Showing posts with label கூட்டு/கீரை சமையல். Show all posts
Showing posts with label கூட்டு/கீரை சமையல். Show all posts
Thursday, 1 February 2018 | By: Menaga Sathia

சிகப்பு முளைகீரை கடையல் / Red Amaranth Leaves Kadaiyal

 முளைகீரையில் பச்சை,சிகப்பு என 2வகை இருக்கிறது.அதில் சிகப்பு கீரை நன்கு சுவையாக இருக்கும்.முளைகீரையில் பொரியல்,கடையல் என செய்யலாம்.ஏற்கனவே பொரியல் குறிப்பு போட்டுள்ளேன்.

முளைகீரையில் தக்காளி அல்லது புளி போட்டு கடையலாம்.இதில் தக்காளி மட்டுமே சேர்த்து செய்துருக்கேன்.

தே.பொருட்கள்
முளைகீரை -1 கட்டு
பச்சை மிளகாய் -2
பூண்டுப்பல் -10
தக்காளி -1 பெரியது
உப்பு -தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -2 டீஸ்பூன்
வடகம் -1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1

செய்முறை
*கீரையை ஆய்ந்து மண்ணில்லாமல் கழுவி நீரை வடிகட்டவும்.முற்றிய தண்டாக இருந்தால் தனியாக சாம்பார் செய்யலாம்.இளசாக இருந்தால் கீரையுடனே சேர்த்து கடையலாம்.

*பாத்திரத்தில் கீரை+தக்காளி+பூண்டு+பச்சை மிளகாய் தேவைக்கு நீர் சேர்த்து வேகவைக்கவும்.
 *வெந்ததும் கீரை கடையும் சட்டியில் ஊற்றி,நீரை வடி கட்டி உப்பு சேர்த்து கடையவும்.
*தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து  தாளித்து,கீரையில் சேர்த்து மீண்டும் நன்கு கடைந்து,கீரை வேக வைத்த நீரை கலந்து பரிமாறவும். 
Sunday, 5 November 2017 | By: Menaga Sathia

பரங்கிக்காய்(பூசணிக்காய்) பால் கூட்டு /Parangikai(Yellow Pumpkin) Paal Kootu

பரங்கிகாயில் சாம்பார்,கூட்டு,பொரியல்,சூப், குழம்பு என செய்யலாம்.

தே.பொருட்கள்

பரங்கிக்காய் துண்டுகள் -2 கப்
அரிசி மாவு -2 டீஸ்பூன்
தேங்காய் துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
நாட்டு சர்க்கரை - 1டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
எண்ணெய் -2 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
காய்ந்த மிளகாய்- 2

செய்முறை

*தேங்காய் துறுவலை மைய அரைக்கவும்.அரிசி மாவினை சிறிது நீரில் கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்.

*பாத்திரத்தில் பரங்கிகாய் துண்டுகளை போட்டு முழ்குமளவு நீர் ஊற்றி வேகவைக்கவும்.

*காய் வெந்ததும் உப்பு,நாட்டு சர்க்கரை  மற்றும் கரைத்து வைத்த அரிசி மாவினை சேர்த்து கிளறவும்.


*பின் தேங்காய் விழுதினை சேர்த்து கிளறி பின்  2 நிமிடங்களில் இறக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.

பி.கு
காரகுழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
Tuesday, 26 September 2017 | By: Menaga Sathia

சிகப்பு முளைகீரை பொரியல்/ Red Amaranth Leaves(Sikappu Mulaikeerai) Poriyal

சென்ற வருடம் இந்தியா சென்றிருந்தபோது சிகப்பு முள்ளங்கி வாங்கி சமைத்து படம் எடுத்ததோடு பதிவு போடவே மறந்துவிட்டேன்.

தே.பொருட்கள்
சிகப்பு முள்ளங்கி கீரை - 1 கட்டு
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
தேங்காய் துறுவல் - 1/3 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு -1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2

செய்முறை

*கீரையை மண்ணில்லாமல் நன்கு கழுவி நீரை நன்கு வடிக்கவும்.

*அதன் பிறகு பொடியாக தண்டோடு சேர்த்து நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் நருக்கிய கீரை மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவைக்கவும்.

