Sunday, 3 January 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் அடை

தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1/2 கப்
ப்ரவுன் அரிசி - 1/2 கப்
தோல் பாசிப்பருப்பு,கொள்ளு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*ப்ரவுன் அரிசி+ பாசிப்பருப்பு+கொள்ளு குறைந்தது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.ஒட்ஸை சிறிது நேரம் ஊறவிடவும்

*அதனுடன் உப்பு+பெருங்காயத்தூள்+காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*இதனுடன் ஊறிய ஒட்ஸ்+தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்துக் கலக்கவும்.

*தோசைக்கல்லில் அடைகளாக சுட்டெடுக்கவும்.

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

அண்ணாமலையான் said...

நம்ம பக்கம் வரவேயில்ல?

Jaleela Kamal said...

நல்ல டயட்டுக்கு ஏற்ற அடை மேனகா

Jaleela Kamal said...

நல்ல டயட்டுக்கு ஏற்ற அடை மேனகா

ஸாதிகா said...

வித்தியாசமான அடைதான் மேனகா.

நட்புடன் ஜமால் said...

டயட் ஃபுட் - குட்

பித்தனின் வாக்கு said...

நல்ல அடை. நல்ல சுவையானது. நல்ல விளக்கம். ஆமாங்க ஏன் சைஸ் மட்டும் கோனல் மானலாக உள்ளது. வட்டமாக ஊத்த வரவில்லையா?

Anonymous said...

நல்ல ஐடியா..

கோதுமை மாவும், ஓட்ஸும், ஒரு முட்டையும், வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு அடை மாதிரி செய்யலாமா?

R.Gopi said...

மேனகா

இதுக்கு மேல ஓட்ஸ் வச்சு எதுவுமே பண்ண முடியாதுன்னு சொல்ற அளவுக்கு எல்லா சமையலும் பண்ணி இருக்கீங்க.... அடை பார்க்கும் போதே சாப்பிட சொல்கிறது... மொறுமொறுப்பாக, பொன்னிறத்தில்....

வாழ்த்துக்கள்.....

S.A. நவாஸுதீன் said...

சத்தானதும், டயட்டும் கூட.

Unknown said...

வித்தியாசமான ஆரோக்கியமான அடைதான்

Shama Nagarajan said...

nice try dear..happy new year

ஹேமா said...

அட...நல்லாருக்குமே.
செய்து பாக்கிறேன்.

SUFFIX said...

அட.அட.அடை!! ஓட்ஸ்ல விதவிதமா பதார்த்தங்கள் செய்றீங்க :)

Priya said...

நல்ல வித்தியாசமான அடை!
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

Padma said...

Very different and healthy adai.

சிங்கக்குட்டி said...

நானும் முயற்சி செய்து பாக்கிறேன்.

Priya Suresh said...

Adai puthusa irruku, best for diet..

01 09 10