Thursday, 18 March 2010 | By: Menaga Sathia

வெஜ் குருமா/Veg Kurma

தே.பொருட்கள்:

வேக வைத்த காய்கறிகள்(பீன்ஸ்,கேரட்,பட்டாணி)- 3 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1 பெரியது
பொடியாக அரிந்த தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 10
புதினா - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
 
அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பாதாம் பருப்பு - 8
 
செய்முறை :

*காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.அவரவர்க்கு தேவையான காய்களையும் சேர்த்துக் கொள்ளவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை மைய அரைக்கவும்.பச்சை மிளகாயையும் அரைத்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் காய்கறி வேக வைத்த நீரோடு காய்களை சேர்க்கவும்.தேவைப்பட்டால் தேவையானளவு நீரும் உப்பும் சேர்க்கவும்.

*1 கொதி வந்ததும் அரைத்த விழுதை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு புதினா தழை தூவி இறக்கவும்.
 
பி.கு:

அவரவர் காரத்துக்கேற்ப பச்சை மிளகாயை சேர்க்கவும்.

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

Nithu Bala said...

Roomba nalla irukku recipe..nanum veg kurma pannuven ana pudina serthathu illai..appuram cashews than use panni irukken badam panninathu illai..kandippa oru nal panni parkaren..

Chitra said...

பாதாம் பருப்பு சேர்த்து குருமா செய்ததில்லை. ட்ரை பண்ணனும். நன்றி.

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு , அவுங்க இரண்டு பேரும் சொன்ன மாதிரி புதினா, பாதாம் சேர்த்தது இல்லை

கோபிநாத் said...

வாவ். இடியாப்பம்,ஆப்பத்திற்கு நல்ல காம்பினேஷன். நன்றி.

அண்ணாமலையான் said...

நல்லா டேஸ்ட்டா இருக்கு

நட்புடன் ஜமால் said...

ஹோட்டல்களில் சப்பாத்திக்கு கொடுப்பாங்க, நம்ம வீட்ல இப்படி செய்ய வராதான்னு ஏங்கிய காலங்கள் உண்டு. மிக்க நன்றி.

Shama Nagarajan said...

delicious one..i too make this in a same way

Kanchana Radhakrishnan said...

பாதாம் பருப்பு சேர்த்து குருமா செய்ததில்லை. நல்லா இருக்கு.

kavisiva said...

சப்பாத்திக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். நீங்க போஸ்ட் பண்ணின உடனே செய்தே விட்டேன். ரொம்ப டேஸ்டியா இருக்குது. நானும் புதினா பாதாம் சேர்த்து செய்ததில்லை. இது ரொம்ப புடிச்சிருக்கு. தேங்க்ஸ் மேனு

வேலன். said...

நன்றாக இருக்கு சகோதரி...வாழ்க வளமுடன்:.வேலன்.

Pavithra said...

badam paruppu vechu naanum try panninathu illa . cashew a vida romba healthy try pannanum .

Thanks for sharing it with us sashi

thenammailakshmanan said...

புதினா சேர்த்த வித்யாசமான குருமா அருமை மேனகா

Mrs.Menagasathia said...

செய்து பார்த்து சொல்லுங்கள்.முந்திரியை விட பாதாம் மிக நல்லது.நான் அதை தான் ரொம்ப யூஸ் பண்ணுவேன்.நன்றி நிதுபாலா!!

செய்து பாருங்கள் .சுவை ரொம்ப நல்லாயிருக்கும்.நன்றி சித்ரா!!

Mrs.Menagasathia said...

புதினா சேர்ப்பதால் நல்ல மணமாக இருக்கும்.செய்து பாருங்கள்.நன்றி சாரு அக்கா!!

ஆமாம் சகோ நீங்கள் சொல்வதுபோல் 2க்கும் நல்ல காம்பினேஷன் தான்.நன்றி சகோ!!

Mrs.Menagasathia said...

நன்றி சகோ!!

இந்த மாதிரி செய்வதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.நன்றி ஜமால் அண்ணா!!

Mrs.Menagasathia said...

நன்றி ஷாமா!!

நன்றி காஞ்சனா!!

ஆஹா அதுக்குள்ள செய்துட்டீங்களா.ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.செய்து பார்த்து உடனடி பின்னுட்டம் அளித்ததில் மிக்க நன்றி கவிசிவா!!

Mrs.Menagasathia said...

நன்றி சகோ!!

பாதாம் சேர்த்து செய்து பாருங்கள்.சுவை ரொம்ப நல்லாயிருக்கும்.நன்றி பவித்ரா!!

நன்றி தேனக்கா!!

சே.குமார் said...

பாதாம் பருப்பு சேர்த்து குருமா செய்ததில்லை. ட்ரை பண்ணனும். நன்றி.

அது சரி said...

வெரி நைஸ்...இந்த வீக் என்ட் ட்ரை செஞ்சி பார்க்கிறேன்...Thank you.

ஸாதிகா said...

நல்ல ரிச் குருமாதான்.

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. கூடவே ரெண்டு சப்பாத்தி படமும் போட்டுருந்தா, சாப்பாடை படத்தைப் பார்த்தே முடித்துருப்பேன். மிக அருமை. நன்றி.
இன்னிக்கு என் பதிவை மிஸ் பண்ணிவிடாதீர்கள்.

சசிகுமார் said...

சூப்பர் குருமாங்க உடனே வீட்ல சொல்ல வேண்டியது தான், நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

SathyaSridhar said...

Vegetable kuruma romba nalla irukku paarkavae romba rusiyaka irukku,, badam poetavae antha rich kedaichidum gravyum taste aga irukkum,,, romba nandringa arumayana kuruma seithu kanbichathukku,,,

Mrs.Menagasathia said...

டிரை செய்து பாருங்கள்.நன்றி குமார்!!

செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்ரி அதுசரி!!

Mrs.Menagasathia said...

நன்றி ஸாதிகா அக்கா!!

உங்க பதிவை படிக்க வருகிறேன்.நன்றி சுதாண்ணா!!

Mrs.Menagasathia said...

செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி சசி!!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்யா!!

Ms.Chitchat said...

Kurma looks super a irukku. A new version and loved the ingredients.

Mrs.Menagasathia said...

நன்றி சிட்சாட்!!

Ananthi said...

Enakku pidichcha dish.. seithu paarkiraen.. :)

01 09 10