*நீர் சேர்க்க வேண்டாம்,கீரையிலுள்ள நீரே வேக சரியாக இருக்கும்.

*5 நிமிடங்களில் கீரை வெந்து இருக்கும்,தேங்காய் துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
Friday, 31 March 2017 | By: Menaga Sathia

சிறு கீரை பருப்பு கடையல்/ Siru Keerai(Tropical Amaranth Leaves) Paruppu Kadaiyal | Keerai Recipes

 சிறு கீரையின் பயன்கள்
*மஞ்சள் மற்றும் சிறுகீரையை அரைத்து பற்று போடுவதால் முகப்பருவின்புள்ளிகள் மறையும்.

*சிறுநீரககோளாறு,கண்பார்வை குறைவாக  உள்ளவர்கள் இந்த கீரை சாப்பிடுவதால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இதில் பொரியல்,கூட்டு ,பருப்பு சேர்த்து கடையல் மற்றும் புளி சேர்த்து கடையல் செய்யலாம்.

இப்போழுது இதில் பருப்பு சேர்த்து கடையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தே.பொருட்கள்
சிறுகீரை - 1 கட்டு
வெங்காயம் -1 சிறியது
பூண்டுப்பல் -4
பச்சை மிளகாய் -2
பாசிப்பருப்பு -1/3 கப்
உப்பு-தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
வடகம் -2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-1

செய்முறை
*கீரையை சுத்தம் செய்து நன்கு அலசி வடிகட்டி வைக்கவும்.

 *பாத்திரத்தில் பருப்பு+நறுக்கிய வெங்காயம்+பூண்டு+பச்சை மிளகாய் சேர்த்து வேகவைக்கவும்.

*பாதியளவு பருப்பு வெந்ததும் கீரையை சேர்த்து வேகவைக்கவும்.

*கீரை வெந்ததும் கீரைகடையும் சட்டியில் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து உப்பு சேர்த்து மத்தினால் மைய கடையவும்.


*இந்த கீரையில் பருப்பு எவ்வளவு சேர்க்கிறோமோ அந்தளவு ருசியாக இருக்கும்.
Monday, 27 February 2017 | By: Menaga Sathia

தரைபசலைக் கீரை கடையல் / Tharai Pasala Keerai Kadaiyal | Keerai Recipes


பசலைக்கீரையில் கொடி பசலை மற்றும் தரைபசலை என இருவகைகள் உண்டு.தரை பசலைக்கீரையை கடையல் மட்டுமே செய்ய முடியும்.

இதனை தனியாகவோ அல்லது மற்ற அனைத்துவகை கீரைகளுடன் கலந்து சேர்த்து கடையலாம்.

தரைபசலையுடன் அனைத்துகீரையும் சேர்ந்து இருப்பதால் இதனை கலவை கீரை என்றும் சொல்வார்கள்.

இந்த ரெசிபியில் தரைபசலையுடன் அனைத்து கீரையும் கலந்து சேர்த்து கலைந்துருக்கேன்.

தே.பொருட்கள்

கலவை கீரை - 4 கப்
தக்காளி -1 பெரியது
பூண்டுப்பல் - 4
பச்சைமிளகாய் - 3
உப்பு - தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
வடகம் -2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கலவைக்கீரை

செய்முறை

*கலவை கீரையை சுத்தம் செய்து நன்கு அலசிக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் கீரை+தக்காளி+பூண்டு+பச்சைமிளகாய் என தேவையான நீர் சேர்த்து வேகவிடவும்.

*கீரை வெந்ததும் கீரை கடையும் சட்டியிலோ அல்லது மிக்ஸியிலோ உப்பு சேர்த்து கடையவும்.

*தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கீரையில் கலந்து மறுபடியும் நன்றாக கடைந்து பரிமாறவும்.

*காரகுழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
Wednesday, 4 January 2017 | By: Menaga Sathia

ஆவாரம்பூ கூட்டு / Aavarampoo Kootu | Kootu Recipe

ஆவாரம்பூ கிராமத்து பக்கங்களில் சாலையோரம் அதிகமாக காணப்படும் மரம்.
இதன் பூ,மொக்கு அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தவை.

