Saturday 22 August 2009 | By: Menaga Sathia

லூர்துமாதா வரலாறு -3 பிரான்ஸ்

லூர்துமாதா வரலாறு -1 பிரான்ஸ்
லூர்துமாதா வரலாறு -2 பிரான்ஸ்

சுற்றி நின்றிருந்த மக்களுக்கு மாதாவைக் காண முடியாவிட்டாலும்,மாதாவை தரிசித்துக் கொண்டிருக்கும் பெர்னாடெட்டின் பரவசமான முகம் தெரியவே,அவர்கள் உடல் புல்லரித்தது.அதற்கு அடுத்த நாள், 18 வது தரிசனம் கேவ் நகரின் அக்கரையில் உள்ள புல்வெளியில் பெர்னாடெட்டுக்குக் கிடைத்தது,இதுவரை தன் வாழ்நாளில் என்றுமே கண்டிராத அளவு அழ்கும்,கருணையும் ததும்பும் மாதாவைக் கண்டாள்.

மூத்த பிஷப்புகளையும்,மூத்த பாதிரியர்களையும் பல பெரியோர்களையும் அறிஞர்களையும் தேடி சந்தித்து ,தனக்கு 18 முறை மாதா தரிசனம் அளித்ததையும்,ஊற்று நீரின் மகிமையை விளக்கியதையும்,தனக்கு கோயில் எழுப்புமாறு கூரியதையும் எடுத்துக் கூறினாள்.ஆனால் அவள் வார்த்தைகளை உடனே நம்ப அவர்கள் தயாராக இல்லை.

"மாதாவின் வார்த்தைகளை உங்களிடம் எடுத்துக் கூறுவது மட்டுமே என் வேலை.நம்புவதும்,நம்பாமலிருப்பதும் உங்கள் இஷ்டம் "என்று ஒதுங்கி விட்டாள் பெர்னாடெட்.அவளது வார்த்தைகளை வழக்காக பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது.இதற்கிடையில் நோயினால் பாதிக்கப்பட்ட பலர்,ஊற்று நீரைப் பருகி,மாதாவை வேண்டி பல வகையான நோய்களிலிருந்து குணமடையத் தொடங்கினார்கள்.பொது மக்களின் நம்பிக்கை பெருகி,பலரும் மாதாவை தரிசித்த பெர்னாடெட்டை நாடி வணங்கத்தொடங்கினர்.

மிகவும் வறுமையான சூழ்நிலையில் இருந்த போதும்,தன்னையோ தன் குடும்பத்தையோ வியாபாரப் பொருளாக பொதுமக்கள் மாற்றுவதை விரும்பாத பெர்னாடெட் லூர்ட்ஸ் நகரிலிருந்து நெவர்ஸ் என்ற நகருக்குச் சென்று,அங்குள்ள கிறிஸ்துவ மிஷனின் கான்வெண்ட்டில் சேர்ந்து உடல்நலம் குன்றியவர்களுக்காகச் சேவை செய்யத் தொடங்கினாள்.திரும்ப லூர்ட்ஸ் நகருக்கு வராமலேயே 1879ம் ஆண்டில் தன் 35 வதுவயதில் உயிர்நீத்து அவ்வுலகில் இன்பம் பெற மாதாவை சரணடைந்தாள்.
நெவர்ஸ் கான்வெண்ட்டிலேயே புதைக்கப்பட்ட அவளது உடல்ன,கோயில் கட்டுவதற்காக வாதாடப்பட்ட வழக்கிற்காக 1909ம் ஆண்டு ஒரு முறையும்,1919ம் ஆண்டு ஒரு முறையும் வெளியே எடுக்கப்பட்டது.சிறிதளவு கூட பழுதடையாமல் அவள் உடல் இருந்ததைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.புனிதமேரி மாதாவின் அருள் பூரணமாகப் பெர்னாடெட்டின் மேல் இருப்பது அனைவருக்கும் தெளிவாயிற்று.

லூர்ட்ஸ் நகரில் மாதாவின் விருப்பபடி மிகப் பெரிய ஆலயம், 3 நிலையில் எழுப்பப்பட்டுள்ளது.உலகெங்கிலிருந்தும் மக்கள் திரளாக வந்து மாதாவை வணங்கி ஊற்றுநீரைப் பருகி பலவிதமான நோய்களிலிருந்து குணமடைந்துள்ளனர்.நோயாளிகள் பலர் மாதாவின் கருணையை நாடி ஸ்ட்ரெச்சரில் டிரிப் பாட்டிலுடனும்,சக்கர வண்டிகலீல் ஊனமுற்றவர்களும் திரளாக வருவதை இங்கு காணலாம்.

