Monday, 2 February 2015 | By: Menaga Sathia

தால் பக்வான் / DAL PAKWAN | SINDHI BREAKFAST RECIPE



print this page PRINT IT
 தால் பக்வான் சிந்திகாரர்களின் மிக பிரபலமான காலை உணவு.செய்வதற்கும் மிக எளிது,இப்போழுது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் உணவு இது.

தால் கடலைப்பருப்பில் செய்வது,பக்வான் என்பது நம்ம ஊரு மைதா பூரி போல,ஆனால் இதனை உப்பவிடாமல் முள்கரண்டியால் குத்தி கிரிஸ்பியாக தாலுடன் பரிமாற வேண்டும்.

பக்வான் செய்ய நான் பாதியளவு மைதா+கோதுமை மாவு சேர்த்து செய்துள்ளேன்.

தால் செய்ய‌

கடலைப்பருப்பு -1/2 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள்- 3/4 டீஸ்பூன்
கரம் மசாலா -1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
எண்ணெய்- 3/4 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை
*கடலைப்பருப்பை கழுவி 20 நிமிடம் ஊறவைத்து,குக்கரில் மஞ்சள்தூள்+தேவைக்கு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் மிளகாய்த்தூள்+கரம் மசாலா+தனியாத்தூள்+உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.


*பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.

பக்வான் செய்ய‌

மைதா- 1/2 கப்
கோதுமை மாவு -1/2 கப்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்+பொரிக்க‌

செய்முறை

*பாத்திரத்தில் மைதா+கோதுமைமாவு+உப்பு+சீரகம் +2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.

*பின் தேவைக்கு நீர் சேர்த்து பூரிக்கு பிசைவது போல் மாவை பிசைந்து ஈரதுணியால் மூடி 1/2 மணிநேரம் வைக்கவும்.

*பின் சிறு உருண்டையாக எடுத்து பூரிக்கு தேய்ப்பது போல மாவை உருட்டி முள் கரண்டியால் ஆங்காங்கே குத்திவிடவும்.

*சூடான எண்ணெயில் போட்டு 2 பக்கமும் க்ரிஸ்பியாக பொரித்தெடுக்கவும்.

*பரிமாறும் போது பொடியாக அரிந்த வெங்காயம்+இனிப்பு மற்றும் புதினா சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.

2 பேர் ருசி பார்த்தவர்கள்:

01 09 10