Tuesday, 26 January 2010 | By: Menaga Sathia

கொள்ளு சுண்டல்/ Horsegram Sundal

தே.பொருட்கள்:

கொள்ளு - 1 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 2
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*கொள்ளினை 4 அல்லது 5 மணிநேரம் ஊறவைத்து நிரினை வடிகட்டவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொள்ளு+உப்பு+சிறிது நீர் தெளித்து தட்டு போட்டு மூடி வேகவிடவும்.

*அதிக நீர் ஊற்றவேண்டாம்.இடையிடையே கிளறி விடவும்.மூடி போட்டு வேகவிடுவதால் ஆவிலயே சீக்கிரம் வெந்துவிடும்.

*தேங்காய்த்துறுவல்+கா.மிளகாயினை நீர்விடாமல் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

*கொள்ளு வெந்ததும் அரைத்த தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி பறிமாறவும்.

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya Suresh said...

Superb sundal..saapite irrukalam bayam illama:)

S.A. நவாஸுதீன் said...

ஆகா!!

ஒன் மோர் கொள்ளு ஸ்பெசல். நன்றி சகோதரி.

சாருஸ்ரீராஜ் said...

very nice diet recipie

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி சகோ!!

நன்றி சாரு அக்கா!!

suvaiyaana suvai said...

kollu sundal super and healthy!!
kollu colour looks different:)

UmapriyaSudhakar said...

hai, nalla sathaana receipe menaka. 3 months la niraiya post pottutinga poola. onnu onnaa open panni pakkanum. romba aarvama irukku.

Unknown said...

ஆரோக்கியமான கொள்ளு சுண்டல்..

Padma said...

Very healthy sundal. Can have as snack or as a side dish.

நட்புடன் ஜமால் said...

மீண்டும் கொள்ளு --- ஹூம் நன்று.

ரோஸ்விக் said...

இளைச்சவனுக்கு எள்ளு...
கொழுத்தவனுக்கு கொள்ளு - என்ற பழமொழி உண்டு.
கொள்ளு - கொழுப்பை அகற்றுமாம். நல்லது தானே...

பகிர்விற்கு நன்றி.

http://thisaikaati.blogspot.com

R.Gopi said...

மேனகா

இது குதிரை சமாசாரம் ஆச்சே... நம்மளும் சாப்பிடலாமா??

இல்லைன்னு சொல்லாம, கொள்ளு ரசம் சாப்பிட்ட ஞாபகம் இருக்கு...

ஸோ, கொள்ளு சுண்டல் கூட ஓகேதான்னு நெனக்கறேன்...

புலவன் புலிகேசி said...

செஞ்சி பாத்துருவோம்...

Ms.Chitchat said...

You have a nice space with good and easy recipes. Enjoyed kollu sundal. Healthy preparation. Following u.

Chitchat
http://chitchatcrossroads.blogspot.com/

Kanchana Radhakrishnan said...

nice receipe

Unknown said...

Hi Menaga ,

Thanks to give this recipie.....nallaa irukku...

Shama Nagarajan said...

healthy sundal..nice entry

Menaga Sathia said...

நன்றி சுஸ்ரீ!!

ஊரிலிருந்து எப்போ வந்தீங்க உமா?மகன் நலமா?நேரமிருக்கும் போது அனைத்தையும் பாருங்க.நன்றி உமா!!

Menaga Sathia said...

நன்றி பாயிஷா!!

நன்றி பத்மா!!ஸ்நாக்ஸாக பயன்படுத்தலாம்....

Menaga Sathia said...

நன்றி சகோ!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ரோஸ்விக்!!

Menaga Sathia said...

//மேனகா

இது குதிரை சமாசாரம் ஆச்சே... நம்மளும் சாப்பிடலாமா??//ஹி...ஹி...நாமளும் தாராளமா சாப்பிடலாம்.கொள்ளு சாப்பிட்டதால் குதிரை எவ்வளவு அழகா இருக்கு பாருங்க.செய்து சாப்பிடுங்க.செட்டிநாட்டுக்காரங்க தான் கொள்ளை அதிகம் பயன்படுத்துவாங்க.அதே சமயம் இது சூடு என்பதால் வாரத்தில் ஒருநாள் சேர்த்துக் கொள்ளலாம்.நன்றி கோபி!!

Menaga Sathia said...

செய்து பார்த்து சொல்லுங்க.நன்றி புலவரே!!

பிந்தொடர்வதற்க்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி Chitchat!!

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

நன்றி கினோ!!

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!

பித்தனின் வாக்கு said...

மன்னிச்சுக்குங்க மேனகா, வருட இறுதிக்கணக்கு என்பதால் பதிவுகளை படித்து பின்னூட்டம் இடமுடியவில்லை. கொள்ளு சுண்டல் சூப்பர். இதுல சக்கரை போட்டு சாப்பிடலாம் என்று ஒரு பின்னூட்டம் இட்டதாக ஞாபகம். அது உங்கள் பதிவு இல்லையா?.

சரி அந்த தட்டு சுண்டல் பூராவும் எனக்கே எனக்கா?

Jaleela Kamal said...

கொள்ளு சுண்டல் ரொம்ப அருமையாக இருக்கு

Menaga Sathia said...

மன்னிப்பெல்லாம் எதுக்கு...

//இதுல சக்கரை போட்டு சாப்பிடலாம் என்று ஒரு பின்னூட்டம் இட்டதாக ஞாபகம். அது உங்கள் பதிவு இல்லையா?. // இல்லை..

//சரி அந்த தட்டு சுண்டல் பூராவும் எனக்கே எனக்கா?//ஆமாம் ஆமாம் உங்களுக்குதான் எடுத்துக்குங்க....
நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி ஜலிலா அக்கா..

prabhadamu said...

நான் படிக்கும் பிளாக் உங்கலுடையதையும் விரும்பி படிக்கிரேன்.

Menaga Sathia said...

நன்றி ப்ரபா!!

01 09 10