வாரத்தில் ஒருநாள் இந்த கூட்டினை அம்மா எப்போழுதும் சமைப்பார்கள்.கீரை விற்கும் பாட்டியிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டால் மறுநாள் எடுத்துவந்து கொடுப்பாங்க.இந்த கூட்டின் சுவை கொஞ்சம் துவர்ப்புதன்மையோடு இருக்கும்.

ஆவாரம்பூ சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்  கட்டுபடுத்தும் தன்மை கொண்டது.குழந்தைகளின் பார்வைதிறனும் அதிகரிக்கும்.

 ஆவராம்பூ டீ கூட செய்யலாம்.

ஆவாரம்பூவில் கால்சியம்,இரும்புசத்து,விட்டமின் இருக்கிறது.

ஆவாரம்பூ வாங்கினால் அதன் இதழ்களை மட்டும் தனியே எடுத்து சமைக்க பயன்படுத்தவும்.மொட்டுகளை தூக்கி எறியாமல் காயவைத்து சீயக்காய் அரைக்கும் போது சேர்த்து அரைத்து தலைக்கு குளித்தால் முடி பளபளப்பாக இருக்கும்.

மேலும் இதனை பற்றி அறிய இங்கே பார்க்கவும்.

தே.பொருட்கள்
கடலைப்பருப்பு -1/2 கப்
ஆவாரம்பூ -1/2 கப்
கீறிய பச்சை மிளகாய் - 1
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1

செய்முறை

*குக்கரில் கடலைப்பருப்பு +மஞ்சள்தூள் மற்றும் தேவையானளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*ஆவாரம்பூவினை அலசி நீரினை நன்கு வடிக்கவும்.




ஆவாரம்பூ

 *பருப்பு வெந்ததும் ஆவரம்பூ+பச்சை மிளகாய் உப்பு சேர்த்து மேலும் 3-5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
*வெந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.
Thursday, 18 February 2016 | By: Menaga Sathia

வாழைத்தண்டு மோர் கூட்டு | Vazhaithandu(Banana Stem) Mor Kootu


print this page PRINT IT 
தே.பொருட்கள்
வாழைத்தண்டு- 1 நடுத்தர அளவு
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
கெட்டியான புளித்த தயிர் -1/2 கப்
உப்பு -தேவைக்கு

அரைக்க‌

தேங்காய்த்துறுவல்- 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
அரிசிமாவு- 1/2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
ஊறவைத்த துவரம்பருப்பு -1டீஸ்பூன்

தாளிக்க‌
தேங்காய் எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மைய அரைக்கவும்.

*வாழைத்தண்டினை நார் நீக்கி,பொடியாக அரிந்து மோர் கலந்த நீரில் வைத்து நன்கு அலசி வைக்கவும்.

*பாத்திரத்தில் நறுக்கிய வாழைத்தண்டு+மஞ்சள்தூள் மற்றும் தேவையான நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*வெந்ததும் அரைத்த மசாலா சேர்த்து கொதிக்கவைத்து தயிர் சேர்த்து இறக்கவும்.



*பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.

பி.கு
*தயிர் சேர்த்த பின் கொதிக்கவைக்க வேண்டாம்.

*இதே போல் வாழைத்தண்டுக்கு பதில் சௌ சௌ,முளைக்கீரையில் செய்யலாம்.
Sunday, 1 November 2015 | By: Menaga Sathia

தக்காளிக்காய் கூட்டு/GREEN TOMATO(PACHA THAKKALI) KOOTU | KOOTU RECIPES

தே.பொருட்கள்

பாசிபருப்பு- 1/4 கப்
தக்காளிக்காய் -3 பெரியது
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு

அரைக்க‌

தேங்காய்த்துறுவல்- 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் -2
சீரகம்- 1/2 டீஸ்பூன்

தாளிக்க 
எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு- தலா 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை
*குக்கரில் பாசிபருப்பு+மஞ்சள்தூள்+நறுக்கிய தக்காளி +தேவையான நீர் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கொரகொரப்பாக அரைக்கவும்.

