
தே.பொருட்கள் :
1.பால் - 3 லிட்டர்
2.சக்கரை - 300 கிராம்
3.மைதா - 1 டேபிள்ஸ்பூன்
4.எலுமிச்சைசாறு அல்லது வினிகர் - 6 தேக்கரண்டி
செய்முறை:
* முதலில் பாலை நன்கு காய்ச்சி,அதில் எலுமிச்சை சாறை ஊற்றவும்.பால் திரிந்து போகும்.
* 5 நிமிடம் கழித்து மெல்லிய துணியில் திரிந்த பாலை வடிகட்டவும்.இது தான் பனீர்.துணியுடன் பனீரை குழாய் தண்ணீரில் அலசவும்.அப்போ தான் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு வாசனை இருக்காது.
*பின் அந்த பனீரை துணியுடன் தொங்கவிடவும் அல்லது சமமான பாத்திரத்தின் மேல் பனீர் மூட்டையை வைத்து அதன் மேல் வெயிட்டான பாத்திரைத்தை தூக்கி வைக்கவும்.தண்ணீர் முழுவதும் வடிந்திருக்கவேண்டும்.அப்போழுது தான் மென்மையா இருக்கும்.
*பனீரை மிருதுவாக பிசையவும்.அத்துடன் மைதா சேர்த்து மேலும் மென்மையா பிசைந்து உருண்டைப் பிடிக்கவும்.
*சக்கரையை தண்ணீர் விட்டு காய்ச்சவும்.அது கரைந்து கொதிக்கும் போது உருண்டைகளைப் போட்டு 10 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான் ரசகுல்லா ரெடி.
8 பேர் ருசி பார்த்தவர்கள்:
என்னபா கானும்னு பாத்தா இங்கே ஒரே இனிப்பா இருக்கு.. எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட் இது... ரொம்ப நல்லா இருக்குபா
ரொம்ப நன்றி ஹர்ஷினி அம்மா.எனக்கும் இது ரொம்ப பிடிக்கும்.
ரொம்ப நல்ல செய்து இருக்கிங்க மேனகா.. கட்டாயம் ட்ரை பண்ணுகிறேன்..
ரொம்ப நன்றி பாயிசா.செய்துப் பாருங்க நல்லா வரும்.
wow it is rocking.
it is nice i want type in tamil, but i don't know how to type in tamil
Anonyme,விஜய் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தமிழில் டைப் செய்ய தங்கள் கம்ப்பூட்டரில் NHM Writer மென்பொருளை டவுன்லோட் செய்துக்கொண்டால் ஈஸியாக இருக்கும்.
link http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx.
naangalum try panuvom nanri
Post a Comment