ஏற்கனவே நான் கோதுமை புட்டினை மாவில் செய்துருக்கேன்.அந்த பதிவின் கமெண்டில் உமா முழுக்கோதுமை ஊறவைத்து செய்தால் நன்றாக இருக்கும் என சொன்னபோது அதன்படி செய்து பார்த்ததில் மிக அருமையாக இருந்தது.
தே.பொருட்கள்
முழுக்கோதுமை - 1/2 கப்
உப்பு - 1/8 டீஸ்பூன்
சர்க்கரை - 1/4 கப்
நெய் - 1 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*கோதுமையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் கழுவி நீரை வடிகட்டி துணியில் ஈரம்போக உலர்த்தவும்.
*உலர்ந்ததும் மிக்ஸியில் அரைக்கவும்.விப்பரில் ஒரேடியாக அரைக்காமல் விட்டு விட்டு அரைத்தால் நன்றாக அரைக்கமுடியும்.
*அதனை ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
*கொஞ்சம் சூடாக இருக்கும் போதே மிக்ஸியில் வேகவைத்த கோதுமையை 1 சுற்று சுற்றி எடுத்தால் பொலபொலவென இருக்கும்.
*அதனுடன் மேற்கூறிய அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.
11 பேர் ருசி பார்த்தவர்கள்:
very lovely Menaga, I usually do it with flour. I will try this whole wheat puttu...
முழுக் கோதுமையில் புட்டு புதுமையா இருக்கு...
அருமையான செய்முறை...
கோதுமைப்புட்டைப்பற்றி புட்டுப்புட்டு வைத்துள்ள தகவல்கள் அருமை. படங்களும் அழகு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
healthy puttu
Super puttu... romba arumai n sathanathum kooda...
delicious dear..
மிகவும் பிடித்த ஐட்டம்... நன்றி சகோ...
wow very healthy and yummy recipe :) looks delicious dear :)
whole wheat puttu .. wow very healthy one nice prep..
Healthy breakfast dish...looks yummy
நானும் ருசி பார்த்துட்டேன்.
Post a Comment