தே.பொருட்கள்:
பச்சைபயிறு - 1 கப்
பார்லி குருணை - 3/4 கப்
அரிசி - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
செய்முறை :
*பார்லி + பச்சை பயிறு,அரிசி இவைகளை தனித்தனியாக குறைந்தது 5 மணிநேரம் ஊறவைக்கவும்.
*ஊறியதும் காய்ந்த மிளகாய்+இஞ்சி+சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
*அடைமாவு பதத்திற்க்கு உப்பு சேர்த்து கரைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும்.
*கார சட்னியுடன் சாப்பிட செம ருசி!!
13 பேர் ருசி பார்த்தவர்கள்:
Thank you for this recipe. Good one!
வித்தியாசமான பெசரட்
good one
நிறைய வித்தியாசமாக ரெசிப்பி கொடுக்கறீங்க மேனு,பாராட்டுக்கள்.
நல்ல பதிவு அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி சித்ரா!!
நன்றி ஸாதிகா அக்கா!!
நன்றி சுகந்தி!!
பாராட்டுக்கும்,கருத்திற்க்கும் நன்றி ஆசியா அக்கா!!
வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சசிகுமார்!!
பெசரட் - இதுவரை கேள்வி படலை
நன்றி மேனகா பார்லி பெசரெட்டு சூப்பர்ப்...னான் பார்லியெல்லாம் வாங்கவே மாட்டேன்...இனிமே வாங்கி யூஸ் செய்து பார்க்கிரேன்.உங்களோட ஓட்சு ஐடெம்ச்தான் நான் அடிக்கடி செய்கிரேன்...நேற்று இரவும் ஓட்சு ஊத்தப்பம்தான் செய்தேன்.இப்படி இ=ஒரு ஐடியா கொடுப்பதர்கு நன்றி.
பெசரட் ஆந்திராவின் பிரபலமான உணவு.நன்றி சகோ!!
ஒட்ஸ் ஊத்தாப்பம் செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்க்கு நன்றி கினோ!!.பார்லியும் வாங்கி சமைத்து பாருங்கள்...
மிக அருமை மேனகா ஓட்ஸ் அன்ட் பார்லி க்வீன் என்று பட்டம் கொடுக்கிறேன் கார்ன் ஃப்ளேக்ஸில் ஏதும் ஸ்நாக்ஸ் இருந்தா போடுங்க மேனகா
good recipe
தங்கள் அன்பான பட்டத்துக்கு மிக்க மகிழ்ச்சி+நன்றி தேனக்கா!! கார்ன் ப்ளேக்ஸ் குறிப்பு நிச்சயம் கொடுக்கிறேன்.
நன்றி காஞ்சனா!!
Post a Comment