கைகால் முறிவு,கண்பார்வை பாதிப்பு,காசநோய்,ஆஸ்துமா,பாரிசவாயு,உடலில் பல இடங்கலீல் ஏற்பட்டுள்ள ட்யூமர் என்ற கட்டிகள் எனப் பலவித நோய்களில் இருந்து குணமடைந்த, பல நோயாளிகள் ஊற்று நீரின் பிரசித்ததை கோயிலின் ரிஜிச்தரில் பதிவு செய்துள்ளனர்.பிப்ரவரி 12ம் தேதி பெர்னாடெடிற்க்கு மாதாவின் முதல் தரிசனம் கிடைத்த நாள் "உலக நோயாளிகளின் நாளா"கக் கருதப்படுகிறது.

4,000 மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்த லூர்ட்ஸ் நகரம் இன்ரு மிக் முக்கியமான புண்ணியஸ்தலமாக பிரபலமடைந்துவிட்டது.பல்வேறு யாத்ரீகர்கள் வந்து தங்குவதால்.பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரத்திர்க்கு அடுத்தபடியாக இங்குதான் 270 ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளன.ஒவ்வொரு சீஸன் எனப்படும் பருவகாலத்திலும் 6 மில்லியன் கடிதங்கள் நோயாளிகளிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் பிரார்த்தனையாக வந்து சேர்கிறது.இண்டர்நெட்டின் மூலமாகவும் பிரார்த்தனைகள் பதிவு செய்யப்படுகின்றன.அவை மாதாவின் பாதத்தில் சமர்ப்பிக்கபடுகின்றன.

இந்த ஆலயம் அமைந்துள்ள ஊரினை "துலூஸ்" (TOULOUSE) என்றா நகரத்திற்கு விமானம் மூலம் சென்ரால்,அங்கிருந்து சாலை வழியாக சென்றடையலாம்.வழியெங்கும் இயற்கை காட்சிகளே நம்மை நோயிலிருந்து பாதி விடுபடச்செய்யும்.போகும் போது கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டியது புனித ஊற்றுநீரை நிரப்பி வரத் தேவையான பாட்டிலகள் அல்லது ஜெரிகேன்கள்!மாதா பெர்னாடெட்டிற்கு காட்சியளித்த குகையைத் தொட்டுப் பரவசமடையலாம்.பெழுகுவர்த்திகளை நாமே பணம் போட்டு எடுத்துச் சென்று மாதாவின் முன் ஏற்றலாம்.

யாத்ரீகர்களின் பேரில் ஆலயம் கொண்டுள்ள அளவற்ற நம்பிக்கையினால் நம்மைக் கட்டுப்படுத்த,மெழுகுவர்த்தி விற்க, புனித நீரை நிரப்ப எங்கும் ஆட்களில்லை.புனிதநீர் சிறிய ஊற்றில் பொங்குவதை கண்ணாடி வழியே காணலாம்.அந்நீரை பல்வேரு குழாய்களில் பொதுமக்கள் சிரமமின்றி பிடித்துக் கொள்ள குழாய்கள் பல அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விஞ்ஞான யுகத்தில் இன்னும் நடந்து கொண்டிருக்கும் தெய்வீக அற்புதங்களஒ அங்கு காணலாம்.இந்த புனிதமாதாவை தரிசிக்க விரும்புபவர்கள் இந்தியாவில் கூட தரிசிக்கலாம்.புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் என்னும் நகரத்தில் லூர்துமாதா கோயில் இருக்கு.பிரான்ஸ் நாட்டிலிருந்து மாதாவின் சிலை வரவைக்கப்பட்டு இங்கு கோயில் அமைந்துள்ளது.நாமும் மாதாவை தரிசித்து அவர்களின் அருளை பெறுவோம்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

கட்டுரை அருமையாக இருக்கு..

Jerry Eshananda said...

திஸ் வில் பி எ "மேக்னம் ஒபஸ்" .சகோதரியே வணக்கம்,இந்த பதிவு அசாதாரணம்.
நீங்கள் செய்திருக்கும் செயலும் அசாதாரணம்.ஐம் பூதங்களால் ஆன இந்த இயற்கை
தனது அளப்பரிய சக்தியை, புலன்களுக்கு புரிபடாத அதிசய குணமளிக்கும் வல்லமையை,மிக சில இடங்களிலும்,மிக சிலருக்கும் வெளிப்படுத்தும்.அதில் இந்த தெய்வீக திருத்தலமும் ஓன்று.இன்னும் சில ஆண்டுகளில் நாங்களும் வர உள்ளோம்.மூன்று பதிவையும் படித்தேன்.உங்கள் செயலில் பிரமித்தேன்.
அன்புடன்:"ஜெரி".

Admin said...

பல விடயங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது பகிர்வுக்கு நன்றிகள்..

நிலாமதி said...

மேரி மாதாவின் புதுமை பற்றிய உங்கள் கட்டுரை அருமை . தெய்வ கடாட்சம் உங்கள் மீது இருக்கட்டும் .மாதாவின் புதுமைகளை பரப்புங்கள். உலகம் அழிவு பாதையில் செல்கிறது . புதுமைகள் மூலம் உலகம் திருந்த வேண்டும். பதிவுக்கு நன்றி . கடவுளின் அருள் கிடைக்கட்டும்.

Selvaraj said...