*பின் வெந்ததும் நன்கு மசித்து அரைத்து தேங்காய் விழுது +உப்பு+1/4 கப் நீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.


*பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.
Monday, 19 October 2015 | By: Menaga Sathia

நெல்லூர் கோங்கூரா பச்சடி / Nellore Gongura Pachadi

print this page PRINT IT 

 இந்த பச்சடி கொஞ்சம் காரம் அதிகமாக இருந்தாலும் மிக நல்ல சுவையாக இருக்கும்.

புளிச்ச கீரையில் இரு வகை உண்டு,இலையின் பின்புறத்தில் சிவப்பு நிறத்தோடு இருக்கும் கீரையில் புளிப்பு அதிகம் இருக்காது,அதற்கு புளி சேர்த்து அரைக்க வேண்டும்.சிவப்பு நிறத்தில் இல்லாமல் இருக்கும் கீரை அதிக புளிப்பு தன்மை கொண்டது அதற்கு புளி சேர்க்க தேவையில்லை.

தே.பொருட்கள்

புளிச்ச கீரை -1 சிறிய கட்டு
காய்ந்த மிளகாய்- 6
தனியா- 3 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
வெந்தயம்- 1/4 டீஸ்பூன்
சீரகம்- 1/4 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு
நல்லெண்ணெய்- தேவைக்கு

தாளிக்க‌
கடுகு- 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை- 1 கொத்து
நசுக்கிய பூண்டுப்பல் -1/4 கப்

செய்முறை

*கீரையை சுத்தம் செய்து நீரை வடிக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தனியா+காய்ந்த மிளகாய்+சீரகம்+வெந்தயம்+கடுகு இவற்றை எண்ணெயில் வறுத்து எடுக்கவும்.

*பின் கீரையை சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.

*ஆறியதும் வறுத்த மசாலாக்களை முதலில் பொடித்த பின் கீரையை உப்பு சேர்த்து நீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.


*கடாயில் 1/3 கப் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அரைத்த கீரையில் சேர்த்து கலக்கவும்.

Friday, 21 August 2015 | By: Menaga Sathia

கூட்டு கறி / Kootu Curry | Onam Sadya Recipes

print this page PRINT IT 
இதில் தேங்காயை பொன்முறுவலாக வறுத்து சேர்ப்பது தனி சுவை.சேனைகிழங்கு,வாழைக்காய்,கறுப்புக்கடலைச் சேர்த்து செய்வது இதன் ஸ்பெஷல்
Recipe Source :
Here

தே.பொருட்கள்

சேனைக்கிழங்கு‍ துண்டுகள் -1 கப்
துண்டுகளாகிய வாழைக்காய்- 1 கப்
கறுப்புக் கடலை‍ -1/2 கப்
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
வெல்லம் -1டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு

அரைக்க‌
தேங்காய்த்துறுவல் -3/4 கப்
மிளகு- 1 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்

தாளிக்க‌
தே.எண்ணெய்- 1டீஸ்பூன்
கடுகு- 1/4 டீஸ்பூன்
பொடித்த மிளகு- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
காய்ந்த மிளகாய்- 2
தேங்காய்த்துறுவல்- 1/2 கப்
நெய்- 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.


*கடலையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

*பாத்திரத்தில் நீர்+சிறிது மஞ்சள்தூள் சேர்த்து சேனைகிழங்கினை 1/2 வேக்காடு வேகவைத்து நீரை வடிக்கவும்.இப்படி செய்வது கிழங்கின் காரலை போக்கும்.

*மீண்டும் பாத்திரத்தில் நீர்+சேனைக்கிழ்னக்கு+வாழைக்காய்+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு+கறிவேப்பிலை+வெல்லம் சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் வேகவைத்த கடலை+ அரைத்த விழுதினை சேர்த்து மேலும் பச்சை வாசனை போக கொதிக்கவைத்து இறக்கவும்.

*இது சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு+காய்ந்த மிளகாய்+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தேங்காயை சேர்த்து பொன் முறுவலாக வறுத்து சேர்க்கவும்.

*கடைசியாக நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.


01 09 10