ஹர்ஷினி அம்மாவின் கொத்து பரோட்டா குறிப்பை பார்த்து செய்தேன்.இதில் பரோட்டா குருமா நான் சேர்த்து செய்துள்ளேன்.மிகவும் நன்றாக இருந்தது.
தே.பொருட்கள்:
பரோட்டா - 5
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய தக்காளி - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
முட்டை - 3
பரோட்டா குருமா - 3 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
*பரோட்டா செய்முறையை இங்கே பார்க்கவும்.
*பரோட்டாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+தக்காளி+கரம் மசாலா+மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.
*பின் முட்டை சேர்த்து நன்கு பிரட்டவும்.பரோட்டா சேர்த்து நன்கு கொத்தவும்.
*பரோட்டா குருமா சேர்க்கவும்.இல்லையெனில் தண்ணீர் தெளிக்கவும்.
*பரோட்டாவில் உப்பு இருப்பதால் பார்த்து போடவும்.
*நன்கு கொத்தியதும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
பி.கு:
விருப்பப்பட்டால் இதனுடன் கொத்துக்கறியும் சேர்க்கலாம்.காரமாக இருந்தால் எலுமிச்சைசாறு சேர்க்கவும்.
29 பேர் ருசி பார்த்தவர்கள்:
மதியம் சாப்பிடலை. இப்பத்தான் பாத்தேன் இந்த பதிவ.. பசி ரொம்ப அதிகமாயிடுச்சி. வுடு ஜூட் டு ஓட்டல்.( போய்ட்டு வந்து ஓட்டல் பேர் சொல்றேன் கரெக்டா க்மிஷன் வாங்கிக்கங்க)
அடுத்த மாசம் ஊருக்கு வந்துதான் இதெல்லாம் ஒரு கை பார்க்கனும்.
அருமை - செய்து கொடுக்கின்றேன்.
--------------
ஹாஜர் நல்லாயிருக்காங்க
--------------
பரோட்டவை மிக்ஸியில் போட்டு அடித்து கொள்ளலாம் - ஈஸியா இருக்கும் அளவுகள் அதிகமாக இருக்கையில்.
முட்டை பரோட்டாவுக்கு குருமாவா, அடடே சூப்பர். இப்பவெல்லாம் வீட்டில மிகிசியில் போட்டு பரோட்டாவ கொத்திடுறாங்க, நம்ம ஊர் கடைகளில் விதவிதமா ட்யுன் போட்டு கொத்தும் ஸ்டைல்லே தனிதான்!!
பரோட்டா குருமா எப்படி செய்வது மேனகா?
எனக்கு ரொம்ப பிடிக்கும்....
Our all time fav dish... has come out so perfect and looks delicious.
Romba nalla irukku!
ஒட்டல் பேர் சொல்லுங்க கமிஷன் வாங்க.நன்றி அண்ணாமலையான்!!
நீங்களும் அடுத்தமாதம் ஊருக்கு போறீங்களா.நல்லபடியாக போய்ட்டு வாங்க.ஆசைப்பட்டதை செய்து சாப்பிடுங்க.நன்றி சகோ!!
பரோட்டாவை மிக்ஸியில் போட்டு அடிப்பதும் நல்ல ஐடியாவாக இருக்கு.இனி அதுபோல் செய்கிறேன்.
ஹாஜர் ரொமப் அழகா இருக்காங்க.சுத்தி போடுங்க.நன்றி உம்மு ஹாஜர்!!
//நம்ம ஊர் கடைகளில் விதவிதமா ட்யுன் போட்டு கொத்தும் ஸ்டைல்லே தனிதான்//ஆமாம் உண்மைதான் நீங்க சொல்வது.
குருமா போட்டு செய்வதால் இன்னும் நல்லாயிருக்கும்.நன்றி சகோ!!
நீங்க சாதாரணமாக பரோட்டாவுக்கு சால்னா செய்வீங்களே அதுதான் அக்கா.நன்றி ஸாதிகா அக்கா!!
நன்றி ஜெட்லி!!
நன்றி பத்மா!!
நன்றி திவ்யா!!
photo paarkum podhe saapidanum poliruku!!!
நன்றி ப்ரியா!!
நிறைவான சமையல் கலவைகள் அசத்தலா இருக்கு.சுறாப்புட்டு நான் அடிக்கடி செய்வேன்.நாங்கள் அதைச் சுறாவறை என்போம்.முட்டை பரோட்டாவும் எனக்குப் பிடித்தது.2- 3 மாதங்களுகொருமுறை சமைத்துக்கொள்வேன்.அதையும் நாங்கள் கொத்துரொட்டி என்போம்.நன்றி SASHIGA.
wow nice.... Thanks menaga :-)
sunday kalakkala looks yummy!!
மேனகா உங்க தட்டுலே பாக்கும் போது இப்பவே சாப்பிடனும் போல ஆசையா இருக்கு....உங்க பரோட்டா குறிப்பையும் சீக்கிரம் செய்து பாக்கனும். திரும்பவும் (தமிழ்)நன்றிபா :-)
ப்ரசண்டேஷன் அருமை,சாப்பிடத்தூண்டுது மேனு.
எனக்கு கொத்து புரோட்டா ரொம்ப புடிக்கும். முட்டை போடாமல், சைவக் குருமா விட்டு, எங்க ஊருல ஒரு கடைக்காரன் எனக்காக செய்து தருவான். உங்க முட்டை புரோட்டாவும் அது போலத்தான் உள்ளது. இம்ம் ஒரு கட்டிங் பிளஸ் இந்த டிஷ் சாப்பிட்டு மட்டை (தூக்கம்) விட்டா சும்மா ஒரு ஆறு மணி நேரம் தூங்கலாம். நன்றி.
// *பின் முட்டை சேர்த்து நன்கு பிரட்டவும்.பரோட்டா சேர்த்து நன்கு கொத்தவும். //
எப்படி வீட்டுக்காரை மொத்துவது மாதிரியா? பாவம் அவரு.
ஹாய் மேனு!
முட்டை பரோட்டா பார்க்கவே ரொம்ப சூப்பராய் இருக்கு. கண்டிப்பாய் ஒருமுறை செய்து பார்க்கனும்! ஐ மீன் சாப்பிடனும்!
நன்றி ஹேமா தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்..
செய்து பாருங்கள்.நன்றி ஹர்ஷினி அம்மா!!
நன்றி சுஸ்ரீ!!
நன்றி ஆசியா அக்கா!!
//எப்படி வீட்டுக்காரை மொத்துவது மாதிரியா? //ம்ம்ம் அப்படித்தான்.நன்றி சகோ!!
செய்து சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள்.நன்றி கீதா!!
ஊருக்கு போகும் போதுதான் ட்ரை பண்ணணும். என் மகளுக்கு ரொம்ப பிடிக்கும். நன்றி
வாழ்க வளமுடன்
Post a Comment