Monday 10 August 2009 | By: Menaga Sathia

சென்னா+கொள்ளு வடை (அவன் செய்முறை ) /Channa Horsegram Vadai

தே.பொருட்கள்:

சென்னா(கொண்டைக்கடலை) - 1 கப்
கொள்ளு - 1/2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித் தழை - சிறிது
பெருஞ்சீரகம் - 1டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:

*சென்னா+கொள்ளு முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

*மறுநாள் ஊறவைத்த பருப்புகளை உப்பு+பெருஞ்சீரகம் சேர்த்து நீர்விடாமல் கொரகொரப்பாக கெட்டியாக அரைக்கவும்.

*அதனுடன் பொடியாக அரிந்த வெங்காயம்+மிளகாய்+கொத்தமல்லித்தழை சேர்த்து பிசையவும்.

*அவன் ட்ரேயில் அலுமினியம் பேப்பரை போட்டு 1 டீஸ்பூன் எண்ணெய் தடவி விடவும்.
*மாவை வடைகளாக தட்டி அதில் வைத்து ஒவ்வொரு வடையின் மேல் 1 சொட்டு எண்ணெய் விடவும்.

*300° முற்சூடு செய்த அவனில் 15 நிமிடம் வைக்கவும்.

*15 கழித்து அவனைத் திறந்து வடைகளை திருப்பிவிட்டு ஒவ்வொரு வடையின் மேல் 1 சொட்டு விடவும்.



*மீண்டும் ஒரு 10 நிமிடம் கழித்து எடுக்கவும்.

*இப்போழுது சுவையான வடை ரெடி.

பி.கு:

இந்த வடை எண்ணெயில் பொரித்த மாதிரியே மிக நன்றாக இருக்கும்.
வடைகளை எண்ணெயில் பொரிப்பதாக இருந்தால் சென்னாவை மட்டும் முதல் நாள் இரவே ஊறவைக்கவும்,கொள்ளை காலையில் ஊறவைத்து செய்யவும் இல்லையெனில் வடை அதிகம் எண்ணெய் குடித்து சதசதன்னு இருக்கும்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

இங்கேயும்

பாருங்களேன்

Jaleela Kamal said...

மேனகா எண்ணை அதிகம் இல்லாதா சத்தான வடை.பார்க்க‌வே ரொம்ப‌ அருமையாக‌ இருக்கு

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றிங்க!!!

சப்ராஸ் அபூ பக்கர் said...

சமைத்து சாப்பிட்டு விட்டாப் போச்சு....

வாழ்த்துக்கள்....

Admin said...

உங்கள் படங்களைப்பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்ற ஆசையை தூண்டுகின்றது...

Menaga Sathia said...

நீங்கள் குடுத்த லிங்க் பார்த்தேன் ,நன்றாகயிருந்தது.பகிர்ந்தமைக்கு நன்றி ஜமால்!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி

@ஜலிலாக்கா!!

@ராஜ்!!

@சப்ராஸ் அபூ பக்கர்!!

@சந்ரு!!

2009kr said...

படிக்றப்பவே ஆசையா இருக்கு சாப்பிட்டு வந்து சொல்கிறேன்

Menaga Sathia said...

மறக்காமல் சாப்பிட்டு சொல்லுங்கள்,தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி2009kr!!

சாராம்மா said...

dear menaga,

today i did it ,it came out very well.my hus and my children are liked very much.thanks for ur recipe.

anita

Menaga Sathia said...

செய்துப் பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி.அனைவருக்கும் பிடித்ததில் சந்தோஷம்.நன்றி அனிதா!!

Unknown said...

It looks good, i'm eager to do this, but in my oven max preheat temp is 200 only, can i do with that? Please reply, i'll wait for ur reply comment.. Thanks

Menaga Sathia said...

300டிகிரிக்கு 25 நிமிடம் டைம் செட் செய்து செய்தேன்.உங்க அவனில் 200 டிகிரி தான் என்றால் டைம் இன்னும் 15 நிமிடம் அதிகமாக செட் செய்து பாருங்கள்.சரியாக வந்ததா என்று செய்து பார்த்து சொல்லுங்க.நன்றி ஷாலினி தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்...

Unknown said...

Thanks Mrs. Menaga. நான் செய்து பார்தேன். டைம் அதிகமாக செட் செய்தேன். ருசி மிகவும் அருமை. ஆனால் தண்ணீர் பதம் குறைவாக இருந்ததால் விரிசல் விரிசலாக இருந்தது. அதேசமயம் எண்ணெயில் பொரித்து பார்த்தேன் உதிந்து விட்டது. அடுத்த முறை அசத்தலாக செய்து அனைவரையும் அசத்துவேன். நன்றி.

Menaga Sathia said...

நன்றி ஷாலினி செய்து பார்த்து மறக்காமல் பின்னுட்டம் அளித்ததற்க்கு.

நாம் எப்போழுதும் வடைமாவுக்கு அரைக்கும் பதத்திலேயே செய்யவும்.தண்ணீர் குறைவாக இருந்தமாதிரி இருந்தால் லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து இருக்கலாமே.ஆனாலும் வடைமாவுக்கு அதிகம் தண்ணீரும் இருக்ககூடாது.

தண்ணீர் அதிகமாக இருந்தால் கொஞ்சம் அரிசிமாவு கலந்து ப்ரிட்ஜில் வைத்துவிட்டு சுடவும்.

அடுத்தமுறை நான் செய்ததைவிட இன்னும் நன்றாக செய்து அனைவரையும் அசத்துவீங்கள் பாருங்களேன்..

Indiatastes said...

Nice helathy protin snack. I want to try.

Menaga Sathia said...

செய்து பார்த்து சொல்லுங்கள் .நன்றி தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் Indiatastes...

Unknown said...

i want to buy oven.but i dont know which is the best?electric oven,microvave,and toasster oven.pls guide and tell me menaga.i am fan of ur dishes.every dishes i am try.very tasty and enjoying our family.

Menaga Sathia said...

மல்லிகா electric oven தான் பேக்கிங்,ரோஸ்ட் ஐயிட்டம்ஸ்லாம் நல்லது.அதையே வாங்குங்கள். microvave அவனில் கூடுமானவரை உணவு பதார்த்தங்களை சூடு செய்வதற்க்கு மட்டும் பயன்படுத்துங்கள்.அதில் சமைப்பது நல்லதும் இல்லை.நானும் அதில் சூடு செய்வதோடு சரி.toasster oven இந்த அவனை விட எலக்ட்ரி வனிலியே எல்லா ஆப்ஷன்களும் இருக்கும்.அதனால் எலக்ட்ரிக் அவனே பெஸ்ட்...என் சமையலை செய்து பார்ப்பதில் சந்தோஷமா இருக்கு..மிக்க நன்றி மல்லிகாஸ்ரீ!!

01 09 10