Thursday 26 February 2015 | By: Menaga Sathia

மெது போண்டா/ MEDHU BONDA

print this page PRINT IT
 மெது போண்டாவில் டால்டா பயன்படுத்துவார்கள்.அதற்கு பதில் மர்கரின் பயன்படுத்தலாம்.நான் வெண்ணெய் சேர்த்து செய்துள்ளேன்,அதனால் ஆறினாலும் மொறுமொறுப்பாக இருக்கும்.

தே.பொருட்கள்
கடலை மாவு -1 கப்
அரிசி மாவு -1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா- 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்(அறை வெப்பநிலையில்)
பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1/4 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2
பொடியாக நறுக்கிய இஞ்சி -1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -பொரிக்க‌

செய்முறை
*பாத்திரத்தில் வெண்ணெய்+பேக்கிங் சோடா சேர்த்து நன்கு நுரை வரும் வரை கலக்கவும்.

*பின் மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை சேர்த்து கலக்கவும்.

*இப்பொழுது 1 டேபிள்ஸ்பூன் அளவு நீர் சேர்த்து கலக்கவும்.மாவின் பதம் இட்லி மாவை விட கெட்டியாக இருக்கவேண்டும்.

*எண்ணெய் காயவைத்து சிறு உருண்டைகளாக எடுத்து போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
பி.கு

*அரிசி மாவு இதே அளவில் சேர்த்தால் போதும்.நிறைய சேர்த்தால் சுவை மாறுபடும்.

*வெண்ணெய் சேர்த்து செய்வது திகட்டாமல் இருக்கும்.

9 பேர் ருசி பார்த்தவர்கள்:

”தளிர் சுரேஷ்” said...

அருமை! பகிர்வுக்கு நன்றி!

Shoba said...

Super ahh irukku ..kids and elders will love it

yathavan64@gmail.com said...

இந்த பதிவை பார்த்ததும்,
எண்ணெய் பலகாரம் எனது உடம்பிற்கு ஒவ்வாது என்றாலும், எனது மனைவியிடம்
மெதுவாக, மெதுவாக, கேட்டேன் மெது போண்டா வேண்டுமென்று!

நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

Mahi said...

super bonda menaga! Looks yummy!

Anuprem said...

மெது போண்டா ....வாவ் ...நாங்கள் சூடான எண்ணை விட்டு செய்வோம்..

'பரிவை' சே.குமார் said...

ஆஹா... சூப்பர்...

mullaimadavan said...

Medhu bonda nalla medhu medhunu irrukku! I will a be super snack for this cold weather!

ராமலக்ஷ்மி said...

அருமை.

Mahi said...

மெது போண்டா செய்தாச்சு! பொருபொருன்னு சூப்பரா இருந்தது மேனகா! தேங்க்யூ! :)

01 09 10