Monday, 15 March 2010 | By: Menaga Sathia

பேடா

தே.பொருட்கள்:

பனீர் தயாரிக்க
பால் - 4 கப்
எலுமிச்சை சாறு - 1/4 கப்
 
செய்முறை :

*எலுமிச்சை சாறுடன் சிறிது வெந்நீர் கலந்து வைக்கவும்.

*பாலை நன்கு காய்ச்சி எலுமிச்சை சாறு சேர்க்கவும்.பால் திரிந்திருக்கும் அதை மெல்லிய துணியின் மூலம் வடிகட்டி குளிர்ந்த நீரில் 2,3 தடவை நன்கு அலசி தொங்கவிடவும் (எலுமிச்சையின் வாசனை போவதற்க்காக) அல்லது அந்த துணியின் மேல் கணமான பாத்திரம் வைக்கவும்.6 மணிநேரம் ஆனதும் தண்ணீர் நன்கு வடிந்திருக்கும் பனீரை பயன்படுத்தவும்.

*பனீர் வடிகட்டிய நீருக்கு வே வாட்டர் என்று பெயர்.அதை 4 நாட்கள் வரை வைத்திருந்து அடுத்தமுறை பனீர் செய்ய பயன்படுத்தலாம்.

பேடா செய்ய:

பனீர் - 3/4 கப்
பால் - 3/4 கப்
பால் பவுடர் - 3/4 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
பாதாம்(அ )பிஸ்தா துண்டுகள் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*நான் ஸ்டிக் கடாயில் நெய் விட்டு உருக்கியதும் பால்+பால் பவுடர்+பனீர் அனைத்தையும் ஒன்றாக கலந்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

*கெட்டியில்லாமல் நன்கு மிருதுவாக கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்க்கு வரும் போது இறக்கி வேறொரு பாத்திரத்தில் வைக்கவும்.

*இளஞ்சூடாக இருக்கும் போது சர்க்கரை+ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு மிருதுவக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

*ஒவ்வொரு உருண்டையும் நடுவில் லேசாக அழுத்தி பிஸ்தா(நான் பாதாம் துண்டுகள் வைத்துள்ளேன்)துண்டுகள் வைத்து அலங்கரிக்கவும்.

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

thenammailakshmanan said...

Superb da Menaka ..
parthavudaney France vanthuralamanu ninaichen ma...!!

Pavithra said...

superaa irukku .. easyaavum irukku ... will give it a try ..

Nithu Bala said...

Roombha azhaga irukku parka..do send me some..

ஸாதிகா said...

அழகான தூத் பேடா நல்லா வந்திருக்கு மேனகா!

Chitra said...

ரொம்ப ஈசியா இருக்கிற மாதிரி ரெசிபி கொடுத்து இருக்கிறீங்க. செய்து பாக்கணும். நன்றி.

இய‌ற்கை said...

mm..tasty..taasty:-)

asiya omar said...

அருமையான ரெசிப்பி.பால் திரியவைத்து கட்டி தொங்கவும் விடலாம்,இது தவிர திரிந்த பாலை துணியில் கட்டி மேலே கனமான தோசை தவாவை வைத்தால்,அமுங்கி தண்ணீர் வெளியே வந்துவிடும்.

R.Gopi said...

பேடா பார்ப்பதற்கு நன்றாக உள்ளது..

சுவைப்பதற்கும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

சசிகுமார் said...

நல்ல பதிவு ஆனா பேரு மட்டும் பேடா க்கு பதிலா போடா ன்னு ஒரு தமிழ் பேர வச்சிருக்கலாம் (சும்மா ஜாலிக்காக) உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Jaleela said...

உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்/

http://allinalljaleela.blogspot.com/2010/03/blog-post_16.html

ரொம்ப சூப்பரான மில்க் பேடா, இது செய்ய ரொம்ப பொறுமை வேண்டும், வீடு மாறியாச்சா எப்படி இருக்கு புது வீடு.

பித்தனின் வாக்கு said...

ஆகா மேனகா படிக்கும் போதே ரொம்ப ஆசையாயிருக்கு. இது எனக்கு மிகவும் பிடிக்கும். அதுனால அதை அப்படியே பார்சல் பிளீஸ்.
இந்த பதிவைக் குறித்து வைத்துக் கொள்கின்றேன். பின்னாளில் செய்து பார்க்கின்றேன். மிக்க நன்றி. நல்ல பதிவு.

Ms.Chitchat said...

Super peda. Paarkavum, suvaikkavum romba nalla irukku. Simple yet tasty recipe. Thanks for sharing.

kino said...

Peda superba irukku Menaga.neenga paattukittu recipieyaa kodukkareenga...idhallam eppo seythu paarppadhunu theriyalai....ok time kidaikkumpothu seyyuren...thanks menaga.

Mrs.Menagasathia said...

ப்ரான்ஸ்க்கு வாங்க தேனக்கா.செய்து தருகிறேன்.நன்றி அக்கா!!


செய்து பாருங்கள்.ரொம்ப ஈஸிதான்.நன்றி பவித்ரா!!

Mrs.Menagasathia said...

உங்களுக்கு இல்லாததா,உடனே பார்சல் அனுப்புகிறேன்.நன்றி நிது!!

நன்றி ஸாதிகா அக்கா!!

Mrs.Menagasathia said...

செய்து பாருங்கள் சித்ரா,நன்றி தங்கள் கருத்துக்கு...

நன்றி இயற்கை!!

தங்கள் கூடுதல் டிப்ஸ்க்கும்,கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!!

Mrs.Menagasathia said...

சுவையிலும் ரொம்ப சூப்பராயிருக்கும்.நன்றி கோபி!!

//நல்ல பதிவு ஆனா பேரு மட்டும் பேடா க்கு பதிலா போடா ன்னு ஒரு தமிழ் பேர வச்சிருக்கலாம் (சும்மா ஜாலிக்காக) // ஹி..ஹி.. இந்த பேரும் நல்லாதானிருக்கு.நன்றி சசி!!

Mrs.Menagasathia said...

புது வீடு பரவாயில்லை.தொடர் பதிவிற்க்கு அழைத்ததற்க்கு.,கருத்துக்கும் நன்றி அக்கா.விரைவில் எழுதுகிறேன்.


பார்சல் அனுப்பியாச்சு,கிடைத்ததா உங்களுக்கு...பின்னாளில் நேரமிருக்கும்போது செய்து பாருங்கள்.நன்றி சகோ!!

Mrs.Menagasathia said...

நன்றி சிட்சாட்!!

ஒவ்வொன்றாக நேரமிருக்கும் போது செய்து பாருங்கள்.நன்றி கினோ!!

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு மேனகா

Mrs.Menagasathia said...

நன்றி சாரு அக்கா!!

Anu said...

First time here.. Peda romba supera irukku parka and easy a eruku.. will try sometime..

Mrs.Menagasathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அனு!!

01 09 10