Tuesday 18 August 2009 | By: Menaga Sathia

ஒட்ஸ் பிஸிபேளாபாத்

தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1கப்
அரிந்த கத்திரிக்காய்,முருங்கைக்காய்
பீன்ஸ்,கேரட் கலவை -- 1 கப்
வேகவைத்த துவரம் பருப்பு - 1/2 கப்
புளிகரைசல் - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மஞ்சள்தூள் -1 சிட்டிகை

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம் தலா - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை,பெருங்காயம் -சிறிது
மோர் மிளகாய் - 2

வறுத்து பொடிக்க:

காய்ந்த மிளகாய் - 1
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

*வறுத்து பொடிக்க குடுத்துள்ள பொருட்களை வெரும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்.

*ஒட்ஸை சிறிது வெந்நீர் ஊற்றி பிசிறிக் கொள்ளவும்.

*காய்களை சிறிது மஞ்சள்தூல்,உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

*துவரம்பருப்பு+ஒட்ஸ்+வெந்ந்த காய்கறி+உப்பு+புளிகரைசல்+வறுத்தரைத்த பொடி கலந்து அடுப்பில் சிரிது நேரம் வைத்துக் கிளறவும்.

*எல்லாம் சேர்ந்து வந்ததும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொட்டவும்.

*வாசனையான ஒட்ஸ் பிஸிபேளாபாத் ரெடி.

கவனிக்க:

டயட்டில் இல்லாதவர்கள் தாளிக்கும் போது எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம்.வாசனை கமகமக்கும்.

15 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

மேனகா..சூப்பரோ சுப்பர்...மிகவும் நன்றாக இருக்கின்றது...கண்டிப்பாக இப்போ டயடில் இருக்கும் பொழுது செய்து பார்க்க வேண்டிய சரியான குறிப்புக்கு நன்றி.

Menaga Sathia said...

நன்றி கீதா தங்கள் கருத்துக்கு.

R.Gopi said...

ஓட்ஸ்ல பிஸிபேளாபாத்‍தா.... யப்பா....

நீங்க கலக்கறீங்க....

நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு மெனு இது மேனகா...

எனிவே... நல்லா இருக்குன்னு கீதா பண்ணி பாத்து, சாப்பிட்டு விட்டு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன...விடு ஜூட்....

Jaleela Kamal said...

பருப்பு வேக வைக்கும் நேரம் தவிர மற்றபடி பத்தே நிமிடத்தில் இதை செய்திடலாம்.

நல்ல குறிப்பு

சப்ராஸ் அபூ பக்கர் said...

:-)

சப்ராஸ் அபூ பக்கர் said...

:-)

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

மிக்க நன்றிங்க.

ஓட்ஸ் மெனு எழுதியதற்கு ...

Unknown said...

இதுவும் கலக்கல் தான்!! ட்ரை பண்ணி பார்க்கிறேன்..நன்றி மாமி!!

SUMAZLA/சுமஜ்லா said...

ரொம்ப ஈஸியா இருக்கும் போலிருக்கே!

Menaga Sathia said...

//நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு மெனு இது மேனகா...//அப்படியா கோபி.இதே மாதிரி ஒட்ஸ்க்கு பதிலா அரிசியில் செய்யலாம்.

//எனிவே... நல்லா இருக்குன்னு கீதா பண்ணி பாத்து, சாப்பிட்டு விட்டு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன...விடு ஜூட்....//ஏன் நீங்க செய்துபார்த்து சொல்லமாடீங்களா..

தங்கள் கருத்துக்கு நன்றி கோபி!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி சப்ராஸ் அபூபக்கர்!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜமால்!!

Menaga Sathia said...

ட்ரை பண்ணிபாருங்க மாமி,நல்லாயிருக்கும் ஆனா சூடா சாப்பிடனும்.நன்றி மாமி தங்கள் கருத்துக்கு..

Menaga Sathia said...

ஆமாம்,இது ரொம்ப ஈஸி ரெசிபி,தங்கள் கருத்துக்கு நன்றி சுகைனா!!

01 09 10