PRINT IT
ஃபலூடா செய்வதற்கு சேவ் & சப்ஜா விதை முக்கியமானது.கடையில் விற்கும் சேவ் ஜவ்வரிசி மாவில் செய்து விற்பார்கள்.இங்கு நான் செய்திருப்பது சோளமாவு.இனி சேவ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தே.பொருட்கள்
சோளமாவு- 1/2 கப்
நீர்- 1 1/2 கப்
சர்க்கரை- 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*ஒரு பாத்திரம் நிறை ஐஸ் கட்டிகளை போட்டு வைக்கவும்.
*வேறொரு பாத்திரத்தில் சோளமாவு+சர்க்கரை+நீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும்.
*அப்படியே அடுப்பில் வைத்து கட்டியில்லாமல் கலக்கி கொண்டே இருக்கவும்.
*கெட்டியாக கலர் சற்று வெளிர் நிறத்தில் மாறி வரும் போது ஓமப்பொடி அச்சியில் போட்டு ஐஸ்கட்டி போட்டிருக்கும் பாத்திரத்தில் அப்படியே பிழியவும்.
*பயன்படுத்தும் வரை சேவ்வினை ஐஸ்தண்ணிரிலேயே வைத்திருக்கவும்.
பி.கு
*இதில் விரும்பிய பிலேவர்ஸ் அல்லது கலர் சேர்க்கலாம்.நான் பிலெயினாகவே பயன்படுத்திருக்கேன்.
*கலர் சேர்ப்பதாக இருந்தால் சோளமாவு கெட்டியாக நிறம் மாறி வரும் போது சேர்த்து பயன்படுத்தவும்.
பலூடா செய்ய தே.பொருட்கள்
பலூடா சேவ் - 1/3 கப்
சப்ஜா விதை - 1/2 டேபிள்ஸ்பூன் (இதனை நீரில் 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்,ஊறிய பிறகு 2 டேபிள்ஸ்பூன் அளவில் வரும்)
ரோஸ் சிரப் -4 டேபிள்ஸ்பூன்
குளிர்ந்த பால்- 2 கப்
வெனிலா ஐஸ்கீரிம்- 1 ஸ்கூப்
பொடியாக நறுக்கிய பிஸ்தா -1 டீஸ்பூன் (அலங்கரிக்க)
செய்முறை
*மிக உயரமான கண்ணாடி டம்ளரில் 2 டேபிள்ஸ்பூன் சிரப் ஊற்றவும்.
*பின் 1 டீஸ்பூன் ஊறவைத்த சப்ஜா விதை சேர்க்கவும்.
*அதன் மீது 2 டேபிள்ஸ்பூன் பலூடா சேவ் போடவும்.
*நான் மிக உயரமான டம்ளர் பயன்படுத்தியிருப்பதால் 2 லேயராக போட்டுள்ளேன்.
*சிறிய டம்ளர் என்றால் 1 லேயர் போதும்.பின் அதன் மீது பொறுமையாக பாலினை ஊற்றவும்.
*அதன் மூது ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம்+பிஸ்தா தூவி உடனடியாக பரிமாறவும்.
3 பேர் ருசி பார்த்தவர்கள்:
முன்பு ஒருமுறை குமுதம்
சினமா விமர்சனத்தில் ராதாஸலூஜாவை
ஃப்ளூடா எனப் போட்டிருந்தார்கள்
அப்புறம் அது என்ன என விசாரித்து
சென்னைக்குச் சென்ற போது விசாரித்துச்
சாப்பிட்டு வந்தேன்.அருமையாக இருந்தது
அதன் செய்முறையை பகிர்வாகத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நிச்சயம் செய்து பார்த்துவிடுவேன்
பார்க்கவே பலூடா நல்லாயிருக்கு.ரெம்ப நன்றி சேவ் + பலூடா செய்முறை தந்தமைக்கு. கண்டிப்பாக செய்துபார்க்கிறேன்.்
நெடுநாட்களாக ருசிக்க விரும்புவது இதைத் தான். முடிந்த போது செய்து பார்க்கிறேன்.
Post a Comment