உங்களுக்கு நன்றி!
மிகவும் அற்புதமாக சொல்லியுள்ளீர்கள். நான்கூட போகவேண்டுமென நினைத்துள்ளேன். இருந்தாலும் இதை படிக்கும்போது சீக்கிரம் போக வேண்டும்போல் உள்ளது. ஆனால் வில்லியனூர் மாதாவை தரிசித்துள்ளேன்.

Selvaraj said...
This comment has been removed by the author.
புருனோ Bruno said...

//48 வது தரிசனம் //

?? 18

--

செய்தியை பகிர்ந்ததற்கு நன்றி

சயந்தன் said...

சென்ற திங்கட்கிழமை சென்றிருந்தேன். சென்று வந்தபிறகும் பெரிதாக வரலாறு தெரியாத நிலையில் இந்த பதிவில் இருந்து அறிந்து கொண்டேன். நன்றி

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி பாயிஷா!!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஜெரி!!

Menaga Sathia said...

நன்றி சந்ரு!!

Menaga Sathia said...

உங்கள் பிரார்த்தனைக்கும்,கருத்துக்கும் நன்றி நிலாமதி!!

Menaga Sathia said...

சீக்கிரம் மாதவை தரிசிக்க பிரார்த்திக்க்றேன்,தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி செல்வராஜ்!!

Menaga Sathia said...

தவறை சுட்டிக் காட்டியதற்க்கு நன்றி.இப்போ திருத்திவிட்டேன்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி புருனோ!!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சயந்தன்!!

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருந்துச்சு , மாதாவை பற்றி தெரிந்து கொள்ள ஒரு அருமையான வாய்ப்பு .

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருந்துச்சு , மாதாவை பற்றி தெரிந்து கொள்ள ஒரு அருமையான வாய்ப்பு .

Menaga Sathia said...

நன்றி சாரு!!மாதாவை பற்றி தெரிந்துக் கொண்டதில் மகிழ்ச்சி.

நித்தி said...

பயனுள்ள புனிதமான கட்டுரை...இதை நான் தமிழிஷ் இல் பார்த்து உங்களின் வலைப்பூங்காவிற்க்கு வருகை தந்திருக்கிறேன். அற்புதமான கட்டுரை, இந்து குடும்பத்தில் பிறந்திருந்தாலும் லூர்து மாதாவின் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருக்கிறோம்...கடுங்குளிரில் lourdes க்கு சென்று தேவாலயத்தில் உள்ள‌ ஊற்றுத் தண்ணீரில் குளித்த அனுபவம் இருக்கிறது..ஆனாலும் அந்த நேரத்திலும் குளிர் தெரியாது இது தான் தெய்வ சக்தி....... தொடர்ந்து எழுதவும்.....

நன்றி
நித்தியானந்தம்
www.pudhuvai.com

Menaga Sathia said...

ஆமாம் நீங்க சொல்வது போல் கடுங்குளிரில் குளித்தாலும் குளிர் தெரியாது.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நித்யானந்தம்.உங்கள் ப்ளாக் நன்றாக உள்ளது.

Biruntha said...

சகோதரி,
உங்களின் லூர்ட்ஸ் மாதாவைப் பற்றிய தொடர் அருமை. நன்கு விளக்கத்துடன் லூர்ட்ஸ் மாதாவின் வரலாற்றை எழுதியுள்ளீர்கள். அத்துடன் அங்கு எப்படிச் செல்வது, மற்றும் தேவாலயத்துடன் எப்படித் தொடர்பு கொள்வது எம் வேண்டுதல்களை எப்படி அனுப்பி வைப்பது போன்ற விளக்கங்களுடன் தந்தால் பலருக்கு உதவியாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
இது என் சிறிய அபிப்பிராயம். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

பிருந்தா

Menaga Sathia said...

சகோதரி பிருந்தாவுக்கு லூர்து மாதா கோயிலுக்கு செல்ல ப்ரான்ஸிலிருந்து விமானம்,ட்ரெயின் பல போக்குவரத்துக்கள் இருக்கு.நீங்கள் எங்கு இருக்கிங்கன்னு தெரியல.வேண்டுதல்களை எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.எனக்கு இன்னும் விபரங்கள் தெரிந்தால் பின்னுட்டத்தில் தெரிவிக்கிறேன்.நீங்கள் நெட்ல Lourdes pilgrimage.fr or lourdes info என்று தேடிப் பாருங்கள்.தங்களுக்கு தேவையான விபரங்கள் கிடைக்கலாம்.மேலும் ஏதாவது சந்தேகம்னா கேளுங்க சொல்றேன்.நீங்கள் கேட்டதில் எந்த தவறும் இல்லை.மன்னிப்பெல்லாம் கேட்காதீர்கள் என்னுடைய வேண்டுகோள் பிருந்தா.
நன்றி!!

Biruntha said...

நீங்கள் தந்த தகவலுக்கு மிக்க நன்றி சகோதரி.

பிருந்தா

mary said...

essay is very nice thanks for information if you can give more details about mary madha .

01 09 10