Monday 22 July 2013 | By: Menaga Sathia

கோதுமை புட்டு - 2 /Wheat Puttu - 2


ஏற்கனவே நான் கோதுமை புட்டினை மாவில் செய்துருக்கேன்.அந்த பதிவின் கமெண்டில் உமா முழுக்கோதுமை  ஊறவைத்து செய்தால் நன்றாக இருக்கும் என சொன்னபோது அதன்படி செய்து பார்த்ததில் மிக அருமையாக இருந்தது.
தே.பொருட்கள்

முழுக்கோதுமை - 1/2 கப்
உப்பு - 1/8 டீஸ்பூன்
சர்க்கரை - 1/4 கப்
நெய் - 1 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கோதுமையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் கழுவி நீரை வடிகட்டி துணியில் ஈரம்போக உலர்த்தவும்.



*உலர்ந்ததும் மிக்ஸியில் அரைக்கவும்.விப்பரில் ஒரேடியாக அரைக்காமல் விட்டு விட்டு அரைத்தால் நன்றாக அரைக்கமுடியும்.


*அதனை ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*கொஞ்சம் சூடாக இருக்கும் போதே மிக்ஸியில் வேகவைத்த கோதுமையை 1 சுற்று சுற்றி எடுத்தால் பொலபொலவென இருக்கும்.


*அதனுடன் மேற்கூறிய அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

11 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya Anandakumar said...

very lovely Menaga, I usually do it with flour. I will try this whole wheat puttu...

'பரிவை' சே.குமார் said...

முழுக் கோதுமையில் புட்டு புதுமையா இருக்கு...

அருமையான செய்முறை...

வை.கோபாலகிருஷ்ணன் said...

கோதுமைப்புட்டைப்பற்றி புட்டுப்புட்டு வைத்துள்ள தகவல்கள் அருமை. படங்களும் அழகு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

great-secret-of-life said...

healthy puttu

virunthu unna vaanga said...

Super puttu... romba arumai n sathanathum kooda...

Shama Nagarajan said...

delicious dear..

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பிடித்த ஐட்டம்... நன்றி சகோ...

Unknown said...

wow very healthy and yummy recipe :) looks delicious dear :)

Lifewithspices said...

whole wheat puttu .. wow very healthy one nice prep..

Unknown said...

Healthy breakfast dish...looks yummy

MANO நாஞ்சில் மனோ said...

நானும் ருசி பார்த்துட்டேன்.

01 09 10