Thursday, 14 January 2010 | By: Menaga Sathia

மிளகு ரசம்

தே.பொருட்கள்:

கொள்ளு வேகவைத்த நீர் - 1கப்
புளி - 1பெரிய நெல்லிக்காயளவு
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

வறுத்து பொடிக்க:

தனியா - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது


செய்முறை :

*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடிக்கவும்.

*கொள்ளு வேக நீரில் புளியைக் 1 1/2 கப் அளவில் கரைத்து வைக்கவும்.

*பாத்திரத்தில் கரைத்த உப்பு+புளியை ஊற்றி கொதிக்க விடவும்.

*நன்கு கொதித்ததும் பொடித்த பொடியை தூவி 5 நிமிடம் கழித்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டவும்.

*கொத்தமல்லித்தழை தூவி பறிமாறவும்.


பி.கு:

உடல்வலி,ஜலதோஷம் இவற்றிற்கு ஏற்ற ரசம்.

7 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jaleela Kamal said...

super rasam menaga

Unknown said...

உடல் நலனுக்கு ஏற்ற நல்ல ரசம்

Arima Ilangkannan said...

உடல் நலனுக்கு ஏற்ற உணவு வகைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துக் கூறுவதும் ஒரு நல்ல சேவை தான்!
-அரிமா இளங்கண்ணன்

நட்புடன் ஜமால் said...

மிளகு ரசம் அடிக்கடி சாப்பிடுவது உண்டு.

முட்டை அல்லது கார(ப்)பொடி மீன் போட்டு

கொள்ளு போட்டு - இது புதுசு

நன்றிங்கோ.

Padma said...

Nice rasam. Perfect to have when having cold.

S.A. நவாஸுதீன் said...

நமக்கு மதியம் வீட்ல ரசம் இல்லேன்னா சாப்பிட்ட மாதிரியே இருக்காது. அதிலும் மிளகு ரசம் ரொம்ப பிடிக்கும்.

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. ஒரு கிளாஸ் தெளிவாக குடித்தால் நல்லா இருக்கும்(அட இரசத்தைதான் சொன்னங்க). அருமை. இதை கொள்ளு இரசம் என்று கூட சொல்லலாம். எனது பதிவில் கொள்ளு சுண்டல் , கொள்ளு இரசம் போட்டுள்ளேன். நன்றி,

01 09 10