தே.பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 4 கப்
வெங்காயம்- 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
பிரியாணி மசாலாப் பொடி - 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1டேபிள்ஸ்பூன்
ரெட்கலர் - 1சிட்டிகை
மஞ்சள்கலர் - 1 சிட்டிகை
தயிர் - 125 கிராம்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி -1 கைப்பிடி
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
பட்டன் காளான் - 6
கேரட் - 2
பீன்ஸ் -100 கிராம்
ப்ரோசன் பட்டாணி- 1 கப்
குடமிளகாய் - 1 சிறியது
தாளிக்க:
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 3+3
பிரியாணி இலை - 3
ஏலக்காய் - 2
தாளிக்க:
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 3+3
பிரியாணி இலை - 3
ஏலக்காய் - 2
செய்முறை:
*வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்,பச்சை மிளகாயை கீறவும்.
*காய்களை நடுத்தர சைசில் நறுக்கவும்,புதினா கொத்தமல்லியை நறுக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் சாதம் வடிக்கும் அளவு நீர் ஊற்றவும்.அதில் 3 கிராம்பு+ஏலக்காய்+1 பட்டை துண்டு+சிறிது புதினா கொத்தமல்லி+எலுமிச்சைசாறு+சிறிது உப்பு சேர்த்து அரிசியை 3/4பாகம் வெந்ததும் வடித்து ஆறவைக்கவும்.
*வேறொரு பாத்திரத்தில் எண்ணெய்+3 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள மீதமுள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.
*வெங்காயம்+இஞ்சிபூண்டு விழுது+தக்காளி+பச்சை மிளகாய்+பிரியாணி மசாலாப் பொடி+மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*பின் கேரட்+பீன்ஸ் போட்டு நன்கு வதக்கவும்.பின் உப்பு+தயிர்+1 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
*காய் வெந்ததும் காளானை போட்டு மூடவும்.தன்ணீர் ஊற்ற வேண்டாம் காளான் நீர் விடும்.
*5 நிமிடம் கழித்து பட்டாணி+குடமிளகாய் போட்டு 5நிமிடம் வேகவிடவும்.
*காய்கள் அனைத்தும் வெந்ததும் இறக்கி ஆறவிடவும்.
*ஒரு பெரிய பாத்திரத்தில் 1/2 டேபிள்ஸ்பூன் நெய் தடவி கொஞ்சம் சாதம்+க்ரேவி என மாறி மாறி போடவும்.கடைசியாக சாதம் வரும் படி போட்டு 2 கலர்களையும் ஊற்றி மீதமிருக்கும் நெய்யும் ஊற்றவும்.
*190 டிகிரி முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம் வைக்கவும்.
*சிறிது நேரம் கழித்து சாதத்தை ஒன்றாக உடையாமல் கிளறிவிட்டு பரிமாறவும்.
பி.கு:
அவரவர் அவனுக்கேற்ப டைம் மாறலாம்.
21 பேர் ருசி பார்த்தவர்கள்:
கலக்கீட்டிங்க...மேனகா..சூப்பர்...
போட்டோவ பார்த்தாலே பசி எடுக்குது
எனக்கு மிகவும் பிடித்தது லேயர் முறைதான்
முயற்சித்து பார்க்கின்றேன் ...
நானும் இப்படிதான் ஹைதராபாத் பிரியாணி லேயர் முறையில் செய்வேன்.. ரொம்ப நல்லாயிருக்கு இந்த பிரியாணி
tasty tasty... ponga ... unga blog pakkame varakoodathu pola. ennamo nakkula thonuthu.
அக்கா .. அந்த கடைசி படத்தில் மிளகாயை அரைச்சு ஊத்தி இருந்தா அப்படியே தேசிய கொடி மாதிறி இருக்கும் !!!
கலர் கலரா பிரியாணி நல்லாயிருக்கு
உங்க உணவு வகைகள் அருமை எதனை முதலில் செய்வது என்பதுதான் பிரட்சனை....
இப்படி சமையல் குறிப்புகளையும் அதன் படங்களையும் வைத்தே எங்களை வதைப்பது நியயமா அம்மணி? நெட்டில் நிறை Recipe களையும் அதன் படங்களையும் காணமுடிகிறது ஆனால் உங்களின் குறிப்புகளும் அதன் படங்களும் மனதை கொள்ளை கொள்கிறது அம்மா.
நீங்கள் தான் "அன்னபூரனியோ"
நானும் செய்து பார்க்கிறதா முடிவு பண்ணியாச்சு.....
தங்கள் கருத்துக்கு நன்றி கீதா!!
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நவாஸுதீன்!!
செய்து பாருங்கள் ஜமால்,தங்கள் கருத்துக்கு நன்றி!!
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி பாயிஷா,உங்களின் ஹைதரபாத் பிரியாணி தான் அடுத்த முறை செய்ய போறேன்!!
அடிக்கடி நம்ம ப்ளாக் பக்கம் வாங்க மலர்,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!
// அக்கா .. அந்த கடைசி படத்தில் மிளகாயை அரைச்சு ஊத்தி இருந்தா அப்படியே தேசிய கொடி மாதிறி இருக்கும் !!!//
உங்க பின்னூட்டம் படித்த பிறகுதான் எனக்கும் அந்த ஐடியா வருது.க்ரீன் கலர் ஊத்திருக்கலாம்னு.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ராஜ்!!
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி இனியா!!
தினமும் ஒவ்வொன்னா செய்து சாப்பிடுங்க சந்ரு,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!
//இப்படி சமையல் குறிப்புகளையும் அதன் படங்களையும் வைத்தே எங்களை வதைப்பது நியயமா அம்மணி? நெட்டில் நிறை Recipe களையும் அதன் படங்களையும் காணமுடிகிறது ஆனால் உங்களின் குறிப்புகளும் அதன் படங்களும் மனதை கொள்ளை கொள்கிறது அம்மா.
நீங்கள் தான் "அன்னபூரனியோ"//உங்களின் பின்னுட்டம் எனக்கு மகிழ்ச்சி தருது.இன்னும் விதவிதமா குறிப்பு குடுக்கனும்னு தோனுது.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மாணிக்கம் சார்!!
செய்து பார்த்து சொல்லுங்க,தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சப்ராஸ் அபூ பக்கர்!!
மாமி ரொம்ப நல்லா இருந்தது..கொஞ்சம் காரமா போச்சு பரவாயில்ல இனி குறைச்சு செய்றேன்..நன்றி!!
ஹாய் அக்கா எனக்கு இந்த பிரியானி ரொம்ப பிடித்து இருக்கு. நான் வரும் வெள்ளி கன்வருக்கு செய்த்து கொடுப்பேன். அப்புரம் எப்படி இருந்துனி சொல்ரேன், நீங்க இப்படி படத்துடன் குரிப்பு கொடுத்தால் என்ன மாதிரி சமயல் கத்துகிரவங்களுக்கு மிகவும் சுலபமா இருக்கும். உங்களுக்கு என் நன்றி
செய்துப் பார்த்து பின்னுட்டம் அளித்ததற்க்கு நன்றி மாமி!!
செய்து பார்த்து சொல்லு சோனியா தங்கச்சி.கணவர்க்கு இப்பல்லாம் புதுசு புதுசா செய்து அசத்துற போலருக்கு..ம்ம் ..அசத்து சோனியா.
உங்களுடைய எல்லா குறிப்புகளுமே நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
Visit
http://libastrichy.blogspot.com/
நன்றி பழனி முருகன்!!
Post a Comment