Wednesday 4 January 2017 | By: Menaga Sathia

ஆவாரம்பூ கூட்டு / Aavarampoo Kootu | Kootu Recipe

ஆவாரம்பூ கிராமத்து பக்கங்களில் சாலையோரம் அதிகமாக காணப்படும் மரம்.
இதன் பூ,மொக்கு அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தவை.

வாரத்தில் ஒருநாள் இந்த கூட்டினை அம்மா எப்போழுதும் சமைப்பார்கள்.கீரை விற்கும் பாட்டியிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டால் மறுநாள் எடுத்துவந்து கொடுப்பாங்க.இந்த கூட்டின் சுவை கொஞ்சம் துவர்ப்புதன்மையோடு இருக்கும்.

ஆவாரம்பூ சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்  கட்டுபடுத்தும் தன்மை கொண்டது.குழந்தைகளின் பார்வைதிறனும் அதிகரிக்கும்.

 ஆவராம்பூ டீ கூட செய்யலாம்.

ஆவாரம்பூவில் கால்சியம்,இரும்புசத்து,விட்டமின் இருக்கிறது.

ஆவாரம்பூ வாங்கினால் அதன் இதழ்களை மட்டும் தனியே எடுத்து சமைக்க பயன்படுத்தவும்.மொட்டுகளை தூக்கி எறியாமல் காயவைத்து சீயக்காய் அரைக்கும் போது சேர்த்து அரைத்து தலைக்கு குளித்தால் முடி பளபளப்பாக இருக்கும்.

மேலும் இதனை பற்றி அறிய இங்கே பார்க்கவும்.

தே.பொருட்கள்
கடலைப்பருப்பு -1/2 கப்
ஆவாரம்பூ -1/2 கப்
கீறிய பச்சை மிளகாய் - 1
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1

செய்முறை

*குக்கரில் கடலைப்பருப்பு +மஞ்சள்தூள் மற்றும் தேவையானளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*ஆவாரம்பூவினை அலசி நீரினை நன்கு வடிக்கவும்.




ஆவாரம்பூ

 *பருப்பு வெந்ததும் ஆவரம்பூ+பச்சை மிளகாய் உப்பு சேர்த்து மேலும் 3-5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
*வெந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

மாதேவி said...

நன்று . உடல் நலத்துக்கு ஏற்ற உணவு.

'பரிவை' சே.குமார் said...

எங்க ஊர்ல ஆவரம் பூ நிறைய இருக்கே...

சின்னவயசுல அதோட துவர்ப்புத் தன்மைக்காக புடுங்கிச் சாப்பிடுவோம்...

ஆஹா... அதில் கூட்டா...

இந்த முறை ஊருக்குப் போகும் போது செய்து சாப்பிடணுமே...

Selvam said...

Looks good

01 09 10