mudhal murayaaga ungal blogai paarkiren. Arumayaaga irukiradhu. Meendum meedum varuven. :) Keep going.


Do take a peep into my blogs when you find time.

Nithya
www.4thsensesamayal.blospot.com
www.nitsarts.blogspot.com

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நித்யா!!

உங்க ப்ளாக் மிகவும் அழகாக இருக்கு!!

Menaga Sathia said...

நன்றி சஞ்சய் காந்தி தங்கள் கருத்துக்கும்,வருகைக்கும்..

Unknown said...

totally useful and easy understanding for new comers(cooking).i love this website.sridevipandian

01 09 10