Wednesday, 13 April 2016 | By: Menaga Sathia

கேரளா பருப்பு கறி / Kerala Parippu Curry | Onam Recipes

print this page PRINT IT
சாதாரணமாக பருப்பு கறியினை,பாசிப்பருப்பு மட்டும் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து (அதிகமான நீரை மேலோடு எடுத்து ரசம் செய்வது வழக்கம்) உப்பு கலந்து சாதத்தில் நெய் சேர்த்து பரிமாறுவார்கள்.

ஆனால் கேரளா பருப்பு கறியில் தேங்காய் மசாலா அரைத்து சேர்ப்பார்கள்,அதன்படி ஒருநாள் செய்தபின் இப்பொழுதெல்லாம் பருப்பு கறியினை தேங்காய் இல்லாமல் செய்வதில்லை.

தே.பொருட்கள்

பாசிபருப்பு- 1/2 கப்
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
நீர்- 2 கப்
உப்பு -தேவைக்கு
நெய் -1 டீஸ்பூன்

அரைக்க‌
தேங்காய்த்துறுவல்- 1/3 கப்
பூண்டுப்பல்- 2
இஞ்சி துறுவல்- 1/2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 1

தாளிக்க‌
தேங்காய் எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் -2
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை
*வெறும் கடாயில் பாசிபருப்பினை வாசனை வரும் வரை வறுத்து மஞ்சள்தூள்+2 கப் நீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வேகவிடவும்.



*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மைய அரைக்கவும்.

*பருப்பு வெந்ததும் உப்பு+அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து சிறுதீயில் 5 நிமிடம் வரை கொதிக்க வைக்கவும்.

*பின் தேங்காய் எண்ணெயில் கடுகு+காய்ந்த மிளகாய்+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி பருப்பில் சேர்க்கவும்.

*பரிமாறும் போது நெய் சேர்த்து,உருளை வருவல் அல்லது அப்பளத்துடன் பரிமாறவும்.

பி.கு
*பருப்பு ஆறியதும் கெட்டியாகிவிடும்,அதற்குதகுந்தாற் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

*ஒணம் சத்யாவின் செய்யும் போது இஞ்சி,பூண்டு,சின்ன வெங்காயம் சேர்க்காமல் செய்யவும்.

*பருப்பினை எப்போழுதும் வறுத்து வேகவைக்கவும்,நல்ல மணமாக இருக்கும்.

2 பேர் ருசி பார்த்தவர்கள்:

mullaimadavan said...

Simple, delcious paruppu kootu! Arumai Menaga!

Unknown said...

அருமை

01 09 10