தே.பொருட்கள்:
உதிராக வடித்த சாதம் - 2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
நீளவாக்கில் அரிந்த குடமிளகாய் - சிறிதளவு
பொடியாக அரிந்த எலும்பில்லாத சிக்கன் - 3/4 கப்
முட்டை - 2
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
வெள்ளை மிளகுத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பட்டர் - 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
*முட்டையை அடித்து ஊற்றி பொடிமாஸாக செய்யவும்.
*கடாயில் சிறிது பட்டர் சிக்கன்+சிறிது மிளகுத்தூள்+உப்பு சேர்த்து நன்கு வதக்கி வைக்கவும்.
*அதே கடாயில் பட்டர் ஊற்றி வெங்காயம்+பச்சை மிளகாய் வதக்கவும்.வெங்காயத்தை லேசாக வதக்கினால் போதும்.
*பின் குடமிளகாய்+பட்டாணி+சிக்கன்+மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.குடமிளகாய் லேசாக வதக்கவும்.
*பின் வடித்த சாதம்+உப்பு+முட்டை பொடிமாஸ் அனைத்தயும் நன்கு கிளறவும்.
*கடைசியாக சோயாசாஸ் ஊற்றி கிளறி இறக்கவும்.
பி.கு:
இந்த குறிப்பில் பச்சை பட்டாணி இல்லாததால் நான் சேர்க்கவில்லை.
11 பேர் ருசி பார்த்தவர்கள்:
ரொம்ப ஈசியாக இருக்கே...பச்ச பட்டாணி இல்லை என்றாலும் சுவையாக தான் இருக்கு மேனகா
Nice Recipe
yummy fried rice
//கடைசியாக சோயாசாஸ் ஊற்றி கிளறி இறக்கவும்.//
மிக குறைவான அளவு போதுமானது! பெரும்பாலும் யாரும் அதை வீட்டில் வாங்கி வைப்பதில்லை, அதனால் இல்லையென்றாலும் பரவாயில்லை என்ற வார்த்தையை சேர்த்து விடுங்கள், அதிகமான சோயா சாஸ், ருசியை கெடுத்துவிடும்!
Delicious fried rice, looks yummy..
ரொம்ப எளிதாகத்தான் இருக்கு ...
அட ரொம்ப ஈசியா இருக்கே
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
ஹாய் மேனு!
ஃப்ரைட் ரைஸ் பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. செய்யவும் எளிமையான குறிப்பாய் கொடுத்திருக்கீங்க.
பொங்கல் முடிந்ததும் ட்ரை பண்ணி பார்க்கனும்!
அனைத்து நண்பர்களுக்கும்
பொங்கல் வாழ்த்த்துக்கள்
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
Post a Comment