Friday 13 December 2013 | By: Menaga Sathia

விப்பிங் க்ரீமிலிருந்து வெண்ணெய் எடுப்பது எப்படி??/Homemade Butter Using Heavy Whipping Cream

1 லிட்டர் விப்பிங் க்ரீமில் 1 கப் ப்ராஸ்டிங் செய்ய பயன்படுத்திய பின் மீதி க்ரீமில் வெண்ணெய் செய்தேன். விஸ்க் மூலம் செய்ததால் தோல் பட்டை வலி மட்டும் வந்து படுத்திடுச்சு..

ஆனால் வெண்ணெய் செய்தபின் சாப்பிட்டு பார்த்த போது வலியெல்லாம் மறந்து போய்டுச்சு.இதற்காகவே விப்பிங் க்ரீம் அதிகமா வாங்கனும் போல....

வெண்ணெயை ஒருநாள் மட்டும் ப்ரெட்டில் தடவி காலை உணவாக சாப்பிட்ட பின் மீதியை நெய் செய்து விட்டேன்.

இதில் முக்கியமானது விப்பிங் க்ரிமை 1 நாள் முழுக்க ப்ரிட்ஜில் வைத்திருந்து வெண்ணெய் எடுப்பது நல்லது..

தயாரிக்கும் நேரம்  25 -30 நிமிடங்கள்

தே.பொருட்கள்

ஹெவி விப்பிங் க்ரீம்/Heavy Whipping Cream  - 3 1/2 கப்
விஸ்க் /Whisk

செய்முறை

*பவுலில் விப்பிங் க்ரீமை ஊற்றி விஸ்க் மூலம் Circular Motion  நன்கு  கலக்கவும்.

 *இது மாதிரி வருவதற்கு குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும்

 *தொடர்ந்து Circular Motion ல் கலக்கி கொண்டு வந்தால்  நன்கு கெட்டியாகி இது போல் வரும் குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும்.

*இந்த இடத்தில் தான் கலக்கும்போது தோள்பட்டை வலி எடுக்கும்,கலக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.

*இது Pale Yellow Colour-ல்போல் வரும் போது பாதிவேலை முடிந்து விட்டது என்று அர்த்தம்.
 *தொடர்ந்து Circular Motion கலக்கும் போது வெண்ணெய் தனியாக பிரிந்து வருவது போல் வரும்.

 *வெண்ணெய் நன்றாக பிரிந்ததும் தனியாக ஒரு பவுலில் குளிர்ந்த நீரில் சேகரிக்கவும்.
 *பின் பட்டர் மில்கை நன்கு வடிகட்டவும்.

*3/12 கப் விப்பிங் கிரிமிலிருந்து  வந்த பட்டர் மில்க்
 *இது தான் 3 1/2 கப்பிலிருந்து கிடைத்த வெண்ணெய்.

*இதனை குறைந்தது 4-5 முறை குளிர்ந்த நீரில் நன்கு அலசி பயன்படுத்தவும்.
 பி.கு

*பட்டர் மில்கை கேக்,பான்கேக் அல்லது ப்ரெட் செய்ய பயன்படுத்தலாம்.

*ப்ரிட்ஜில் 3 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

11 பேர் ருசி பார்த்தவர்கள்:

Thenammai Lakshmanan said...

yummy :)

Unknown said...

Nice Information...I love HM butter Will try some time....

வை.கோபாலகிருஷ்ணன் said...

விலை மோரில் வெண்ணெய் எடுக்கும் பெண்களைப்பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ;)

நீங்கள் விப்பிங் க்ரீமில் எடுத்துள்ளீர்கள் !!!!!

பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

hotpotcooking said...

Homemade butter looks good

Asiya Omar said...

சூப்பர் பகிர்வு,படங்கள் அசத்தல்.

Sangeetha M said...

recently came to know this fact,yet to try...nothing can beat the fresh homemade butter rt? well done!

'பரிவை' சே.குமார் said...

படங்களுடன் பகிர்வு அருமை...
விப்பிங் கிரீமில் வெண்ணை எடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

சூப்பர்! படங்களுடன் அசத்தல்..

நானும் ஏறக்குறைய 12 வருடங்களாக தயிர் ஏடுலிருந்து வெண்ணெய் எடுத்து தான் நெய் காய்ச்சுவேன்.. கடைகளில் வாங்கியதில்லை...

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்...

வாழ்த்துக்கள்...

அ.பாண்டியன் said...

சகோதரிக்கு வணக்கம்.
அழகான செய்முறை விளக்கமாக விளக்கிய விதமும் அருமை. தங்களது மற்ற பதிவுகளையும் படித்தேன். ஆஹா! நாவில் உமிழ்நீர் சுரக்கிறது. தங்கள் திறமைக்கும் அதை பகிரும் குணத்திற்கும் எனது நன்றிகளும் வாழ்த்துகளும். தொடர்க..

Hema said...

Wow, never knew this, have to try this out..

01 09 10