
பொதுவாக பிரியாணியை நெய் சேர்த்து செய்வோம்,ஆனால் நான் சொல்லியிருக்கும் இந்த முறையில் செய்தால் நெய் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து செய்யவேண்டியதில்லை.சுவையும் அபாரமாக இருக்கும்.
தேவையெனில் தக்காளி சேர்த்துக் கொள்ளலாம்,நான் சேர்க்கவில்லை.
இதில் அரிசியை குறைந்தது 1 மணிநேரம் சரியாக ஊறவைத்து நீரை வடித்து,1 கப் அரிசிக்கு 2 கப் நீர் சேர்த்து செய்ய வேண்டும்.
தம் போடும் க்ரேவியில் கொஞ்சம் கூட நீர் இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும்.அதன் மேல் ஊறவைத்த அரிசியை சமமாக போட்டு அதன் மீது நீரினை பரவலாக ஊற்றவேண்டும்.
நீர் முழுவதும் வற்றிய பிறகு மிக குறைந்த தீயில் 10 நிமிடங்கள் தம் போடவும்.இப்படி செய்வதால் அடியும் பிடிக்காது,சாதமும் உதிரியாக வரும்.
கிரேவி செய்யும் போதே உப்பின் அளவை கொஞ்சம் கூடுதலாக போடவும்,ஏனென்றால் பிறகு உப்பு சரியாக இருக்கிறதா என நடுவில் பார்க்க முடியாது.
தம் போட்ட பின் 1 முறை கிளறி வைத்த பின் பரிமாறும் போது மட்டும் கிளறி பரிமாறவும்.
நடுநடுவில் கிளற வேண்டாம்,சாதம் உடைந்து போகும்.
நான் 3 கப் அரிசிக்கு 6 கப் நீர் ஊற்றுவதற்கு பதில் மறதியாக 7 கப் நீர் ஊற்றி செய்தேன்,ஆச்சர்யம் சாதம் குழைவாக இல்லாமல் உதிரியாகவே இருந்தது.
இந்த டிப்ஸ்கள் அனைத்தையும் வழங்கிய கீதாவுக்கும்,அவரின் தோழிக்கும் மிக்க நன்றி!!
இப்போழுதெல்லாம் இந்த முறையில் தான் பிரியாணி செய்கிறேன்.
தே.பொருட்கள்
பாஸ்மதி -3 கப்
கொண்டைகடலை- 2 கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம்- 1 பெரியது
கீறிய பச்சை மிளகாய் -2
புதினா+கொத்தமல்லி தலா- 1 கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது- 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய்= தேவைக்கு
ஊறவைக்க
தயிர்- 1/2 கப்
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா- 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி -1 டீஸ்பூன்
தாளிக்க
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 4
ஏலக்காய்- 3
பிரியாணி இலை - 2
செய்முறை
*கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்து நீரினை அளந்து தனியாக வைக்கவும்.
*ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து 15 நிமிடம் வைக்கவும்.
*அரிசியை கழுவி சரியாக 1 மணிநேரம் ஊறவைத்து நீரினை வடிக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின் வேகவைத்த சன்னா மற்றும் ஊறவைத்த தயிர் கலவை +உப்பு சேர்த்து வதக்கவும்.
*இப்போழுது இந்த கலவை முழுவதும் டிரையாக இருக்க வேண்டும்.அதனை அப்படியே சமமாக பரப்பி விடவும்.
*அதன் மீது ஊறவைத்த அரிசியை சமபடுத்தி விடவும்.
*அதன் மீது சன்னா வேகவைத்த நீரோடு சேர்த்து 6 கப் நீர் ஊற்றவும்.
*புதினா கொத்தமல்லியை தூவி விடவும்.
*நீர் முழுவதும் வற்றிய பிறகு மிக குறைந்த தீயில் தம்மில் 10 நிமிடங்கள் போடவும்.
*தம் போட்ட பின் மெதுவாக கிளறி விட்டு,பரிமாறும் போது 1 முறை கிளறி பரிமாறவும்.
*சாதமும் உடையாமல் உதிரியாக இருக்கும்.
5 பேர் ருசி பார்த்தவர்கள்:
Lovely recipe
Tasty briyani with out ghee and coconut milk..yumm
பார்க்கவே சூப்பராக இருக்கு.
Nice recipe.... Menaga....
6cup ku badhil 7cup ootri seidhen nu solra unga Nermai enakku romba pidichu irukku....
Biriyani Super a iruku!!
Post a Comment