Sunday, 24 January 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் சாண்ட்விச்


தே.பொருட்கள்:

டோஸ்ட் செய்த ப்ரெட் ஸ்லைஸ் - 4
ஒட்ஸ் - 1/4 கப்
முளைகட்டிய பச்சைப்பயிறு - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :

*ஒட்ஸை 10 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து நீரை வடித்துக் கொள்ளவும்.

*முளைப்பயிறை ஆவியில் வேகவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு அரிந்த வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய் வதக்கவும்.

*அதனுடன் மசித்த முளைப்பயிறு+மிளகாய்த்தூள்+குடமிளகாய்+ஊறவைத்த ஒட்ஸ் அனைத்தையும் சுருள வதக்கவும்.

*கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*டோஸ்ட் செய்த ப்ரெட் ஸ்லைஸ் நடுவே இக்கலவையை வைத்து பரிமாறவும்.
 

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

*இயற்கை ராஜி* said...

mmm..parthale pasikuthe:-)

cheena (சீனா) said...

அட நல்லாவே இருக்கும் போல - செய்யச் சொல்லிடுவோம்ல

நல்வாழ்த்துகள் மேனகா சத்யா

நட்புடன் ஜமால் said...

எளிமையாகவும் உடலுக்கு நன்மையாகவும் இருக்கும் போல

அண்ணாமலையான் said...

சத்தான உணவு.. வாழ்த்துகள்...

Priya Suresh said...

Superb sandwich...kalakal Menaga..

Pavithra Elangovan said...

Wow thats wonderful and healthy idea of using oats in sandwich..thanks for sharing.

Unknown said...

மேனகா உங்களின் ஓட்ஸ் குறிப்புகள் எல்லாமே மிகவும் அருமை. எங்க அப்பாவுக்கு உங்களின் ஓட்ஸ் குறிப்புகளை பார்த்துதான் செய்து கொடுக்கிறேன் ..நன்றி மேனகா

S.A. நவாஸுதீன் said...

ஆகா, ரொம்ப சிம்பிளா ஒரு அருமையான, சத்தான ப்ரேக்ஃபாஸ்ட்.

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப ஹெல்தியான டிஸ் மேனகா

suvaiyaana suvai said...

super sandwich!!!

Menaga Sathia said...

நன்றி இயற்கை!!

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சீனா ஐயா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி அண்ணாமலையான்!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி பவித்ரா!!

Menaga Sathia said...

உங்கள் தந்தைக்கு என் குறிப்புகளை பார்த்து செய்து தருவதில் மிக்க மகிழ்ச்சி பாயிஸா.நன்றி தங்கள் கருத்துக்கு...

நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி சுஸ்ரீ!!

M.S.R. கோபிநாத் said...

நல்ல ஆரோக்கியமான உணவு. நன்றி

pudugaithendral said...

super, thanks

Kanchana Radhakrishnan said...

super receipe

பனித்துளி சங்கர் said...

ஆஹா நீங்கள் இணைத்துள்ள படங்களைப் பார்க்கும்பொழுது இப்பவே வாங்கி சாப்பிடணும்போல இருக்கு . உங்களின் பதிவுகள் அனைத்தும் அற்புதம் .

Menaga Sathia said...

நன்றி கோபி ப்ரதர்!!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புதுகைத் தென்றல்!!

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

நன்றி சங்கர்!!சீக்கிரம் செய்து சாப்பிடுங்க...

kavi.s said...

ரொம்ப நல்லாயிருக்கு பார்க்கவே...
டயட்ல‌ பயங்கரமா இறங்கிட்டீங்க போலயிருக்கு:) ஊரிலிருந்து வந்தாச்சா? அனவரும் நலமா?

Menaga Sathia said...

எல்லோரும் நலம் கவி.நீங்களும் ஷாமும் நலமா?ஊரிலிருந்து வந்து 1 வார்ம் ஆகுதுப்பா.நன்றி கவி!!

Mahi said...

மேனகா, உங்க ப்ளாகிற்கு நான் அடிக்கடி வருவேன்..பின்னூட்டம் தான் தந்ததில்லை. :)
அழகான ப்ளாக்..எக்கச்சக்கமான குறிப்புகள்! கலக்குங்க!

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி மகி!!

Sangeetha M said...

wow...very useful n yummy diet recipes..thanx for sharing...really very useful to people like me...happy to follow u.

01 09 10