இன்று 31.07.09 வரலஷிமி விரதம்.இந்த விரதத்தை நான் 2006 ம் வருடத்திலிருந்து கடைப் பிடிக்கிறேன்.இந்த விரதத்தினால் நான் அடைந்த பலன் ஏராளம்.லஷ்மிதேவியை நினைத்து இந்த விரதம் கடைப்பிடிக்கபடுகிறது.அஷ்டலஷ்மிகளை (வித்யாலஷ்மி -- கல்வியைத் தருபவர்,தனலஷ்மி -- செல்வத்தை தருபவர்,தான்யலஷ்மி -- உணவுகளை கொடுப்பவர்,சந்தானலஷ்மி-- குடும்பம் மற்றும் குழந்தைகளை கொடுப்பவர்,கெஜலஷ்மி -- பலத்தை தருபவர்,விஜயலஷ்மி -- வெற்றியைத் தருபவர்,பாக்யலஷ்மி -- சொத்துகளைத் தருபவர்,தைரியலஷ்மி -- தைரியத்தை தருபவர் )சகல சவுபாக்கிய செல்வங்களும் தரவேண்டி, நினைத்து இந்த பூஜை அனுஷ்டிக்கபடுகிறது.
ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முந்திய வெள்ளிக்கிழமையில் வரலஷ்மிபூஜை கடைப்பிடிக்கபடுகிறது.தவிர்க்க முடியாத சூழ்நிலையானால் அடுத்த வெள்ளிக்கிழமையில் செய்யலாம்.
முதல்நாள் வியாழக்கிழமையன்று பூஜை அறையை சுத்தம் செய்து மாக்கோலம் போட்டு மண்டபம் அமைக்க வேண்டும்.அவரவர் வசதிக்கு,சூழ்நிலைக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம்.கலசம் அமைக்க வேண்டும்.அந்த பாத்திரம் தங்கம்,செம்பு,வெள்ளி இவற்றுள் ஏதாவது ஒன்றாக இருக்கணும்.கலத்திற்க்கு மஞ்சள்,குங்குமம் வைத்து அதனுள் தண்ணீர் அல்லது பச்சரிசி,தங்கம்.காசு,வெற்றிவேர்,எலுமிச்சைபழம்,வெற்றிலை,பாக்கு,பூ,மஞ்சள்,குங்குமம் போடவேண்டும்.அதன் மேல் மாவிலை வைத்து தேங்காய் வைக்கவும்.அதன் மேல் வஸ்திரம்,பூ, வைக்கவும்.லஷ்மி முகம் அல்லது படம் வைக்கவும்.கலசம் வைத்த பின் விளக்கேத்தி பால் நைவேத்தியம் செய்யவும்
மறுநாள் காலையில் பொங்கல்,அப்பம்,சுண்டல்,புட்டு,உளுந்து வடை,கொழுக்கட்டை,இட்லி,தேங்காய்,பூ,பழங்கள்,வாழையிலை அனைத்தையும் ரெடிபண்ணவும்.காலை 9-10.30 மணிக்குள் பூஜையை முடிக்கவும்.விளக்கேத்தி லஷ்மி படத்தின் முன் வாழையிலை போட்டு அதில் பச்சரிசியை பரப்பி கலசத்தை வைக்கவும்.மஞ்சள் பிள்ளையார் பிடித்து அவருக்கு பூஜை செய்தபின் கலசத்துக்கு பூ அட்சதை தூவி மந்திரம் படித்து கற்பூர ஆரத்தி காட்டி அம்மனை நினைத்து பிரார்த்தனை செய்யவும்.
ஒன்பது இழை நூல் எடுத்து மஞ்சள் நனைத்து 9 முடிச்சு போடவும்.நடு முடிச்சில் பூ வைக்கவும்.பூஜை முடிந்து மஞ்சள் கயிற்றை வலதுகையில் கட்டவும்அதன்பின் மஞ்சள்+குங்குமம் கரைத்து ஆரத்தி எடுக்கவும்.
வரலஷ்மி விரதம் புக்கில் அனைத்து மந்திரங்களும் இருக்கும்.அதை படிக்கவும்.பூஜை முடிந்தபின் சுமங்கலிபெண்களுக்கு மஞ்சள்,குங்குமம்,வெற்றிலை,பாக்கு,பழம்,வள்ஐயல் அல்லது ரவிக்கை குடுக்கவேண்டும்.இந்த பூஜையினால் அம்மன் அருளில் அனைத்து காரியங்களும் நடக்கும்.
மாலையிலும் ஏதாவது நைவேத்தியம் செய்து கற்பூரம் காட்டவும்.மறுநாள் சனிக்கிழமை காலை அல்லது மாலையில் புனர்பூஜை செய்யவும்.கலசத்தை வடக்கு பக்கம் திருப்பி வைத்து நைவேத்தியம் செய்து பூஜையை முடிக்கவும்.அம்மனுக்கு எடுக்கும் ஆரத்தியை செடியில் ஊற்றவும்.
அரிசியை எடுத்து அரிசிப்பானையில் அவைக்கவும்.கலசநீரை செடியில் அல்லது நீட்டில் தெளிக்கலாம்.யாரும் இவ்விரதத்தை கடைப்பிடிக்கலாம்.நீங்களும் கடைபிடித்து அம்மன் அருளை பெறுக...
16 பேர் ருசி பார்த்தவர்கள்:
ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
அதற்கான முகவரி : www.findindia.net
ஹேய்.... எல்லாரும் ஒரு தபா ஜோரா கைய தட்டுங்க,,,, மேனகா முதல் முறையா சமையல் அறைய விட்டு பூஜை அறைக்கு வந்திருக்காங்க..(பதிவுக்கு தாங்க.. மத்த படி பக்திமான் போல!!)
மேனகா...நானும் இன்று செய்யபோகிறேன்...
நேற்று தான் அம்மாகிட்ட பேசும் பொழுது நீயும் செய்யுனு சொன்னாங்க..ஒரே திட்டு வேற..நான் ஒன்னும் செய்யததுஇல்லை என்று.....இனி மேல் தான் அம்மாகிட்ட போன் செய்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட வேண்டும் என்று நினைத்தேன்...அதற்குள் இங்கே....
மிகவும் நன்றி மேனகா...
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ராம்!!
//ஹேய்.... எல்லாரும் ஒரு தபா ஜோரா கைய தட்டுங்க,,,, மேனகா முதல் முறையா சமையல் அறைய விட்டு பூஜை அறைக்கு வந்திருக்காங்க.//ரொம்ப கிண்டல் உங்களுக்கு.தங்கள் கருத்துக்கு நன்றி ராஜ்!!
நீங்களும் செய்ங்க கீதா,நன்றி கீதா!!
மங்களகரமாக எழுதி இருக்கீங்க மேனகா. நல்லா இருக்கு பதிவு.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மலர்!!
உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது தல
நல்ல கருத்துக்கள நன்றி :-))
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
நல்ல பதிவு இந்து சமயம் தொடர்பான பதிவுகளும் வரட்டுமே...
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
தங்கள் வருகைக்கு நன்றி சுரேஷ்!!
தங்கள் கருத்துக்கு நன்றி சிங்கக்குட்டி!!
நிச்சயம் எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன் சந்ரு,மிக்க நன்றி!!
பாயிஷா,சந்ரு தங்கள் வாழ்த்துக்கு நன்றி!!
அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!
Post a Comment