தே.பொருட்கள்:
கோதுமைரவை - 1/2 கப்
கோதுமைமாவு - 3 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
ஈஸ்ட் - 1டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
ஸ்டப்பிங் செய்ய:
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
பொடியாக அரிந்த கலர் குடமிளகாய் - 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
*கோதுமைரவையில் 1 கப் கொதிக்கும் நீரைவிட்டு ஊறவிடவும்.சிறிது நேரத்தில் ஊறியிருக்கும்.
*வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட்+சர்க்கரை கலந்து 5 நிமிடம் வைக்கவும்.
*கோதுமை மாவையும் ரவையும் தேவையான உப்பு சேர்த்து கலந்து ஈஸ்ட் கலந்த நீரை ஊற்றி கெட்டியாக பிசைந்து ஈரமான துணியால் மூடி வெப்பமான இடத்தில் வைக்கவும்.
*1 மணிநேரத்தில் மாவு 2மடங்காக உப்பியிருக்கும்,மறுபடியும் நன்கு பிசைந்து 1மணிநேரம் வெப்பமான இடத்தில் வைக்கவும்.
*ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
*பின் மிளகாய்த்தூளை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி குடமிளகாயை சேர்த்து லேசாக வதக்கி இறக்கினால் ஸ்டப்பிங் ரெடி.
*மாவை நன்கு மிருதுவாக பிசைந்து தேவையானளவில் உருண்டைகள் போடவும்.
*ஒவ்வொரு உருண்டையிலும் ஸ்டப்பிங் கலவையை வைத்து நன்கு மூடி அவன் டிரேயில் வைத்து 1/2 மணிநேரம் வைக்கவும்.மறுபடியும் உருண்டை நன்கு உப்பி வருவதற்காகதான் 1/2 மணிநேரம் வெளியில் வைக்கிறோம்.
*அவனை 230 முற்சூடு செய்து 20 - 30 பேக் செய்து எடுக்கவும்.
பி.கு:
*ஸ்டப்பிங் அவரவர் விருப்பத்துக்கேற்ப வைக்கலாம்.இந்த அளவிற்க்கு நார்மலாக 6 உருண்டைகள் வரும்.
27 பேர் ருசி பார்த்தவர்கள்:
hmmm.. Healthy stuffed buns :-)
Looks really delicious.. nice entry..
வாவ்..அழகாக செய்து அசத்தி இருக்கீங்க மேனகா.இந்த பன் வகைகள் தான் எனக்கு நன்றாக வருவதில்லை.
Dear,,,woow nice stuffed bun i like this very much dear taste different than normal bun.
வழக்கம் போல நல்ல பதிவு அக்கா ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
healthy one... bun nalla vandhutha menaga , nalla softaa irundhadha wheat flour poattum ... naanum try panren ...
Wat a healthy buns..superaa panni irrukinga Menaga..
ஓவன் இல்லாத இடத்தில் இருக்கேன் அதுவும் தனிமையில்
பார்ப்போம் வாய்ப்பு வாய்க்கையில்.
குட்டி பன் ரொம்ப நல்ல வந்துள்ளது. பார்த்தாலே தெரியுது. ம்ம்வீட்டுக்கு வெளியில் சீக்கிரம் போர்டு மாட்டுங்கள்,
பிஸினஸ் அமோகமா இருக்கும்.
மேனகா, மிகவும் நல்லா இருக்கு. நல்ல ரெசிப்பி.
ஆஹா மேனகா...பார்க்கும்பொழுதே சூப்பராக இருக்கின்றது...அருமை...வாழ்த்துகள்....
stuffed bun super! very innovative and healthy too!
நன்றி அருணா!!
நன்றி ஸ்ரீப்ரியா!!
நன்றி ஸாதிகாக்கா!! மறுபடியும் முயற்சித்து பாருங்கள் நன்றாக வர்ம்..
நன்றி சத்யா!!
நன்றி சசி!!
நன்றி பவித்ரா!! பன் மிகவும் சாப்டாக நன்றாகயிருந்தது.செய்து பாருங்கள்....
நன்றி ப்ரியா!!
நன்றி சகோ!! முடியும் போது செய்து பாருங்கள்!!
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி வானதி!!
நன்றி கீதா!!
நன்றி பிரேமலதா!!
arumaiyana bun.....good one
looks so perfect! Good job!
Very healthy preparation, loved ur stuffed version sounds kool, looks pretty as well.
மிகவும் அருமை அப்படியே நமக்கு ரெண்டு பார்சல் காசு எதுவும் இப்ப இல்லைங்க !
that's a fab recipe...so healthy n tempting dear. cute click.
really different.superb.
nice entry. sounds good.
நன்றி ஷாமா!!
நன்றி சித்ரா!!
நன்றி மலர்!!
நன்றி சங்கர்!! அதனால் என்ன உங்களுக்கு பார்சலில் அனுப்பியாச்சு...
நன்றி ஜெய்!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி ஸ்பைசி டேஸ்டி!!
Good one Menaga...very healthy and looks very tasty...I like the filling also :)
Stuffing inside the bun..nice idea Menaga!
நன்றி கீதா!!
நன்றி மகி!!
Post a Comment