1.பட்டுப் புடவையை துவைத்து விட்டு கடைசியாக அலசும் நீரில் எலுமிச்சை சாரு கலந்து அலசினால் நிறம் மங்காமல் இருக்கும்.
2.பீட்ரூட்,கேரட் போன்ற காய்கறிகளை நீண்ட நாள் ப்ரிட்ஜில் வைக்க வேண்டுமானால் அதன் இலை மற்றும் வேர் பகுதிகளை நீக்கிவிட்டு வைத்தால் அழுகாமல் இருக்கும்.அதன் இலைகளை நாம் கீரைப் பொரியல் போல் செய்யலாம்.
3.கொத்தமல்லி தழை,புதினா இலைகளை வாங்கி வந்ததும் நியூஸ் பேப்பரில் சுருட்டி ப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் புதுசுபோல இருக்கும்.
4.டீத்தூள் சக்கையை ப்ரிஜின் ஓரத்தில் வைத்தால் வாடை வராது.
5.மீன் வாடை அடிக்காமல் இருக்க ஈரமான டவலை கட்டி வைத்தால் மீன் வாடை வராது.
6.ஒல்லியான பெண்கள் காட்டன்,டிஸ்யூ,ஆர்கன்ஸா புடவைகள் மற்றும் புரிய பிரிண்ட் போட்ட புடவைகள் கட்டினால் அவர்களை குண்டாக காண்பிக்கும்.
7.மாநிறமாக உள்ள பெண்கள் மெரூன்,பச்சை,பிங்க் போன்ற கலர் புடவைகள் கட்டினால் அவர்களை அழகாக காண்பிக்கும்.
8.மீதமான சப்பாத்தியை மறுமுறை உபயோகிக்கும் போது ஆவியில் சூடு செய்தால் சாப்டாக இருக்கும்.ரொம்ப நேரம் ஆவியேற்ற வேண்டாம்.
4 பேர் ருசி பார்த்தவர்கள்:
ஹாய் மேனகா பயனுள்ள டிப்ஸாக வாரி வழங்குரிங்க..
வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி பாயிசா.எனக்கு தெரிந்த டிப்ஸ்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் சந்தோஷமாயிருக்கு.
where should i keep the tea dust in the fridge?
ப்ரிட்ஜின் ஷெல்ப் ஓரத்தில் வைங்க கோப்ஸ்,நன்றி தங்கள் வருகைக்கு..
Post a Comment