தே.பொருட்கள்:
பழுத்த தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 15
பூண்டுப்பல் - 5
இஞ்சி - 1சிறுதுண்டு
புளி - 1சிறிய நெல்லிக்காயளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 6
கறிவேப்பிலை -சிறிது
செய்முறை :
*வெங்காயம்+தக்காளி+பூண்டு+இஞ்சி பொடியாக நறுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பூண்டு+இஞ்சி வதக்கவும்.
*வதங்கியதும் தக்காளி+புளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
*ஆறவைத்து தேவையான உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
6 பேர் ருசி பார்த்தவர்கள்:
ரொம்ப பிடிக்கும் எனக்கும். அருமை.
yummy chutney...nice one
எனக்கு பிடிக்காது என்றாலும் தங்ஸுக்கு நெம்ப பிடிக்கும் அவசியம் சொல்றேன்.
நல்ல பதிவு. எனக்கு மிகவும் பிடித்த சட்னி.
தோசைக்கு தொட்டு கொள்ள இந்த தக்காளி சட்னி சூப்பராக இருக்கும்
Good combo for Idly & Dosa.எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Post a Comment